சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

July 23rd, 08:22 am

சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். சந்திர சேகர் ஆசாதின் அச்சமற்ற துணிச்சலும், அசைக்க முடியாத தேசபக்தியும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

லோக்மான்ய திலகரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதைச் செலுத்தியுள்ளார்

July 23rd, 08:12 am

லோக்மான்ய திலகரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதைச் செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த ஆளுமையான லோக்மான்ய திலகர், தேசபக்தி உணர்வையூட்டி மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பல தலைமுறையினரை ஊக்குவித்தார் என்று அவர் கூறியுள்ளார்.

மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

July 19th, 10:55 am

மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அவரது துணிச்சலான வாழ்க்கை இன்றும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றும், அவரது வீர காவியம் தேசத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

When there is a government with the resolution of Nation First, then national heroes also get due respect: PM Modi

July 06th, 06:47 pm

PM Modi paid tribute to Dr. Syama Prasad Mookerjee on his 125th birth anniversary, saying his vision continues to inspire a united India. He recalled Dr. Mookerjee's firm opposition to Do Vidhan, Do Pradhan, Do Nishan and said the abrogation of Article 370 fulfilled his dream of complete national integration.

PM Modi addresses 125th Janma Jayanti of Dr. Syama Prasad Mookerjee

July 06th, 06:17 pm

PM Modi paid tribute to Dr. Syama Prasad Mookerjee on his 125th birth anniversary, saying his vision continues to inspire a united India. He recalled Dr. Mookerjee's firm opposition to Do Vidhan, Do Pradhan, Do Nishan and said the abrogation of Article 370 fulfilled his dream of complete national integration.

ராம் விலாஸ் பாஸ்வான் பிறந்த தினத்தில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

July 05th, 12:09 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (05.07.2026) முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்கு ராம்விலாஸ் பாஸ்வான் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார். பொதுச் சேவைக்கும் தேச சேவைக்குமான அவரது அர்ப்பணிப்புக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்

July 04th, 01:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (04.07.2026) சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், ஆன்மீக மரபுகள், தேசிய உணர்வு ஆகியவற்றிற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பு, நமது தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது ஆழ்ந்த ஞானமும் காலத்தால் அழியாத கொள்கைகளும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டும் சக்தியாகத் திகழ்கின்றன என்று பிரதமர் கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான தேசத்தின் கூட்டு உறுதிப்பாட்டிற்கு அவரது ஆன்மீகச் செய்தி தொடர்ந்து ஊக்கமளித்து, ஆற்றலூட்டும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஹுல் தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க போராளிகளுக்குப் பிரதமர் அஞ்சலி

June 30th, 06:10 pm

ஹுல் தினத்தை முன்னிட்டு, அந்நிய ஆட்சியின் அநீதிக்கு எதிராக உறுதியுடன் போராடிய சிடோ-கன்ஹு, சந்த்-பைரவ் மற்றும் பூலோ-ஜனோ போன்ற துணிச்சல்மிக்க போராளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பழங்குடியினரின் கண்ணியம் மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட போராட்டமும் தியாகமும், நாட்டு மக்களின் இதயங்களில் தொடர்ந்து புதிய எழுச்சியை ஊட்டும் என்று திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.

வீர் சாவர்க்கரின் பிறந்த தினத்தில், அவரை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்

May 28th, 09:52 am

வீர் சாவர்க்கரின் பிறந்த தினத்தையொட்டி இன்று அவரை நினைவுகூர்ந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரது துணிச்சல், தேசபக்தி, சமூக சீர்திருத்தத்திற்கான பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தினார்.

குஜராத்திலுள்ள சோம்நாத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

May 11th, 03:55 pm

சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வை குறித்தும், சோம்நாத் கோவில் மறுகட்டுமானத்தில் அவரது தீர்க்கமான பங்களிப்புக் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

February 19th, 08:48 am

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சிறந்த நிர்வாகி, உத்தியுடன் கூடிய சிந்தனையாளர், சுயராஜ்யத்திற்கான வீரராக திகழ்ந்த்தாகவும் அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவிற்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

February 11th, 10:19 am

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மாண்புகளில் வேரூன்றியுள்ள அவரது கோட்பாடுகளும், சிந்தனைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக தொடர்ந்து நீடிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்திக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

January 30th, 10:41 am

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்புள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாக விளங்கும் சுதேசி கொள்கைக்கு பாபு எப்போதும் வலுவான முக்கியத்துவம் அளித்தார் என்று திரு மோடி கூறினார். அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களைக் கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்கப்படுத்தும் என்று திரு மோடி கூறினார்.

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த தினத்தில், அவருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

January 17th, 10:17 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) பிறந்த தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

January 03rd, 08:16 am

இந்தியாவின் மிகவும் வீரமிக்க போர் வீராங்கனைகளில் ஒருவராகவும், துணிச்சலையும், போர்த்தந்திர திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்திப் புகழ்பெற்றவருமான ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

January 03rd, 08:07 am

இன்று சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, சேவை மற்றும் கல்வி மூலம் சமூக மாற்றத்திற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த முன்னோடியான சமூக சீர்திருத்தவாதியை நினைவுகூர்ந்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், வலிமை, நீதி, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதமாகவும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

December 30th, 10:10 am

1943-ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி, போர்ட் பிளேரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒப்பற்ற துணிச்சலுடனும் வீரத்துடனும் மூவண்ணக் கொடியை ஏற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.12.2025) நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திரமோடி அஞ்சலி

December 25th, 11:21 am

முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ பகுதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். அடல் அவர்களின் வாழ்க்கை பொதுச் சேவைக்கும் நாட்டுச் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது என்றும், அவர் எப்போதும் நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பார் என்றும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

December 25th, 08:43 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். நல்லாட்சிக்கும், நாட்டைக் கட்டமைப்பதற்கும் அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளார் என்று திரு மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஒரு சிறந்த பேச்சாளராக மட்டுமின்றி, ஒரு உணர்வுபூர்வ கவிஞராகவும் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது ஆளுமை, பணி, தலைமைத்துவம் ஆகிய பண்புகள் நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து வழிகாட்டியாகத் திகழும், என்று திரு மோடி கூறினார்.

முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

December 23rd, 09:39 am

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சௌத்ரி சரண் சிங்கின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் வளம் மற்றும் வேளாண் துறை வளர்ச்சிக்காகவும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.