பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ. 62,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு முன்முயற்சிகளை அக்டோபர் 4 அன்று தொடங்கி வைக்கிறார்
October 03rd, 03:54 pm
இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு முன்முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 4 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கிவைப்பார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது தேசிய திறன் பட்டமளிப்பு விழாவில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த 46 பேர் பாராட்டப்படுவார்கள்.செப்டம்பர் 12 அன்று புதுதில்லியில் ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
September 11th, 04:57 pm
செப்டம்பர் 12-ம் தேதி மாலை 4:30 மணிக்கு புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்வார். கையெழுத்துப் பிரதிகளின் டிஜிட்டல்மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் பொது அணுகலை விரைவுப்படுத்துவதற்கான ஞான பாரதம் டிஜிட்டல் தளத்தையும் பிரதமர் அறிமுகப்படுத்திவைத்து நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 11:15 am
பரம் ஷ்ரத்தேய ஆச்சார்யா ஸ்ரீ பிரக்யா சாகர் மகாராஜ் ஜி அவர்களே, ஷ்ரவணபெலகோலா சுவாமி சாருகீர்த்தி ஜியின் தலைவர் அவர்களே, என் சக நண்பர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, என் சக நாடாளுமன்ற உறுப்பினர் திரு நவீன் ஜெயின் அவர்களே, பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையின் தலைவர் திரு பிரியங்க் ஜெயின் அவர்களே, செயலாளர் திருமிகு மம்தா ஜெயின் அவர்களே, அறங்காவலர் திரு பியூஷ் ஜெயின் அவர்களேஇதர பிரமுகர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, தாய்மார்களே, ஜெய் ஜினேந்திரா!ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 28th, 11:01 am
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (28.06.2025) நடைபெற்ற ஆச்சார்யா வித்யானந்த் மஹாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாடு காண்கிறது என்றும், ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவின் புனிதத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். மதிப்பிற்குரிய ஆச்சார்யாவின் அழியாத உத்வேகத்தால் நிறைந்த இந்த நிகழ்வு, ஒரு அசாதாரணமான மற்றும் எழுச்சியூட்டும் சூழலை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நாளை (ஜூன் 28) புதுதில்லியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
June 27th, 05:06 pm
ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை (ஜூன் 28) காலை 11 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.ஸ்ரீ நாராயண குருவுக்கும் காந்திஜிக்கும் இடையிலான உரையாடல் பற்றிய நூற்றாண்டு விழா கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 24th, 11:30 am
பிரம்மரிஷி சுவாமி சச்சிதானந்தா அவர்களே, ஸ்ரீமத் ஸ்வாமி சுபங்கா-நந்தா அவர்களே சுவாமி சாரதானந்தா அவர்களே, அனைத்து மரியாதைக்குரிய துறவிகளே, மத்திய அரசில் எனது நண்பர் திரு ஜார்ஜ் குரியன் அவர்களே, பாராளுமன்றத்தில் எனது நண்பர் திரு அடூர் பிரகாஷ் அவர்களே, இதர மூத்த பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே.ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி இருவருக்கிடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 24th, 11:00 am
இந்தியாவின் மகத்தான ஆன்மிக மற்றும் அறநெறித் தலைவர்களான ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் குறித்து புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் அனைவருக்கும் தமது மரியாதை கலந்த வாழ்த்துகளை தெரிவித்ததோடு இன்று இந்த அரங்கம் முன்னெப்போதும் இல்லாத தேசத்தின் வரலாற்றுத் தருணத்தைக் காண்கிறது என்றார். நமது சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய திசையைக் காட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சுதந்திரத்தின் நோக்கங்களுக்கு வலுவான அர்த்தத்தையும், சுதந்திர இந்தியாவின் கனவையும் எடுத்துரைப்பதாக இருந்தது என்று அவர் கூறினார். “நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ நாராயண குருவுக்கும், மகாத்மா காந்திக்கும் இடையேயான சந்திப்பு இன்றும் ஊக்கமளிப்பதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது. மேலும் சமூக நல்லிணக்கத்திற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் கூட்டான இலக்குகளுக்கும் ஊக்கமளிக்கும் சக்திமிக்க ஆதாரமாக திகழ்கிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஸ்ரீ நாராயண குருவின் பாதங்களில் பணிந்து மரியாதை செலுத்திய அவர் மகாத்மா காந்திக்குப் புகழாரம் சூட்டினார்.ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் நாளை (ஜூன் 24) தொடங்கி வைக்கிறார்
