மகா கும்பமேளா குறித்து மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரை

March 18th, 01:05 pm

பிரயாக்ராஜில் நடைபெற்ற பிரம்மாண்டமான மகாகும்பமேளா குறித்த அறிக்கையை நான் இங்கு வழங்குகிறேன். இந்த மதிப்புமிக்க அவையின் வாயிலாக, மகாகும்பமேளாவை வெற்றியடையச் செய்த கோடிக்கணக்கான நாட்டுமக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். மகா கும்பமேளாவின் வெற்றியை உறுதி செய்வதில் பல தனிநபர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். அரசுக்கும், சமுதாயத்திற்கும், அர்ப்பணிப்புள்ள அனைத்து ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களுக்கும், உத்தரப்பிரதேச மக்களுக்கும், குறிப்பாக பிரயாக்ராஜ் மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு மக்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை

March 18th, 12:10 pm

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு மக்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மகாகும்பமேளாவின் மகத்தான வெற்றியை உறுதி செய்த நாட்டின் எண்ணற்ற மக்களுக்கு, தனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கூறினார். மகா கும்பமேளா நிகழ்வை வெற்றி பெறச் செய்ததில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் குழுக்களின் கூட்டுப் பங்களிப்பை எடுத்துரைத்த அவர், அரசு மற்றும் சமூகம் இரண்டில் இருந்தும் ஈடுபட்ட அனைத்து தர்ப்பினரின் அர்ப்பணிப்புமிக்க பணிகளை அங்கீகரித்து பாராட்டுத் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள்,குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில மக்கள் அளித்த ஆதரவுக்கு திரு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கங்கா தலாவோவிற்கு பிரதமர் பயணம்

March 12th, 05:26 pm

மொரீஷியஸில் உள்ள புனித கங்கா தலாவோவிற்கு சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு பிரார்த்தனை செய்தார். அத்துடன் இந்தியாவின் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வந்த புனித நீரை புனித தலத்தில் கலந்தார்.