The fact sheet on India's growth is a success story of the Reform-Perform-Transform mantra: PM Modi in Rajkot
January 11th, 02:45 pm
PM Modi inaugurated the Vibrant Gujarat Regional Conference for the Kutch and Saurashtra region in Rajkot. Recalling the devastating earthquake in Kutch and drought in Saurashtra, the PM said these regions are now emerging as major drivers of Aatmanirbhar Bharat and India’s rise as a global manufacturing hub. He highlighted the achievements India has made over the past 11 years.ராஜ்கோட்டில் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியங்களுக்கான துடிப்பான குஜராத் பிராந்திய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 11th, 02:30 pm
குஜராத்தின் ராஜ்கோட்டில் இன்று (11.01.2026) நடைபெற்ற கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பான குஜராத் பிராந்திய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, 2026-ம் ஆண்டின் தொடக்கத்திற்குப் பிறகு, குஜராத்துக்கு தமது முதல் பயணம் என்று குறிப்பிட்டார். காலையில் சோம்நாத்தின் தெய்வீக தரிசனத்தைப் பெற்றதாகவும், இப்போது ராஜ்கோட்டில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதாகவும் அவர் கூறினார்.பிரதமர் ஜனவரி 11 அன்று ராஜ்கோட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்
January 09th, 12:07 pm
பிரதமர் 2026 ஜனவரி 11 அன்று ராஜ்கோட்டுக்குப் பயணம் செய்து, கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க குஜராத் மண்டல மாநாட்டில் பங்கேற்பார். பிற்பகல் 1:30 மணியளவில், மாநாட்டில் வர்த்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பார். அதன் பின், பிற்பகல் 2 மணியளவில், ராஜ்கோட்டில் உள்ள மார்வாடி பல்கலைக்கழகத்தில் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றுவார்.ஜனவரி 10-12 தேதிகளில் பிரதமர் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்
January 09th, 12:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2026, ஜனவரி 10 முதல் 12 வரை குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி 10 அன்று மாலை பிரதமர் சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்வார். இரவு சுமார் 8 மணியளவில் பிரதமர் ஓம்கார மந்திரம் பாராயணம் நிகழ்வில் பங்கேற்பார். அதன் பின் சோமநாதர் ஆலயத்தில் ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்வையிடுவார்.