
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமரின் காணொலி செய்தி
August 23rd, 11:00 am
தேசிய விண்வெளி தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். இந்த ஆண்டு, விண்வெளி தினத்தின் கருப்பொருள் ' ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை; பண்டைய ஞானத்திலிருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள்' என்பதாகும். இது கடந்த காலத்தின் நம்பிக்கையையும் எதிர்காலத்தின் உறுதியையும் உள்ளடக்கியது. இன்று, இவ்வளவு குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் நமது இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு சந்தர்ப்பமாக மாறியுள்ளது என்பதை நாம் காண்கிறோம். இது உண்மையில் தேசத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விஷயமாகும். தேசிய விண்வெளி தினத்தில் விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில், பாரதம் 'வானியல் மற்றும் வானியற்பியல் குறித்த சர்வதேச ஒலிம்பியாட்'-ஐ நடத்தியது. இந்தப் போட்டியில், உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 இளைஞர்கள் பங்கேற்றனர். நமது இந்திய இளைஞர்களும் பதக்கங்களை வென்றனர். இந்த ஒலிம்பியாட், விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமையின் அடையாளமாகும்.
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
August 23rd, 10:30 am
2025-ம் ஆண்டு தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில், பிரதமர் தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார், இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை” என்பது, இந்தியாவின் கடந்த காலத்தின் நம்பிக்கையையும் அதன் எதிர்காலத்திற்கான உறுதியையும் பிரதிபலிக்கிறது. குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் இந்திய இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் ஈர்ப்பையும் அளிக்கும் ஒரு தருணமாக மாறியுள்ளது, இது தேசிய அளவில் பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்கள் உள்பட விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியா தற்போது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட்டை நடத்துகிறது என்றும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 இளைஞர்கள் இதில் பங்கேற்பதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பல இந்திய பங்கேற்பாளர்கள் பதக்கங்களை வென்றதில் திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த ஒலிம்பியாட் விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய தலைமையின் சின்னம் என்றும் அவர் கூறினார். இளைஞர்களிடையே விண்வெளியில் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக, இந்திய விண்வெளி ஹேக்கத்தான் மற்றும் ரோபாட்டிக்ஸ் சவால் போன்ற முயற்சிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்களை அவர் வாழ்த்தினார்.
டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
July 04th, 05:56 am
இந்த மாலைப் பொழுதில் உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பிரதமர் திருமதி. கமலா அவர்களின் அற்புதமான உபசரிப்பு மற்றும் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.பிரதமர் திரு. நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் உரையாற்றினார்
July 04th, 04:40 am
டிரினிடாட் - டொபாகோ நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டுக் குடியரசின் பிரதமர் திருமதி கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை இந்திய வம்சாவளியினர் அன்புடன் வரவேற்றதுடன், இந்தோ-டிரினிடாடியன் பாரம்பரிய முறைப்படி வண்ணமயமான வரவேற்பும் அளித்தனர்.இந்தியா-சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமரும் சைப்ரஸ் அதிபரும் கலந்துரையாடினர்
June 16th, 02:17 am
பிரதமர் திரு நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் லிமாசோலில் சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.Bharat is recognized globally as one of the fastest-growing emerging economies: PM Modi
June 15th, 11:10 pm
PM Modi and the Cyprus President Christodoulides held a Roundtable interaction with business leaders in Limassol. The two leaders welcomed the signing of an MOU between NSE International Exchange GIFT CITY, Gujarat and Cyprus Stock Exchange. Highlighting India's rapid economic transformation in the last 11 years, the PM noted that India has become the fastest growing major economy in the world.தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரை
January 27th, 05:00 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு ராஜ்நாத் சிங் ஜி, சஞ்சய் சேத் ஜி, ஜெனரல் அனில் சவுகான் ஜி, முப்படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு செயலாளர், என்சிசியில் உள்ள எனது அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று, 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 கேடட்களும் இங்கே நம்மிடையே உள்ளனர். இந்த கேடட்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
January 27th, 04:30 pm
தில்லியில் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படையின் வருடாந்திர பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட பிரதமர், சிறந்த மாணவ-மாணவியர்களுக்கான விருதுகளை வழங்கினார். தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு அங்கு கூடியிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர்களையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார். நமது இளைய இந்தியா இணையதளம் மூலம் மெய்நிகர் முறையில் நாடு முழுவதிலும் இருந்து இணைந்துள்ள இளைஞர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.நைஜீரியாவில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 17th, 07:20 pm
எனக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்புக்காக அதிபர் டினுபுவுக்கும், நைஜீரிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சற்று நேரத்திற்கு முன்பு, அதிபர் டினுபு நைஜீரியாவின் தேசிய விருதை எனக்கு வழங்கி கௌரவித்தார். இந்த கௌரவம் மோடிக்கு மட்டுமல்ல; இது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், இங்குள்ள இந்திய சமூகத்தினரான உங்கள் அனைவருக்கும் சொந்தமானது. இந்த கவுரவத்தை உங்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.நைஜீரியாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 17th, 07:15 pm
