India’s dynamism and the UK’s expertise together create a unique synergy: PM Modi at Joint Press Meet
October 09th, 11:25 am
In his remarks at the joint press meet, PM Modi said that under the leadership of PM Starmer, India-UK relations have made remarkable progress. He highlighted that PM Starmer is accompanied by the largest and most influential delegation from the education sector to date. The PM remarked that the 1.8 million Indians residing in the UK, through their valuable contributions to British society and economy, have strengthened the bridge of friendship, cooperation, and development between the two countries.பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிபர் திரு புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
September 17th, 07:14 pm
பிரதமரின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிபர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதிபரின் வாழ்த்துகளுக்கும், வலிமையான நட்புறவுக்கும் பிரதமர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.டென்மார்க் பிரதமர் திருமிகு மெட்டே ஃபிரெடெரிக்சன் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சு
September 16th, 07:29 pm
டென்மார்க் பிரதமர் திருமிகு மெட்டே ஃபிரெடெரிக்சன் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்
September 06th, 06:11 pm
பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். ஹொரைசான் 2047 செயல்திட்டம் , இந்தோ-பசிபிக் செயல்திட்டம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை செயல்திட்டத்துக்கு ஏற்ப, இந்தியா-பிரான்ஸ் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் தலைவர்கள் மீண்டும் பகிர்ந்து கொண்டனர்.ரஷ்ய அதிபருடனான சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை
September 01st, 01:24 pm
நான் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களை சந்திப்பதை எப்போதும் நினைவு கூரக்கூடிய அம்சமாக நான் உணர்கிறேன். பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பை இது அளித்துள்ளது.ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பிரதமர் மோடியின் பெரிய அறிக்கை
September 01st, 12:48 pm
சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ஒரு சந்திப்பை நடத்தினார், அங்கு உக்ரைன் மோதல் ஒரு மைய விவாதப் புள்ளியாக இருந்தது. அமைதிக்கான சமீபத்திய முயற்சிகளை பிரதமர் மோடி வரவேற்றார், மேலும் அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக முன்னேறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார், மேலும் நீடித்த அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிப்பது அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். பரந்த மனித பரிமாணத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, இது ஒரு பிராந்திய அக்கறை மட்டுமல்ல, மனிதகுலத்தின் அழைப்பு என்றும் கூறினார்.பிரதமர் திரு நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் திரு ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேச்சு
August 30th, 07:51 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.08.2025) உக்ரைன் அதிபர் திரு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார்.பிரதமர் திரு நரேந்திர மோடியை பின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்
August 27th, 08:32 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடியை பின்லாந்து அதிபர் மாண்புமிகு திரு அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன் மோதலைத் தீர்ப்பது தொடர்பாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் தலைவர்களுக்கு இடையே வாஷிங்டனில் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்த தனது கருத்துக்களை அதிபர் திரு ஸ்டப் பகிர்ந்து கொண்டார்.அதிபர் மேக்ரானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்
August 21st, 06:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடியை பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.உக்ரைன் அதிபர் திரு ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் திரு மோடி பேச்சு
August 11th, 06:51 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உக்ரைன் அதிபர் திரு. வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கெண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபரிடம் பிரதமர் தெளிவுபடுத்தினார்
June 18th, 12:32 pm
கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மாநாட்டின் இடையே அமெரிக்கா திரும்பியதையடுத்து அந்நாட்டு அதிபரின் வேண்டுகோளின் பேரில் இருதலைவர்களும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர். 35 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் திரு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் ஃபின்லாந்து குடியரசு அதிபர் திரு. அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசி வாயிலாக உரையாடினார்
April 16th, 05:45 pm
தற்போது நடைபெற்று வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்ததுடன், உறவை மேலும் வலுப்படுத்து வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள். பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast
March 16th, 11:47 pm
PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்
March 16th, 05:30 pm
லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 07th, 05:52 pm
பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜ் அவர்களே, மதிப்பிற்குரிய முனிவர்களே, சத்சங்க குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே, புகழ்பெற்ற பிரமுகர்களே, தாய்மார்களே, தாய்மார்களே!அகமதாபாத்தில் நடைபெற்ற கார்யகர் சுவர்ண மகோத்சவ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 07th, 05:40 pm
அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில்சார் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர், பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகராஜ், மதிப்பிற்குரிய துறவிகள், சத்சங்கி குடும்ப உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள், பிரதிநிதிகளை வரவேற்பதாகக் கூறினார். கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தை முன்னிட்டு பகவான் சுவாமி நாராயணரின் பாதங்களை வணங்குவதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, இந் தநாள் பிரமுக் சுவாமி மகாராஜின் 103-வது பிறந்த நாளும் கூட என்று குறிப்பிட்டார். பகவான் சுவாமி நாராயணரின் போதனைகள், பிரமுக் சுவாமி மகாராஜின் தீர்மானங்கள் ஆகியவை இன்று பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகாராஜின் கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் பலனளித்து வருகின்றன என்றும் அவர் கூறினார். இளைஞர்கள், குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ஏராளமானோர் பங்கேற்கும் இத்தகைய பிரமாண்டமான நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும், இந்த நிகழ்ச்சியின் ஆற்றலை உணர முடிகிறது என்று கூறினார். இந்த மகத்தான தெய்வீக விழாவிற்காக பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜை வாழ்த்துவதாக அவர் கூறினார்.ரஷ்ய அதிபருடனான இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம் (அக்டோபர் 22, 2024)
October 22nd, 07:39 pm
உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கசான் போன்ற அழகான நகரத்திற்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரம் இந்தியாவுடன் ஆழ்ந்த மற்றும் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. கசானில் ஒரு புதிய இந்திய தூதரகம் திறக்கப்படுவது இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.உக்ரைன் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
September 24th, 03:57 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 செப்டம்பர் 23 அன்று நியூயார்க்கில் எதிர்கால உச்சிமாநாட்டிற்கு இடையே, உக்ரைன் அதிபர் மேதகு திரு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership
September 22nd, 12:00 pm
President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
August 27th, 03:25 pm
22-வது இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் ரஷ்யாவுக்கு தான் மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்.