June 23rd, 05:24 pm
இந்தியாவின் சிறந்த ஆன்மீக தலைவரான ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூன் 24, 2025) காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றுகின்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் 1925 மார்ச் 12 அன்று சிவகிரி மடத்தில் மகாத்மா காந்தியின் பயணத்தின் போது நடந்தது. வைக்கம் சத்தியாக்கிரகம், மத மாற்றங்கள், அகிம்சை, தீண்டாமை ஒழிப்பு, முக்தி அடைதல், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விஷயங்களில் இந்த உரையாடல் நடந்தது.17-வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 21st, 11:30 am
எனது அமைச்சரவை நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு. சக்திகாந்த தாஸ் அவர்களே, டாக்டர் சோமநாதன் அவர்களே, இதர மூத்த அதிகாரிகளே, நாடு முழுவதிலும் உள்ள குடிமைப் பணிகளைச் சேர்ந்த நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!17-வது குடிமைப் பணி தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
April 21st, 11:00 am
17-வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், குடிமைப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குப் பிரதமர் விருதுகளையும் வழங்கினார். குடிமைப் பணித் தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு, சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த தினம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 1947-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி சர்தார் படேல் குடிமைப் பணி அதிகாரிகளை 'இந்தியாவின் எஃகுக் கட்டமைப்பு' என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, ஒழுக்கம், நேர்மை, ஜனநாயக மாண்புகள் ஆகிய பண்புகளுடன் தேசத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றும் அதிகாரத்துவம் என்ற படேலின் தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டினார். வளர்ச்சியைடந்த இந்தியாவாக உருவெடுப்பதற்கான உறுதிப்பாட்டின் பின்னணியில் சர்தார் படேலின் கொள்கைகள் அமைந்துள்ளதாக திரு மோடி புகழாரம் சூட்டினார்.ஏப்ரல் 21 அன்று குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்
April 19th, 01:16 pm
17-வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 21 அன்று காலை 11 மணியளவில் புதுதில்லி விஞ்ஞான் பவனில் குடிமைப் பணி அதிகாரிகளிடையே உரையாற்றுகிறார். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளையும் அவர் வழங்குவார்.நவ்கார் மகாமந்திர தினத் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
April 09th, 08:15 am
மனம் சாந்தி பெற்றது, மனம் நிலைபெற்றது, அமைதி மட்டுமே, ஒரு அற்புதமான உணர்வு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது. நவ்கார் மகாமந்திரம் இன்னும் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நவ்கார் மஹாமந்திரத்தின் ஆன்மீக சக்தியை நான் இன்னும் எனக்குள் உணர்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் இதேபோன்ற வெகுஜன மந்திர உச்சாடனத்தை நான் பார்த்தேன். இன்று அதே உணர்வு, அதே ஆழத்துடன் எனக்கு ஏற்பட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான புண்ணிய ஆத்மாக்கள் ஒரே உணர்வோடு, வார்த்தைகள் ஒன்றாகப் பேசப்பட்டு, ஒன்றாக எழுப்பப்பட்ட சக்தி உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும்.நவ்கார் மகாமந்திர தினத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
April 09th, 07:47 am
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நவ்கார் மகாமந்திர தினத்தைத் தொடங்கி வைத்து அதில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நவ்கார் மந்திரத்தின் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை எடுத்துரைத்து, மனதில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டுவரும் அதன் திறனை எடுத்துரைத்தார். வார்த்தைகள், எண்ணங்கள் ஆகியவற்றைக் கடந்து, ஆழ்மனதிலும் பிரக்ஞையிலும் ஆழமாக எதிரொலிக்கும் அசாதாரண அமைதி உணர்வு குறித்து அவர் குறிப்பிட்டார். நவ்கார் மந்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, அதன் புனித ஸ்லோகங்களைக் கூறியதுடன், இந்த மந்திரம் ஒன்றுபட்ட ஆற்றல், நிலைத்தன்மை, சமநிலை, சிறந்த உணர்வு, உள் ஒளி ஆகியவற்றை உள்ளடக்கியது என்று விவரித்தார். தமது சொந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், நவ்கார் மந்திரத்தின் ஆன்மீக சக்தியை அவர் எவ்வாறு தொடர்ந்து உணர்கிறார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் இதேபோன்ற கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வில் தான் பங்கேற்று இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். அது அவர் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள லட்சக்கணக்கான நல்லொழுக்கமுள்ள ஆத்மாக்கள் ஒன்றுபட்ட உணர்வுடன் ஒன்றிணைந்த இணையற்ற அனுபவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். கூட்டு ஆற்றல், ஒருங்கிணைந்த சொற்கள் ஆகியவை குறித்தும் அவர் குறிப்பிட்டார். இது உண்மையிலேயே அசாதாரணமானது எனவும் ஈடு இணையில்லாதது என்றும் அவர் விவரித்தார்.