Andhra Pradesh has the potential to become the growth engine of a developed India: PM Modi

August 01st, 11:45 am

PM Modi launched and dedicated development projects worth around ₹18,000 crore in Andhra Pradesh, highlighting the state's emergence as a growth engine of Viksit Bharat. From world-class connectivity and logistics to semiconductors, AI, green energy and manufacturing, PM Modi outlined a vision to create jobs, attract investment and accelerate Andhra Pradesh's development.

ஆந்திரப் பிரதேசத்தின் போகபுரத்தில் ₹17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

August 01st, 11:30 am

'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) பயணத்தில் ஆந்திரப் பிரதேசம் ஒரு முக்கிய வளர்ச்சி மையமாக உருவெடுத்து வருவதை முன்னிலைப்படுத்தும் வகையில், சுமார் ₹18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டமைப்பு வசதிகள் முதல் செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை ஆற்றல் மற்றும் உற்பத்தித் துறை வரை பல்வேறு துறைகளில், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

India and Indonesia are connected not only by our history but also by a shared future: PM Modi at community programme in Jakarta

July 07th, 11:47 pm

Addressing the Indian community in Jakarta, PM Modi thanked the diaspora for their warm welcome and praised their contribution to Indonesia's progress and their role as a living bridge between the two nations. He spoke about India's rapid transformation and called upon the community to contribute towards the shared aspirations of Viksit Bharat 2047 and Indonesia Emas 2045.

ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றினார்

July 07th, 05:30 pm

ஜகார்த்தாவில் இந்தியச் சமூகத்தினர் தமக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்களது இந்தோனேசிய நண்பர்கள், பிரதமருக்கு உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்தோனேசிய அதிபர் மாண்புமிகு திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ராவில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

July 04th, 12:50 pm

இந்தக் கடும் வெயிலிலும், இத்தனை இடங்களில் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நீங்கள் கூடியிருந்து எங்களுக்கு ஆசி வழங்குவது, பி.ஜே.பி. அரசாங்கத்தின் முயற்சிகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ராஜஸ்தான் மண்ணின் இந்த ஆதரவுக்கும், பாசத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

July 04th, 12:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) ராஜஸ்தானின் பலோத்ராவில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த மாபெரும் மக்கள் திரளை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். அரசின் முயற்சிகளின் மீது வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த மகத்தான ஆதரவிற்காக, ராஜஸ்தான் மண்ணிற்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார்.

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு பிரதமர் நாளை பயணம்: நாட்டின் முதலாவது ஒருங்கிணைந்த பெட்ரோலியம் சுத்திகரிப்பு-பெட்ரோகெமிக்கல் பசுமை வளாகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

July 03rd, 11:25 am

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (04.07.2026) ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை சுமார் 10:45 மணிக்கு ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் அவர், ஜோத்பூரில் மேம்படுத்தப்பட்ட உடான் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக, மதியம் சுமார் 12:15 மணிக்கு பலோத்ரா செல்லும் பிரதமர், அங்கு சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் மக்களிடம் உரையாற்றுகிறார். அதன் பின்னர் குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், மாலை 4:30 மணியளவில் அகமதாபாத் சாணந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

விமான விலை நிர்ணயம் செய்வதற்காக, திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களுக்குக்கான விலை நிலைப்படுத்தல் நிதிக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

June 03rd, 03:12 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளுக்காக, விமான எரிபொருள் விலையை நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடிக்கு மிகாத ஒருமுறை நிதி ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மூலம், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு வட்டியில்லா முன்பணமாக வழங்கப்படும். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக, எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களை சந்திக்க விமான நிறுவனங்களுக்கு நிலையான விமான எரிபொருள் விலை நிர்ணயத்தை எளிதாக்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.

Uttar Pradesh has now emerged as one of the states with the highest number of international airports in India: PM Modi in Jewar

March 28th, 12:15 pm

PM Modi inaugurated Phase 1 of Noida International Airport at Jewar in Uttar Pradesh and said that the occasion marks a new chapter in the Viksit UP, Viksit Bharat Abhiyan. He noted that the government has resolved to make India self-reliant in the MRO sector. Highlighting the government’s achievements in recent weeks, even as the world grapples with the conflict in West Asia, he called for collective effort and national unity.

PM Modi inaugurates Phase I of Noida International Airport, developed with an investment of around ₹11,200 crore

March 28th, 12:00 pm

PM Modi inaugurated Phase 1 of Noida International Airport at Jewar in Uttar Pradesh and said that the occasion marks a new chapter in the Viksit UP, Viksit Bharat Abhiyan. He noted that the government has resolved to make India self-reliant in the MRO sector. Highlighting the government’s achievements in recent weeks, even as the world grapples with the conflict in West Asia, he called for collective effort and national unity.

