Prime Minister extends his best wishes to Shri Nitish Kumar upon his taking oath as Rajya Sabha MP
April 10th, 02:07 pm
PM Modi extended his heartiest congratulations and best wishes to Shri Nitish Kumar on the occasion of him taking oath as a Member of the Rajya Sabha. The PM remarked that Shri Nitish Kumar is one of the nation's most experienced leaders whose commitment to good governance and indelible contribution to Bihar's development are widely recognized. He noted that it is a pleasure to see him return to Parliament.முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
February 23rd, 10:21 am
முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் அனுபவம் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றியதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்காக அவர் நினைவு கூரப்படுப்படுவார் என்று திரு மோடி கூறியுள்ளார்.இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ பிப்ரவரி 16 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
February 15th, 02:21 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ 2026, பிப்ரவரி 16 அன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். இது பிப்ரவரி 20 வரை நடைபெறும்.ஒன்பது புதிய அமிர்த பாரத் விரைவு ரயில்கள் குறித்த அறிவிப்பிற்கு பிரதமர் பாராட்டு
January 14th, 06:51 pm
நாடு முழுவதும் பயணிகளின் வசதி மற்றும் இணைப்பை மேம்படுத்துவதில் புதிய அமிர்த பாரத் ரயில்கள் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சர் கபிந்திர புர்கயஸ்தா மறைவு: பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்
January 07th, 07:07 pm
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. கபிந்திர புர்கயஸ்தா மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.பீகார் மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர், மத்திய அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
December 22nd, 03:33 pm
பீகார் மாநில முதலமைச்சர் திரு நிதீஷ் குமார், துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.திரு சிவராஜ் பாட்டீலின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 12th, 10:26 am
திரு சிவராஜ் பாட்டீலின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். பொது சேவைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த அனுபவம் வாய்ந்த தலைவர் என்று அவரைப் புகழ்ந்துள்ளார்.இளைஞர்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: பிரதமர்
June 19th, 01:57 pm
உலக அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றத்திற்கு சான்றாக க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை 2026 அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அவர் கூறினார்.தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்பட்டிருப்பது, நாடு முழுவதும் உள்ள மஞ்சள் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்: பிரதமர்
January 14th, 04:51 pm
தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டதைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, மஞ்சள் உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புகள், உலகளாவிய மேம்பாடு, மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றுக்கான சிறந்த வாய்ப்புகளை இது உறுதி செய்யும் என்று கூறியுள்ளார்.வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சி, இளையோர் சக்தியையும், அவர்களின் கனவுகள், திறன்கள், விருப்பங்களையும் கொண்டாடுகிறது: பிரதமர்
January 10th, 07:24 pm
வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்கள் பங்கேற்கும் உரையாடல் நிகழ்ச்சி இளையோர் சக்தியையும், அவர்களின் கனவுகள், திறன்கள், விருப்பங்களையும் கொண்டாடுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு
December 19th, 09:57 pm
மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.Union Minister Dharmendra Pradhan Slams Opposition-Ruled States for 'Betraying' Their Youth with Rising Unemployment
September 26th, 09:47 am
Union Minister Dharmendra Pradhan has strongly criticised the opposition-ruled states for their failure to address rising unemployment rates, particularly among the youth. Citing recent data from the Periodic Labour Force Survey (PLFS) covering the period from July 2023 to June 2024, Pradhan highlighted the glaring disparities in job creation in states led by opposition parties.மின்னணு ஏற்றுமதியில் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பிரதமர் பாராட்டினார்
August 05th, 03:30 pm
மின்னணு ஏற்றுமதியில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலக அளவில் மின்னணு ஏற்றுமதி முதல் 3 இடங்களில் உள்ளது. புதியன காணும் இளைஞர் சக்திக்கு இந்தப் பெருமையை திரு மோடி அளித்தார். இந்த உத்வேகத்தை வரும் காலங்களிலும் தொடர இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.Romba Nandri Chennai! Viksit Bharat Ambassador Chennai Meet Up A Huge Success
March 23rd, 01:00 pm
A 'Viksit Bharat Ambassador' Meet Up in Chennai was held on Friday, 22nd March 2024. The Viksit Bharat Ambassador or #VBA2024 meet-up, held at the prestigious YMCA Auditorium, brought together a perse audience of over 400 attendees, including professionals such as lawyers and engineers and enthusiastic students eager to contribute to the nation's growth.புதுதில்லியில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 14th, 12:00 pm
பொங்கல் திருநாளன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொங்கல் பண்டிகையின் உணர்வு காணப்படுகிறது. உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, மனநிறைவு ஆகியவை தடையின்றி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நேற்று, நாடு முழுவதும் லோஹ்ரி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சிலர் இன்று மகர சங்கராந்தி-உத்தராயணத்தை அனுசரிக்கிறார்கள், மற்றவர்கள் நாளை கொண்டாடலாம். மாக் பிஹுவும் ஒரு மூலையில் நடைபெருகிறது. இவ்விழாக்களுக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பு
January 14th, 11:30 am
புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
November 17th, 10:39 am
2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சரும், பொருளாதார வல்லுநருமான பேராசிரியர் ஒய் கே அலக் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 06th, 08:30 pm
முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பேராசிரியர் ஒய் கே அலக் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
October 15th, 12:42 pm
மாநில சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மிக முக்கியமான முக்கியமான கூட்டம், பிரம்மாண்டமான ஒற்றுமை சிலையின் கீழ் நடைபெற்று வருகிறது. விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் இந்தக் கட்டத்தில்,சர்தார் படேலின் உத்வேகமே சரியான திசையில் நம்மைக் கொண்டு சென்று, நமது இலக்குகளை அடைய உதவும்.குஜராத்தின் ஏக்தா நகரில் அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றினார்
October 15th, 12:16 pm
அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.