புதுதில்லியில் ஏப்ரல் 9 அன்று நவ்கார் மகாமந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
April 07th, 05:23 pm
புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஏப்ரல் 9 அன்று காலை 8 மணியளவில் நவ்கார் மகாமந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.புது தில்லியில் அகில பாரத மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை
February 21st, 05:00 pm
மதிப்பிற்குரிய மூத்த தலைவர் திரு சரத் பவார் ஜி, மகாராஷ்டிராவின் முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஜி, அகில பாரதி மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தலைவர் டாக்டர். தாரா பவால்கர் ஜி, முன்னாள் தலைவர் டாக்டர். ரவீந்திர ஷோபனே ஜி, அனைத்து மதிப்பிற்குரிய உறுப்பினர்கள், மராத்தி மொழி அறிஞர்கள் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளே,98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 21st, 04:30 pm
புதுதில்லி விஞ்ஞான் பவனில் 98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மராத்தி மொழியின் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு அனைத்து மராத்தியர்களையும் வரவேற்றார். அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாடு ஒரு மொழி அல்லது பிராந்தியத்துடன் நின்றுவிடவில்லை என்று கூறிய அவர், இந்த மாநாடு சுதந்திரப் போராட்டத்தின் சாரத்தையும், மகாராஷ்டிரா மற்றும் தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் உள்ளடக்கியது என்று கூறினார்.I consider industry, and also the private sector of India, as a powerful medium to build a Viksit Bharat: PM Modi at CII Conference
July 30th, 03:44 pm
Prime Minister Narendra Modi attended the CII Post-Budget Conference in Delhi, emphasizing the government's commitment to economic reforms and inclusive growth. The PM highlighted various budget provisions aimed at fostering investment, boosting infrastructure, and supporting startups. He underscored the importance of a self-reliant India and the role of industry in achieving this vision, encouraging collaboration between the government and private sector to drive economic progress.இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மத்திய பட்ஜெட் குறித்த மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரை
July 30th, 01:44 pm
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வளர்ந்த பாரதத்தை நோக்கிய பயணம்: மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய 2024-25 மாநாடு தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். வளர்ச்சிக்கான அரசின் பரந்த பார்வை மற்றும் தொழில்துறையின் பங்கு ஆகியவற்றை முன்வைப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறை, அரசு, தூதரக பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள் ஆகியவற்றிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொண்டனர், உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு சிஐஐ மையங்களிலிருந்தும் பலர் இணைந்தனர்.இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 30 அன்று நடைபெறவுள்ள பட்ஜெட்டுக்குப் பிந்தைய மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்
July 29th, 12:08 pm
புதுதில்லியில் உள்ள விக்ஞான் பவனில் 2024, ஜூலை 30, அன்று வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கியப் பயணம், மத்திய பட்ஜெட் 2024-25-க்கு பிந்தைய மாநாடு என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ பிப்ரவரி 3-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
February 02nd, 11:10 am
காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ 2024 பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 10 மணியளவில் விஞ்ஞான் பவனில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.