Cabinet approves Regional Connectivity Scheme – Modified UDAN with a total outlay of Rs.28,840 crore

March 25th, 04:16 pm

The Union Cabinet, chaired by PM Modi, has approved the launch and implementation of the Regional Connectivity Scheme – Modified UDAN for a period of ten years from FY 2026-27 to FY 2035-36, with a total outlay of Rs. 28,840 crore. In line with the Viksit Bharat 2047 vision, this initiative will enhance regional air connectivity, boost economic growth, trade and tourism and promote the indigenous aerospace sector.

India is emerging as a major aviation gateway between the Global South and the world: PM Modi at the Wings India 2026

January 28th, 06:00 pm

Addressing the Wings India 2026 programme in Hyderabad, PM Modi said that India’s aviation sector has undergone a historic transformation over the past decade. He noted that the number of airports has increased from 70 in 2014 to over 160 today, and is expected to cross 400 by 2047. Highlighting India’s strengths, he pointed to its strategic location on global air corridors, an unmatched domestic feeder network, and the future expansion of long-haul fleets.

விங்ஸ் இந்தியா 2026: "உலகளாவிய விமான போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் இந்தியா"

January 28th, 05:45 pm

ஐதராபாத்தில் நடைபெற்ற 'விங்ஸ் இந்தியா 2026' மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றிய பிரதமர், கடந்த பத்தாண்டுகளில் இத்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைச் சந்தித்துள்ளதாகக் கூறினார். இந்தியா இன்று உலகின் மூன்றாவது மிகப்பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The new international airport and underground metro are set to transform travel and connectivity in Mumbai: PM Modi

October 08th, 03:44 pm

At the inauguration of Navi Mumbai International Airport and the launch of multiple development projects, PM Modi stated that today’s event continues the momentum of India’s development journey. He remarked that the then congress government halted the military response for 2008 Mumbai attacks due to pressure from a foreign country. He urged everyone to embrace swadeshi and proudly say, “This is swadeshi”.

நவிமும்பை சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்து, மும்பையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

October 08th, 03:30 pm

மகாராஷ்டிராவில், நவிமும்பை சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்து, மும்பையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள விமான நிலையம், ஆசியாவின் மிகப்பெரிய இணைப்புக்கான மையங்களில் ஒன்றாக இந்தப் பகுதியை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் கூறினார். முழுமையாக நிலத்தடியில் பயணிக்கும் மெட்ரோ சேவையை மும்பை தற்போது பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் மக்களுக்கு சுமூகமான பயணம் கிடைப்பதுடன், நேரமும் சேமிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Arunachal Pradesh is a confluence of peace & culture and the pride of India: PM Modi in Itanagar

September 22nd, 11:36 am

PM Modi launched development projects worth over ₹5,100 crore in Itanagar, Arunachal Pradesh. He highlighted new hydropower projects, improved connectivity, including Hollongi Airport and initiatives in health, education and women’s hostels. The PM praised the state’s patriotism and growing tourism, reaffirming his government’s commitment to rapid and inclusive development. He also noted how lower GST rates have sparked a GST Savings Festival, warmly welcomed by traders and retailers.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் ரூ.5,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்றத் திட்டங்களை தொடங்கிவைத்தார்

September 22nd, 11:00 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் 5,100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சர்வ வல்லமை கொண்ட டோனி போலோவுக்கு மரியாதை செலுத்தி, அனைவருக்கும் ஆசி கிடைக்க பிரார்த்தனை செய்தார்.

மிசோரமில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய முழுஉரையின் தமிழாக்கம்

September 13th, 10:30 am

மிசோரம் ஆளுநர் வி கே சிங் அவர்களே, முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மிசோரம் அரசின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே, மிசோரமின் அற்புதமான மக்களுக்கு வாழ்த்துகள்.

மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

September 13th, 10:00 am

மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

July 18th, 02:35 pm

மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி வி ஆனந்த போஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான ஹர்தீப் சிங் பூரி, சந்தானு தாக்கூர், சுகந்த மஜூம்தார் அவர்களே, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சௌமிக் பட்டாச்சார்யா, ஜோதிர்மய் சிங் மகத்தோ அவர்களே, ஏனைய மக்கள் பிரதிநிதிகளே, எனதருமை சகோதர சகோதரிகளே, வணக்கம்!