ராஜஸ்தானில் பிப்ரவரி 28 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
February 27th, 03:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜஸ்தானில் பிப்ரவரி 28 அன்று பயணம் மேற்கொள்கிறார். அன்று காலை 11.30 மணியளவில் ரூ.16,680 கோடி மதிப்புள்ள பலவகை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். நகர்ப்புற மேம்பாடு, குடிநீர் விநியோகம், சாலைகள், பாசனம், எரிசக்தி, தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்த நிகழ்வில் திரண்டிருப்போர் இடையே அவர் உரையாற்றுவார்.India’s direction and vision for AI are clear, AI is a shared resource for the welfare of humanity: PM Modi
February 19th, 01:00 pm
In his remarks at the Leaders’ Plenary Session during the India AI Impact Summit, PM Modi noted how India has seen technology serve humanity, citing the digital vaccination platform that helped vaccinate millions on time. Highlighting that for India technology is not a medium of power but of service, he underlined that AI too must follow this path to ensure the welfare of humanity. For the ethical use of AI, the PM offered three valuable suggestions.இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் தலைவர்களின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்
February 19th, 12:39 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் தலைவர்களின் தொடக்க அமர்வில் இன்று தெரிவித்த கருத்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்ற பிரதமர், மனிதர்களை மையப்யபடுத்திய கட்டமைப்பு மற்றும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சூழல் அமைப்பில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
May 20th, 04:42 pm
மேன்மை தங்கியவர்களே மற்றும் பிரதிநிதிகளே, வணக்கம். உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
May 20th, 04:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டின் கருப்பொருளான 'ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்' என்பதை எடுத்துரைத்து, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் அது இந்தியாவின் உலகளாவிய சுகாதாரத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். 2023-ம் ஆண்டு உலக சுகாதார கூட்டமைப்பில் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' பற்றி அவர் பேசியதை அவர் நினைவு கூர்ந்தார். ஆரோக்கியமான உலகின் எதிர்காலம் உள்ளடக்கம், ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.டிவி9 உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 28th, 08:00 pm
டிவி 9 நெட்வொர்க் பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, இப்போது, உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பலரும் இந்த உச்சிமாநாட்டுடன் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து கையசைப்பதைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல நேயர்களையும் அதே உற்சாகத்துடன் கீழே உள்ள திரையில் பார்க்க முடிகிறது. அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.டிவி 9 உச்சிமாநாடு 2025 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 28th, 06:53 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். டிவி9 பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இப்போது உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் இணைந்த இந்திய வம்சாவளியினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.பவாலியாலி தாம் நிகழ்ச்சியின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்
March 20th, 04:35 pm
மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களே, சமூகத்தின் மதிப்பிற்குரியவர்களே மற்றும் இங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தியுள்ள சகோதர சகோதரிகளே – வணக்கம். ஜெய் தக்கர்!பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
March 20th, 04:30 pm
குஜராத் பர்வாட் சமாஜ் தொடர்பான பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களுக்கும், சமூகத் தலைவர்கள் மற்றும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். பர்வாட் சமூகத்தின் பாரம்பரியங்கள் மற்றும் இந்த பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த வணக்கத்திற்குரிய துறவிகள் மற்றும் மஹந்த்களுக்கு மரியாதை செலுத்தி அவர் தனது உரையைத் தொடங்கினார். வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பமேளாவுடன் தொடர்புடைய அளவற்ற மகிழ்ச்சி மற்றும் பெருமிதத்தை எடுத்துரைத்த திரு மோடி, இந்தப் புனிதமான நிகழ்வின் போது மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களுக்கு மகாமண்டலேஷ்வர் என்ற பட்டம் வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க தருணத்தை குறிப்பிட்டு, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும், அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார். மஹந்த் ஸ்ரீ ராம் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார்.