விளையாட்டு நிகழ்வைக் காண மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் சென்றிருந்தார்
July 10th, 08:21 am
இந்தியா – ஆஸ்திரேலியா விளையாட்டு உறவுகளைக் கொண்டாடும் நிகழ்வை காண்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸ், விக்டோரியா முதல்வர் ஜசிந்தா ஆலன் ஆகியோருடன் இணைந்து இன்று மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வில், திரு ஸ்டீவ் வா, லிசா ஸ்தலேகர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய விளையாட்டு ஆளுமைகள் பலர் பங்கேற்றனர். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையின் தூண்களாக விளங்கும் விளையாட்டுகள், கலாச்சார பரிமாற்றங்கள், மக்களிடையேயான உறவு ஆகியவற்றில் அதிகரிக்கும் முக்கியவத்துவத்தை இந்தப் பயணம் குறிப்பிடுகிறது.செஷல்ஸ் நாட்டின் 50-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் பங்கேற்பு
June 29th, 08:00 am
செஷல்ஸ் அதிபர் டாக்டர் ஃபெட்ரிக் ஹர்மினியின் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அந்நாட்டின் 50-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செஷல்ஸின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.செசல்ஸ் நாட்டில் இந்திய திட்டங்கள் தொடக்கம்: காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
April 07th, 06:02 pm
செசல்ஸ் நாட்டில் இந்திய திட்டங்கள் பலவற்றை தொடங்கி வைக்கும் காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, செசல்ஸ் அதிபர் மேதகு வேவல் ராம்கலாவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.