Prime Minister pays tributes to Shri Atal Bihari Vajpayee ji at ‘Sadaiv Atal’

December 25th, 11:21 am

On the occasion of birth anniversary of former PM Vajpayee, PM Modi paid tributes at Sadaiv Atal. He stated that Atal ji’s life was dedicated to public service and national service, and that he will always continue to inspire the people of the country.

Prime Minister pays tributes to former Prime Minister Bharat Ratna Atal Bihari Vajpayee ji

December 25th, 08:43 am

The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to former Prime Minister Bharat Ratna Atal Bihari Vajpayee ji on his birth anniversary, today. Shri Modi stated that he dedicated his entire life to good governance and nation-building. He will always be remembered not only as an eloquent orator but also as a spirited poet. His personality, works, and leadership will continue to serve as a guiding path for the all-round development of the country, Shri Modi said.

Prime Minister pays tributes to former PM Chaudhary Charan Singh ji on his birth anniversary

December 23rd, 09:39 am

On the birth anniversary of Former PM Bharat Ratna Chaudhary Charan Singh, PM Modi lauded his dedication to the welfare of the deprived sections of society and farmers. The PM also remarked that the country can never forget his contributions to nation-building.

PM to visit Assam on 20-21 December

December 19th, 02:29 pm

PM Modi will visit Assam on 20-21 December to launch multiple development projects. In Guwahati, the PM will pay tribute to martyrs at Swahid Smarak Kshetra and also inaugurate the new terminal building of Lokapriya Gopinath Bardoloi International Airport. Additionally, the PM will perform the Bhoomipujan of the new brownfield Ammonia-Urea Fertilizer Project at Namrup, which will benefit farmers across the region.

தேசத்தின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பரம் வீர் காட்சிக்கூடத்திற்கு பிரதமர் வரவேற்பு

December 17th, 05:34 pm

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பரம் வீர் விருது பெற்றவர்களின் காட்சிக்கூடத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்கள், தேசத்தின் துணிச்சலான வீரர்களுக்குச் செலுத்தப்படும் மனமார்ந்த அஞ்சலி என்றும், அவர்களின் தியாகங்களுக்கு நாடு செலுத்தும் நன்றியின் அடையாளம் என்றும் அவர் கூறினார். தாய்நாட்டை தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து பாதுகாத்து, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்துள்ள அந்த வீரத் தளபதிகளை கௌரவிப்பதாக இந்த படங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.

வெற்றி தினத்தை முன்னிட்டு துணிச்சல் மிக்க வீரர்களுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

December 16th, 09:03 am

1971-ம் ஆண்டு இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உறுதிசெய்த வீரர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் வெற்றி தினத்தன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். அவர்களின் மன உறுதியும், தன்னலமற்ற சேவையும் நாட்டைப் பாதுகாத்து, இந்திய வரலாற்றில் பெருமை சேர்க்கும் தருணத்தைப் பதிவுசெய்ததாக திரு மோடி கூறியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75-வது நினைவு நாளில் அவருக்கு பிரதமர் மரியாதை

December 15th, 08:44 am

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75-வது நினைவு நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சர்தார் படேல் தமது முழு வாழ்க்கையையும் தேசத்தை ஒன்றிணைத்து, இந்தியாவை ஒற்றுமையின் ஒற்றை இழையாகப் பின்னுவதற்கு அர்ப்பணித்ததாக அவர் கூறியுள்ளார்.

2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்குப் பிரதமர் அஞ்சலி

December 13th, 11:46 am

2001-ம் ஆண்டு டிசம்பர் 13 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் போது, ​ நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த துணிச்சலான பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.12.2025) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

December 11th, 10:29 am

மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளான இன்று அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார் என்று திரு மோடி கூறியுள்ளார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க பாரதியார் பாடுபட்டார் என்றும் குறிப்பிட்டுள்ள பிரதமர் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் ஒப்பிலாதவை என்று தெரிவித்துள்ளார்.

ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

December 10th, 09:42 am

ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க அசாம் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவரின் துணிச்சலையும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நினைவு கூர்ந்தார்.

சி. ராஜகோபாலாச்சாரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

December 10th, 09:37 am

சி. ராஜகோபாலாச்சாரியின் பிறந்தநாளான இன்று (10.12.2025), பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனையாளர், அறிவுஜீவி, அரசியல்வாதி என பன்முக அடையாளம் கொண்ட அவரைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். 20-ம் நூற்றாண்டில் கூர்மையான அறிவுத் திறன் கொண்ட ஒருவராக ராஜாஜி திகழ்ந்தார் என்றும், அவர் மதிப்பையும், மனித கண்ணியத்தையும் நிலைநிறுத்துவதில் நம்பிக்கை கொண்டவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Today, India is becoming the key growth engine of the global economy: PM Modi

December 06th, 08:14 pm

In his address at the Hindustan Times Leadership Summit, PM Modi highlighted India’s Quarter-2 GDP growth of over 8%, noting that today’s India is not only transforming itself but also transforming tomorrow. Criticising the use of the term “Hindu rate of growth,” he said India is now striving to shed its colonial mindset and reclaim pride across every sector. The PM appealed to all 140 crore Indians to work together to rid the country fully of the colonial mindset.

Prime Minister Shri Narendra Modi addresses the Hindustan Times Leadership Summit 2025 in New Delhi

December 06th, 08:13 pm

In his address at the Hindustan Times Leadership Summit, PM Modi highlighted India’s Quarter-2 GDP growth of over 8%, noting that today’s India is not only transforming itself but also transforming tomorrow. Criticising the use of the term “Hindu rate of growth,” he said India is now striving to shed its colonial mindset and reclaim pride across every sector. The PM appealed to all 140 crore Indians to work together to rid the country fully of the colonial mindset.

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை

December 06th, 09:11 am

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

December 03rd, 09:11 am

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் செயல்மிக்க வீரராகவும், அரசியல் சாசன சபைக்கு தலைமை வகித்தவராகவும் இருந்தது முதல் நமது நாட்டின் முதலாவது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றது வரை இணையற்ற கண்ணியம், அர்ப்பணிப்பு மற்றும் தெளிவான நோக்கத்துடன் அவர் நமது நாட்டிற்கு சேவையாற்றியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். அவரது நீண்ட கால பொது வாழ்க்கை எளிமை, துணிச்சல் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்புடன் இருந்தது என்றும் அவரது சிறப்பான சேவை மற்றும் தொலைநோக்குப் பார்வை எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

Prime Minister expresses pride on the Unveiling of Dr. B.R. Ambedkar’s Bust at UNESCO Headquarters, Paris on Constitution Day

November 26th, 10:51 pm

The Prime Minister, Shri Narendra Modi, has expressed immense pride on the unveiling of a bust of Dr. Babasaheb Ambedkar at the UNESCO Headquarters in Paris on Constitution Day.

அரசியல் சாசன தினத்தையொட்டி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

November 26th, 10:15 am

அரசியல் சாசன தினத்தையொட்டி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்களுடைய தொலைநோக்குப் பார்வை வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதின் கூட்டு முயற்சியில் நாட்டிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை

November 25th, 09:56 am

ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-வது நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவரது இணையற்ற தீரம் மற்றும் உயர்ந்த தியாகத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

லச்சித் தினத்தையொட்டி லச்சித் போர்புகானுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

November 24th, 11:45 am

லச்சித் தினத்தையொட்டி லச்சித் போர்புகானை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, துணிச்சல், தேசபக்தி மற்றும் சிறந்த தலைமைத்துவத்தின் அடையாளமாக அவர் திகழ்ந்தார் என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

November 19th, 07:53 am

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.