செப்டம்பர் 20-ம் தேதி பிரதமர் குஜராத் செல்கிறார்

September 19th, 05:22 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 20-ம் தேதி குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்வார். அவர் காலை 10:30 மணியளவில் பாவ்நகரில் நடைபெறும் ‘கடலிலிருந்து செழிப்பு’ நிகழ்வில் பங்கேற்று சுமார் ரூ.34,200 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, உரையாற்றுவார்.

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ல் பிரதமர் ஆற்றிய உரை

January 17th, 11:00 am

கடந்த முறை நான் உங்களிடையே வந்தபோது, மக்களவைத் தேர்தல் வெகு தொலைவில் இல்லை. அந்த நேரத்தில், உங்கள் அனைவரின் நம்பிக்கையின் காரணமாக, அடுத்த முறையும் இந்தக் கண்காட்சிக்கு கண்டிப்பாக வருவேன் என்று நான் கூறியிருந்தேன். நாடு மூன்றாவது முறையாக எங்களை ஆசீர்வதித்துள்ளது. நீங்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை என்னை இங்கு அழைத்துள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத் வாகனத் தொழில் துறையின் சர்வதேச கண்காட்சி 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

January 17th, 10:45 am

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தித் தொழில்துறை கண்காட்சியான பாரத் வாகனத் தொழில்துறை சர்வதேச கண்காட்சி 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க பிஜேபி-யைத் தேர்ந்தெடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 800 கண்காட்சியாளர்கள், 2.5 லட்சம் பார்வையாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சி தலைநகரில் மேலும் இரண்டு இடங்களில் நடைபெறுவதாக அவர் கூறினார். அடுத்த 5 நாட்களில் ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகையில் பல புதிய வாகனங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். போக்குவரத்துத் துறையில் எதிர்காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை இது எடுத்துக் காட்டுவதாகக் கூறினார். இந்தக் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் வாகன உற்பத்தித் தொழில் சிறந்த நிலையில், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாராக உள்ளது என்று கூறிய அவர், இக்கண்காட்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

45-வது பிரகதி கலந்துரையாடலுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்

December 26th, 07:39 pm

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் முனைப்பான நிர்வாக செயல் திறன், திட்டங்களை உரிய காலத்திற்குள் அமல்படுத்துவதற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முக தளமான பிரகதியின் 45-வது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.