இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கூட்டுத் தீர்மானம்
July 09th, 10:55 am
இந்தியா, ஆஸ்திரேலியா பிரதமர்களாகிய நாங்கள் எங்களுடைய நெருக்கமான இருதரப்பு உறவுகளால் ஒருங்கிணைந்து நமது நாடுகளின் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதிலும் வெளிப்படையான, அமைதியான, நிலையான, வளமையான இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான நோக்கத்துடனும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இந்தக் கூட்டுத் தீர்மானத்திற்கு எங்கள் அர்ப்பணிப்பை உறுதி செய்கிறோம்.Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament
July 07th, 03:15 pm
Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:00 pm
ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.India-Japan Joint Statement on cooperation in the field of Artificial Intelligence (AI)
July 02nd, 10:14 pm
PM Modi and Japanese Prime Minister Sanae Takaichi agreed to deepen India-Japan cooperation in Artificial Intelligence with a shared vision for a safe, trusted and human-centric AI ecosystem. The partnership will drive collaboration in AI governance, digital infrastructure, research, innovation and talent development, while supporting resilient AI growth across the Indo-Pacific and the Global South.ஐ.நா.வின் மதிப்புமிக்க விருதைப் பெற்ற மேஜர் அபிலாஷா பராக்கிற்குப் பிரதமர் வாழ்த்து
June 07th, 02:06 pm
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான சிறந்த ராணுவப் பாலின சமத்துவப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்ட மேஜர் அபிலாஷா பராக்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள ஐநா இடைக்கால அமைதிப் படையில் மேஜர் பராக், ஒருங்கிணைப்புக் குழுத் தளபதியாகவும் பாலின சமத்துவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருவதைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.எஸ்ஏஎஃப்எஃப் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற இந்திய மகளிர் கால்பந்து அணிக்குப் பிரதமர் வாழ்த்து
June 07th, 01:58 pm
2026-ம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பான எஸ்ஏஎஃப்எஃப்-பின் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இத்தொடர் முழுவதும் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.Yoga is the best way to maintain a healthy lifestyle with minimal expense: PM Modi at World Yogasana Championship in Ahmedabad
June 04th, 06:41 pm
PM Modi inaugurated the first World Yogasana Championship in Ahmedabad, calling yoga India’s timeless gift to humanity and expressing confidence that Yogasana will gain recognition as a competitive sport in global multi-sport events, including the Olympics. Highlighting yoga’s role in health, wellness and healthy ageing, he urged participants to become ambassadors of the ‘Yoga 365’ campaign and spread yoga’s message worldwide.முதலாவது உலக யோகாசன சாம்பியன் போட்டியை அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
June 04th, 06:40 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று முதலாவது உலக யோகாசன சாம்பியன் போட்டியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் உலக விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாகப் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்க வந்துள்ள சர்வதேச விளையாட்டு வீரர்களை வரவேற்ற அவர், யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான அகமதாபாத்தில் இந்த போட்டி நடைபெறுவது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும் என்றார். ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இந்த சாம்பியன் போட்டி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் இரட்டிப்பு பலனை நமக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இம்முறை சர்வதேச யோகா தினத்தின் முதன்மை நிகழ்வு மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான கொல்கத்தாவில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.சைப்ரஸ் குடியரசு அதிபரின் இந்திய அரசுமுறைப் பயணம் குறித்த கூட்டறிக்கை
May 22nd, 09:31 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ், 2026 மே 20 முதல் 23, வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை சைப்ரஸ் ஏற்றுக் கொண்டுள்ள காலகட்டத்தில், அவரது இந்திய பயணம், தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.Cabinet approves India’s Nationally Determined Contribution for 2031 to 2035
March 25th, 05:35 pm
