The courage, confidence and innovation of startups are shaping India's future: PM Modi

January 16th, 01:30 pm

On the occasion of National Startup Day, PM Modi addressed a programme marking a decade of the Startup India initiative in New Delhi. Highlighting the significant rise in the number of startups and unicorns over the past decade, the PM noted the growing participation of women in the startups. As India is set to host the AI Impact Summit in February 2026, the PM remarked that it presents a great opportunity for the youth and urged them to work hard and innovate.

இங்கிலாந்து பிரதமருடான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரின் உரை

July 24th, 04:20 pm

முதலில், பிரதமர் ஸ்டார்மரின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பல வருட அர்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பிறகு, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய உச்சிமாநாடான வேவ்ஸ் ஆலோசனைக் குழுவின் விரிவான கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

February 07th, 11:41 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் வேவ்ஸ் ஆலோசனைக் குழுவின் விரிவான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வேவ்ஸ் என்பது பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய உச்சிமாநாடு ஆகும்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 02nd, 02:45 pm

மாண்புமிகு அதிபர் திரு பிரபோவோ அவர்களே, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம் அவர்களே, நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன் அவர்களே, தமிழ்நாடு மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்களே, ஆச்சார்யர்களே, புலம்பெயர்ந்த இந்தியர்களே, இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குடிமக்களே!

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்

February 02nd, 02:30 pm

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மஹா கும்பாஹிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் தமது கருத்துக்களை தெரிவித்தார். அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம், நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன், தமிழகம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆச்சார்யர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

புதுமைத்துவத்தில் ஒற்றுமை’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும் பிரதமர் பாராட்டு

February 08th, 09:59 am

கடந்த 2021 ஆண்டு சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழா கொண்டாட்டங்களையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ‘புதுமைத்துவத்தில் ஒற்றுமை’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.