பிரதமராக நைஜீரியாவுக்கு தாம் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்று கூடியிருந்தவர்களிடம் தெரிவித்த திரு மோடி, கோடிக்கணக்கான இந்தியர்களின் நல்வாழ்த்துகளை தம்முடன் சேர்த்துக் கொண்டதாகவும் கூறினார். நைஜீரியாவில் இந்தியர்களின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார். கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் விருதை தமக்கு வழங்கியதற்காக அதிபர் டினுபுவுக்கும், நைஜீரிய மக்களுக்கும் நன்றி தெரிவித்த திரு மோடி, இந்த விருதை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அர்ப்பணித்தார்.We are laying a strong foundation for India's next thousand years: PM Modi in Austria
July 10th, 11:00 pm
PM Modi addressed the Indian community in Vienna. He spoke about the transformative progress achieved by the country in the last 10 years and expressed confidence that India will become the third largest economy in the near future, on its way to becoming a developed country - Viksit Bharat - by 2047.ஆஸ்திரியாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரை
July 10th, 10:45 pm
வியன்னாவில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமருக்கு உற்சாகமான மற்றும் சிறப்பான வரவேற்பை அவர்கள் வழங்கினார்கள். ஆஸ்திரிய மத்திய தொழிலாளர் மற்றும் பொருளாதார அமைச்சர் மேதகு திரு மார்ட்டின் கோச்சரும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற ஸ்டார்ட்-அப் மகா கும்பமேளாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 20th, 10:40 am
அமைச்சரவையில் உள்ள எனது சக நண்பர்கள் திரு பியூஷ் கோயல் அவர்களே, திருமிகு அனுப்பிரியா படேல் அவர்களே, திரு சோம் பிரகாஷ் அவர்களே, மதிப்பிற்குரிய பிரமுகர்களே, நாடு முழுவதும் உள்ள புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த நமது நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலர் புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள், அரசியலில் அது இன்னும் அதிகமாக உள்ளது, அவை மீண்டும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.புதுதில்லி பாரத மண்டபத்தில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 20th, 10:36 am
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று ஸ்டார்ட்-அப் எனப்படும் புத்தொழில் நிறுவன மகா கும்பமேளாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.Last 10 years will be known for the historic decisions of the government: PM Modi
February 07th, 02:01 pm
Prime Minister Narendra Modi replied to the Motion of Thanks on the President's address to Parliament in Rajya Sabha. Addressing the House, PM Modi said that the 75th Republic Day is a significant milestone in the nation’s journey and the President during her address spoke about India’s self-confidence. PM Modi underlined that in her address, the President expressed confidence about India’s bright future and acknowledged the capability of the citizens of India.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் பிரதமரின் பதில்
February 07th, 02:00 pm
அவையில் உரையாற்றிய பிரதமர், 75-வது குடியரசு தினம் நாட்டின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும், குடியரசுத் தலைவர் தமது உரையின் போது இந்தியாவின் தன்னம்பிக்கை குறித்துப் பேசினார் என்றும் கூறினார். இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம் குறித்து குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், இந்தியக் குடிமக்களின் திறனை ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற நாட்டிற்கு வழிகாட்டியாக அமைந்த குடியரசுத் தலைவரின் உத்வேகம் அளிக்கும் உரைக்கு அவர் நன்றி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பயனுள்ள விவாதம் நடத்திய உறுப்பினர்களுக்குப் பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். குடியரசுத் தலைவரின் உரை, இந்தியாவின் வளர்ந்து வரும் நம்பிக்கை, நம்பிக்கைக்குரிய எதிர்காலம், நாட்டு மக்களின் அளப்பரிய ஆற்றலை விளக்கியது என்று பிரதமர் கூறினார்.Government’s third term will lay the foundations of India for the next 1000 years: PM Modi
February 05th, 05:44 pm
Prime Minister Narendra Modi replied to the motion of thanks on the President’s address to Parliament in the Lok Sabha. Addressing the gathering, the Prime Minister underlined that the President's address is a huge document based on facts that gave an indication of the speed and scale of India's progress and also drew attention to the fact that the nation will become developed faster only if the four pillars of Nari Shakti, Yuva Shakti, the poor and the Ann Data are developed and strengthened.மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதில்
February 05th, 05:43 pm
குடியரசுத்தலைவரின் உரை இந்தியாவின் முன்னேற்றத்தின் வேகம் மற்றும் அளவைக் குறிக்கும் உண்மைகளின் அடிப்படையில் அமைந்த மிகப்பெரிய ஆவணம் என்று அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், மகளிர் சக்தி, இளைஞர் சக்தி, ஏழைகள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு தூண்களை மேம்படுத்தி வலுப்படுத்தினால் மட்டுமே நாடு வேகமாக வளர்ச்சியடையும் என்ற உண்மையையும் சுட்டிக்காட்டினார். இந்த நான்கு தூண்களை வலுப்படுத்துவதன் மூலம் நாடு வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதற்கான பாதையை இந்த உரை ஒளிரச் செய்கிறது என்று அவர் கூறினார்.NCC highlights the idea of Ek Bharat Shreshtha Bharat: PM Modi
January 27th, 05:00 pm
Prime Minister Narendra Modi addressed the annual NCC PM rally at the Cariappa Parade Ground in Delhi. PM Modi witnessed a cultural program and presented the Best Cadet Awards. He also flagged in Mega Cyclothon by NCC Girls and Nari Shakti Vandan Run (NSRV) from Jhansi to Delhi. “Being present among NCC cadets highlights the idea of Ek Bharat Shreshtha Bharat, the Prime Minister said as he observed the presence of cadets from different parts of the country.டெல்லி கரியப்பா மைதானத்தில் நடந்த என்சிசி பேரணியில் பிரதமர் உரையாற்றினார்.
January 27th, 04:30 pm
டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் என்சிசி பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.