The Union Cabinet, under the chairmanship of PM Modi, has approved India’s Nationally Determined Contribution (NDC) for the period 2031 to 2035, enhancing the country’s ambition under the UNFCCC and the Paris Agreement. This marks a major milestone in India’s journey towards a low-carbon, climate-resilient future, further strengthening its role as a global leader in climate action. India’s climate commitments will generate new opportunities for youth and women.India is not just progressing, India is moving to the Next: PM Modi
March 12th, 10:47 pm
In his address at the NXT Summit, PM Modi emphasized that just as the 1930 Dandi march unified the country in the pursuit of freedom, the current Viksit Bharat mission is the collective goal of 140 crore Indians. He highlighted the positive statements made by global leaders such as Mark Carney and Emmanuel Macron about India. Remarking on the ongoing discussions surrounding LPG, the PM called upon citizens to prioritize facts over misinformation.பிரதமர் திரு நரேந்திர மோடி நெக்ஸ்ட் மாநாட்டில் உரையாற்றினார்
March 12th, 08:30 pm
தண்டியாத்திரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று (12.03.2026) நெக்ஸ்ட் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முன்முயற்சி ஆகியவற்றை பிரதமர் ஒப்பிட்டு பேசினார்.பின்லாந்து அதிபரின் அரசுமுறைப் பயணம் குறித்த இந்திய – பின்லாந்து கூட்டறிக்கை
March 05th, 08:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்லாந்து அதிபர் டாக்டர் அலெக்சாண்டர் ஸ்டப், 2026 மார்ச் 4-7 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பின்லாந்தின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திருமிகு சாரி முல்தாலா, வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மத்தியாஸ் மார்டினென் மற்றும் அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் அவருடன் வந்துள்ளது.ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கிடையே ஐ.நா. தலைமைச்செயலாளருடன் பிரதமரின் சந்திப்பு
February 20th, 09:52 pm
2026 பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐ.நா. தலைமைச்செயலாளர் திரு அன்டோனியோ குட்டரஸை சந்தித்தார்.2026 பிப்ரவரி 19 அன்று இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026- ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
February 18th, 03:55 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 பிப்ரவரி 19-ம் தேதி புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026-ஐ பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார். அதற்கு முன்னதாக, பிப்ரவரி 18-ம் தேதி மாலை சுமார் 7 மணிக்கு, பாரத மண்டபத்தில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் வரவேற்கிறார். இதற்கிடையே, உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல உலகத் தலைவர்களுடன் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 01st, 10:14 am
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள தமக்கு உற்சாக வரவேற்பு அளித்து சிறப்பாக உபசரித்த சீன அதிபர் திரு ஜி ஜிங்பிங் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை
July 09th, 08:14 pm
இந்த மகத்தான தேசத்திற்கு சேவை செய்ய மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கியுள்ளனர். உங்கள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.Prime Minister addresses the Namibian Parliament
July 09th, 08:00 pm
PM Modi addressed the Parliament of Namibia and expressed gratitude to the people of Namibia for conferring upon him their highest national honour. Recalling the historic ties and shared struggle for freedom between the two nations, he paid tribute to Dr. Sam Nujoma, the founding father of Namibia. He also called for enhanced people-to-people exchanges between the two countries.ரியோ டி ஜெனிரோ பிரகடனம் – வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த ஆளுகைக்கான உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்
July 07th, 06:00 am
அனைத்து நாடுகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த நிர்வாகத்திற்கான உலகின் தென்பகுதியில் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் , ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.பிரிக்ஸ் உச்சிமாநாடு: உலகளாவிய ஆளுகை சீர்திருத்தம் குறித்த பிரதமரின் உரை
July 06th, 09:41 pm
பிரிக்ஸ் உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேசில் தலைமையின் கீழ், பிரிக்ஸ் உச்சி மாநாடு புதிய உத்வேகத்தையும் எழுச்சியையும் பெற்றுள்ளது. இதற்காக அந்நாட்டு அதிபரின் தொலைநோக்குப் பார்வையையும் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டுகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இந்தோனேசியா சேர்க்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோவுக்கு இந்தியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.