குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்

August 25th, 06:42 pm

இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாது

குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

August 25th, 06:15 pm

குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

July 09th, 12:49 pm

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் தாஹோத் நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு

May 26th, 11:45 am

குஜராத் மாநில முதலமைச்சர் திரு. பூபேந்திர பாய் அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, குஜராத் மாநில அமைச்சரவையைச் சேர்ந்த எனது அனைத்து சகாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிற சிறப்புமிக்க பிரமுகர்கள் மற்றும் தாஹோத் நகரத்தைச் சேர்ந்த எனது அன்பான சகோதர சகோதரிகளே!

குஜராத்தின் தாஹோத்தில் ரூ.24,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

May 26th, 11:40 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று குஜராத்தின் தாஹோத்தில் ரூ.24,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த பல திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், 2014-ம் ஆண்டு மே 26ந் தேதி, பிரதமராக முதன்முதலில் பதவியேற்ற நாளாகக் கருதப்படுவதால், இந்த நாள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். தேசத்தை வழிநடத்தும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்த குஜராத் மக்களின் அசைக்க முடியாத ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இந்த நம்பிக்கையும் ஊக்கமும் நாட்டிற்கு இரவும் பகலும் சேவை செய்வதற்கான தமது அர்ப்பணிப்பைத் தூண்டியுள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். பல ஆண்டுகளாக, இந்தியா, கற்பனை செய்ய முடியாத முடிவுகளை எடுத்து, பல தசாப்தங்களாக நிலவிய பழமையான தடைகளிலிருந்து விடுபட்டு, ஒவ்வொரு துறையிலும் முன்னேறியுள்ளது. இன்று, நாடு விரக்தி மற்றும் இருள் நிறைந்த சகாப்தத்திலிருந்து பிரகாசமான, நம்பிக்கையின் புதிய யுகத்திற்கு எழுந்துள்ளது என்று அவர் கூறினார்.

அகமதாபாத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை

December 09th, 01:30 pm

மதிப்பிற்குரிய சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ் அவர்களே, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் மதிப்புமிக்க துறவிகளே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, வணக்கம்!

குஜராத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

December 09th, 01:00 pm

குஜராத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ், ராமகிருஷ்ண மடம் மற்றும் அந்த இயக்கத்தின் துறவிகள், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரதா தேவி, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு திரு மோடி மரியாதை செலுத்தினார். ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்த மகாராஜின் பிறந்த நாளையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு திருவிழாவின் கீழ் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி பிரதமர் ஆற்றிய உரை

October 29th, 11:00 am

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள எனது அமைச்சரவை சகாக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தேசத்தின் இளம் நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

வேலைவாய்ப்பு திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 29th, 10:30 am

வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துரைக்கிறது. நாட்டை கட்டமைப்பதில் பங்களிக்க உரிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு இது அதிகாரம் அளிக்கும்.

ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸின் இந்தியப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் (அக்டோபர் 28-29, 2024)

October 28th, 06:30 pm

ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட சி 295 விமான ஆலையை வதோதராவில் பிரதமரும், ஸ்பெயின் அதிபரும் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.

குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

October 28th, 04:00 pm

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,

குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

October 28th, 03:30 pm

குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.

சி-295 விமானத் தொழிற்சாலையின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

October 28th, 10:45 am

மேதகு பெட்ரோ சான்செஸ் அவர்களே, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் அவர்களே, பாரதத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களே, வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. எஸ். ஜெய்சங்கர் அவர்களே, குஜராத்தின் முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, ஸ்பெயின் மற்றும் மாநில அரசின் அமைச்சர்களே, ஏர்பஸ் மற்றும் டாடா குழுக்களின் அனைத்து உறுப்பினர்களே, தாய்மார்களே!

குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 விமானங்களை உற்பத்தி செய்வதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் திரு. பெட்ரோ சான்செஸும் கூட்டாகத் திறந்து வைத்தனர்

October 28th, 10:30 am

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) வளாகத்தில் சி-295 விமானங்களை உற்பத்தி செய்வதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் திரு. பெட்ரோ சான்செஸும் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை இரு பிரதமர்களும் பார்வையிட்டனர்.

பிரதமர், அக்டோபர் 28 அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்

October 26th, 03:28 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று குஜராத் செல்கிறார். காலை 10 மணியளவில், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்செஸுடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 போர் விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை கூட்டாக பிரதமர் திறந்து வைப்பார். அதன்பிறகு காலை 11 மணியளவில் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைக்கு செல்கிறார். வதோதராவிலிருந்து அம்ரேலி செல்லும் பிரதமர், அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவாரைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3 மணியளவில், அம்ரேலியில் உள்ள லாத்தியில் ரூ .4,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

நவ்சாரியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துப் பிரதமர் ஆற்றிய உரை

February 22nd, 04:40 pm

நாடு முழுவதும், நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் தற்போது ஒரு உற்சாகமான விவாதம் நடந்து வருகிறது. அந்த விவாதம் மோடியின் உத்தரவாதம் என்பதைச் சுற்றியே சுழல்கிறது. மோடி என்ன வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்றுவார் என்பதை ஒவ்வொரு குடிமகனும் ஒப்புக் கொள்கிறான். ஒருவேளை நாட்டின் பிற பகுதிகளுக்கு இது ஒரு புதுமையான கருத்தாக இருக்கலாம், ஆனால் மோடியின் வார்த்தை அவரது பந்தம் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்பதை குஜராத் மக்கள் பல ஆண்டுகளாக அறிவார்கள்

குஜராத் மாநிலம் நவ்சாரியில் ரூ.47,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

February 22nd, 04:25 pm

குஜராத் மாநிலம் நவ்சாரியில் ரூ.47,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மின் உற்பத்தி, ரயில், சாலை, ஜவுளி, கல்வி, குடிநீர் விநியோகம், போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது இந்தத் திட்டங்கள் ஆகும்.

NCC highlights the idea of Ek Bharat Shreshtha Bharat: PM Modi

January 27th, 05:00 pm

Prime Minister Narendra Modi addressed the annual NCC PM rally at the Cariappa Parade Ground in Delhi. PM Modi witnessed a cultural program and presented the Best Cadet Awards. He also flagged in Mega Cyclothon by NCC Girls and Nari Shakti Vandan Run (NSRV) from Jhansi to Delhi. “Being present among NCC cadets highlights the idea of Ek Bharat Shreshtha Bharat, the Prime Minister said as he observed the presence of cadets from different parts of the country.

டெல்லி கரியப்பா மைதானத்தில் நடந்த என்சிசி பேரணியில் பிரதமர் உரையாற்றினார்.

January 27th, 04:30 pm

டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் என்சிசி பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

வதோதராவின் ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

January 18th, 07:56 pm

வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.