இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரிய வன்ஷியை பிரதமர் சந்தித்தார்

May 30th, 02:30 pm

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரிய வன்ஷியையும், அவரது குடும்பத்தினரையும் இன்று பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். “அவரது கிரிக்கெட் ஆட்டத் திறன் ஒட்டு மொத்த நாட்டிலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்” என்று திரு மோடி கூறியுள்ளார்.