
போபாலில் உள்ள தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 31st, 11:00 am
மத்தியப் பிரதேச ஆளுநர், திரு மங்குபாய் படேல் அவர்களே, மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. மோகன் யாதவ் அவர்களே, தொழில்நுட்பம் மூலம் இணையும் மத்திய அமைச்சர்களே, இந்தூரைச் சேர்ந்த தோகான் சாஹு அவர்களே, தாத்தியாவிலிருந்து இணையும் திரு ராம் மோகன் நாயுடு அவர்களே, சத்னாவிலிருந்து இணையும் திரு முரளிதர் மோஹோல் அவர்களே, மேடையில் இருக்கும் மாநில துணை முதலமைச்சர்கள் திரு. ஜெகதீஷ் தேவ்தா & திரு. ராஜேந்திர சுக்லா அவர்களே, மக்களவை நண்பர் திரு. வி. டி. சர்மா அவர்களே, இங்கு பெருமளவில் கூடியிருக்கும் இதர அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரமளித்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை
May 31st, 10:27 am
லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற லோக்மாதா தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 'மா பாரதி'க்கு அஞ்சலி செலுத்தி, நாட்டில் உள்ள பெண்களின் வலிமைக்கு அங்கீகாரம் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள சகோதரிகள் மற்றும் மகள்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்களின் வருகையால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார். லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் நிகழ்வாகவும், நாட்டைக் கட்டமைக்கும் மகத்தான முயற்சிகளுக்கு பெண்கள் பங்களிக்கும் தருணமாகவும் அமைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். தேவி அஹில்யாபாயை மேற்கோள் காட்டி பேசிய அவர், உண்மையான நிர்வாகம் என்பது மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் என்று அவர் கூறினார்.
எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 23rd, 11:00 am
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் பல்லா அவர்களே, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பேமா காண்டு அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சஹா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் அவர்களே, நாகாலாந்து முதலமைச்சர் திரு நெய்பியு ரியோ அவர்களே, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, அனைத்து தொழில் துறை தலைவர்களே, முதலீட்டாளர்களே, பெண்களே, தாய்மார்களே வணக்கம்!பிரதமர் திரு. நரேந்திர மோடி, எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார்
May 23rd, 10:30 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பாரத் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை நினைவு கூர்ந்த அவர், இன்றைய நிகழ்வு வடகிழக்கில் முதலீட்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். இந்த உச்சிமாநாட்டிற்கு தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வருகையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். அனைத்து அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு செழிப்பான முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், செழிப்புக்குமான தமது உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார்.இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 02nd, 02:45 pm
மாண்புமிகு அதிபர் திரு பிரபோவோ அவர்களே, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம் அவர்களே, நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன் அவர்களே, தமிழ்நாடு மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்களே, ஆச்சார்யர்களே, புலம்பெயர்ந்த இந்தியர்களே, இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குடிமக்களே!இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்
February 02nd, 02:30 pm
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மஹா கும்பாஹிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் தமது கருத்துக்களை தெரிவித்தார். அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம், நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன், தமிழகம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆச்சார்யர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.அற்புதமான குடியரசு தின அணிவகுப்பு, கலாச்சார பாரம்பரியத்தையும் ராணுவ வலிமையையும் வெளிப்படுத்தியது: பிரதமர்
January 26th, 03:41 pm
2025 குடியரசு தின கொண்டாட்டங்களின் காட்சிகளை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அம்சத்தின் துடிப்பான காட்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அற்புதமான அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்தையும் ராணுவ வலிமையை வெளிப்படுத்தியது என்று அவர் கூறியுள்ளார்.