புவனேஸ்வரில் நடைபெற்ற "வளமையான ஒடிசா-ஒடிசாவில் தயாரிங்கள்" (உத்கர்ஷ் ஒடிசா-மேக் இன் ஒடிசா) மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 28th, 11:30 am
ஒடிசா ஆளுநர் திரு ஹரி பாபு அவர்களே, முதல்வர் திரு மோகன் சரண் மாஜி அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சக அமைச்சர்களே, ஒடிசாவின் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தொழில் மற்றும் வணிக உலகின் முன்னணி தொழில்முனைவோர்களே, முதலீட்டாளர்களே, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஒடிசாவின் என் அன்பான சகோதர சகோதரிகளே!புவனேஸ்வரில் 'உத்கர்ஷ் ஒடிசா' – மேக் இன் ஒடிசா மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 28th, 11:00 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செழிப்பான ஒடிசா-ஒடிசாவில் தயாரிங்கள் (உத்கர்ஷ் ஒடிசா – மேக் இன் ஒடிசா) மாநாடு 2025 மற்றும் ஒடிசாவில் தயாரியுங்கள் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், 2025 ஜனவரி மாதத்தில் ஒடிசாவுக்கு தாம் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இது என்று கூறியதுடன், வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2025 நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க தாம் வருகை புரிந்ததை நினைவுகூர்ந்தார். இதுவரை ஒடிசாவில் நடைபெற்ற மிகப்பெரிய வணிக உச்சி மாநாடு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒடிசாவில் தயாரியுங்கள் மாநாடு 2025-ல் 5-6 மடங்கு அதிகமான முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்றார். இந்த பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்த ஒடிசா மக்களையும் அரசையும் அவர் பாராட்டினார்.ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு பிரதமர் நாளை(ஜனவரி 28) பயணம் மேற்கொள்கிறார்
January 27th, 06:44 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (ஜனவரி 28) ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் செழிப்பான ஒடிசா – ஒடிசாவில் உற்பத்தி செய்வோம் மாநாடு 2025-ஐ அவர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்குச் செல்லும் அவர், மாலை 6 மணியளவில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார்.