தண்டக்ரம பாராயணத்தை நிறைவு செய்த வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவுக்கு பிரதமர் வாழ்த்து
December 02nd, 01:03 pm
சுக்ல யஜுர்வேதத்தின் மத்யந்தினி பிரிவின் 2000 மந்திரங்களைக் கொண்ட தண்டக்ரம பாராயணத்தை 50 நாட்களில் எந்த இடைவேளையும் இல்லாமல் முடித்ததற்காக வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 19 வயதான வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவின் இந்த சாதனையை வருங்காலத் தலைமுறையினர் நினைவு கூர்வார்கள் என்று திரு. மோடி கூறியுள்ளார். காசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், இந்த அசாதாரணமான சாதனை இந்தப் புனித நகரத்தில் நடந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அவருக்கு ஆதரவளித்த இந்தியா முழுவதிலுமிருந்து பல துறவிகள், மடங்களின் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் அமைப்புகளுக்கும் எனது வணக்கங்கள், என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.