பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு ஆண்டி பர்ன்ஹாமுக்கு பிரதமர் வாழ்த்து
July 21st, 08:09 am
பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு ஆண்டி பர்ன்ஹாமுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியா – பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தக் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 15th, 12:58 pm
இந்தியா – பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து, இது இந்தியா – பிரிட்டன் இடையேயான கூட்டாண்மையில் சிறந்த மைல்கல் என்று விவரித்துள்ளார். இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்தியா – பிரிட்டன் இடையே பொருளாதார தொடர்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் பகிரப்பட்ட இலக்குகளை தங்களுடைய மக்களுக்கான உறுதியான வாய்ப்புகளாக மாற்றும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம்
July 11th, 08:06 am
இந்திய, நியூசிலாந்து பிரதமர்கள் 11 ஜூலை 2026 அன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சந்தித்து, இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கும், இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பகிரப்பட்ட கட்டமைப்பாக, 2030-ம் ஆண்டுக்கான இந்த செயல்திட்டத்தை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர். இந்த உத்திசார் ஒத்துழைப்பானது, இந்த செயல்திட்டத்தின் பின்வரும் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், முன்முயற்சிகளை உள்ளடக்கியது.நியூசிலாந்தில், பிரதமர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்
July 11th, 08:03 am
இந்தியா - நியூசிலாந்து இடையே, கடல்சார் பாதுகாப்பு உட்பட பாதுகாப்புத் துறையில், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள், ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை மேம்படுத்துதல், நீரியல் ஆய்வு, கடல்சார் செயல்திட்டத் தயாரிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது என இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமருடன் இணைந்து பங்கேற்பு
July 09th, 12:29 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸுடன், மெல்பெர்னில் இன்று (2026 ஜூலை 9), மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அரசு மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அல்பானீஸ் சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.The Indo-Pacific represents the shared aspirations of like-minded democracies such as India and Australia: PM Modi at the Joint Press Meet
July 09th, 11:15 am
Addressing a joint press meet with Australian Prime Minister Anthony Albanese, PM Modi highlighted the expanding India-Australia Comprehensive Strategic Partnership. He also likened the India-Australia partnership to cricket, saying the agenda is One-Day focused, decisions are as fast as T20 and the partnership is as long and deep as a Test match.India-Australia Joint Statement on Energy Security
July 09th, 11:02 am
The India-Australia Joint Statement on Energy Security noted the two countries' deep concern over the situation in the Middle East. They shared their commitment to working together to strengthen energy supply chain resilience, including by deepening regional cooperation, accelerating the energy transition, promoting the uptake of renewable energy resources and upholding open trade arrangements for energy and liquid fuels.India and Indonesia are connected not only by our history but also by a shared future: PM Modi at community programme in Jakarta
July 07th, 11:47 pm
Addressing the Indian community in Jakarta, PM Modi thanked the diaspora for their warm welcome and praised their contribution to Indonesia's progress and their role as a living bridge between the two nations. He spoke about India's rapid transformation and called upon the community to contribute towards the shared aspirations of Viksit Bharat 2047 and Indonesia Emas 2045.ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றினார்
July 07th, 05:30 pm
ஜகார்த்தாவில் இந்தியச் சமூகத்தினர் தமக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்களது இந்தோனேசிய நண்பர்கள், பிரதமருக்கு உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்தோனேசிய அதிபர் மாண்புமிகு திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament
July 07th, 03:15 pm
Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:00 pm
ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்
July 07th, 02:51 pm
அரசுமுறைப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோ, அதிபர் மாளிகையில் இன்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்தியாவின் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் தலைமை விருந்தினராக, அதிபர் பிரபோவோ 2025 ஜனவரியில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்திற்குப் பின், இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.Democratic values and unity in diversity have always been the shared strengths of India and Indonesia: PM Modi at the India-Indonesia Joint Press Meet
July 07th, 11:21 am
Addressing a joint press meet with Indonesian President Prabowo Subianto in Jakarta, PM Modi spoke about the expanding India-Indonesia Comprehensive Strategic Partnership across sectors. He also announced that India and Indonesia will celebrate the centenary of Gurudev Rabindranath Tagore's historic visit to Indonesia. The PM expressed confidence that together both nations will realise the visions of Indonesia Emas and Viksit Bharat.இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை
July 06th, 09:00 am
2026 ஜூலை 6 முதல் 11 வரை இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளில் நான் பயணம் மேற்கொள்கிறேன்.ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ராவில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 12:50 pm
இந்தக் கடும் வெயிலிலும், இத்தனை இடங்களில் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நீங்கள் கூடியிருந்து எங்களுக்கு ஆசி வழங்குவது, பி.ஜே.பி. அரசாங்கத்தின் முயற்சிகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ராஜஸ்தான் மண்ணின் இந்த ஆதரவுக்கும், பாசத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
July 04th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) ராஜஸ்தானின் பலோத்ராவில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த மாபெரும் மக்கள் திரளை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். அரசின் முயற்சிகளின் மீது வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த மகத்தான ஆதரவிற்காக, ராஜஸ்தான் மண்ணிற்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார்.இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்குப் பிரதமர் பயணம்
July 03rd, 08:42 pm
இந்தோனேசிய அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஜூலை 6 முதல் 8 வரை இந்தோனேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது பிரதமரின் நான்காவது இந்தோனேசியப் பயணமாகவும், மே 2018-ல் இந்தியா, இந்தோனேசியா இடையிலான உறவுகள் விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் முதல் இருதரப்புப் பயணமாகவும் அமையும். இந்தப் பயணத்தின்போது, அதிபர் திரு பிரபோவோவுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், இந்தக் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்வார். ஜகார்த்தாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றுவார். இந்தியாவும் இந்தோனேசியாவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நெருக்கமான மக்கள் இடையிலான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தச் சிறப்பான பிணைப்புகளைப் போற்றும் வகையில், இந்தோனேசியாவில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தையும் பிரதமர் பார்வையிடுவார்.இந்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம், ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு இடையிலான எரிசக்தி மீள்திறன் குறித்த கூட்டறிக்கை
July 02nd, 10:04 pm
2026 ஜூலை 2 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் திருமிகு சனே தகாய்ச்சியும் புதுதில்லியில் சந்தித்துப் பேசினர். தற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆசியாவில் பொறுப்புள்ள சக்திகளாகவும், அதிக அளவில் எரிசக்தியைப் பயன்படுத்தும் இரு நாடுகளும், எரிசக்தி தொடர்பான மீள்தன்மையைக் கூட்டாக வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தங்கள் விருப்பத்தை தலைவர்கள் வெளிப்படுத்தினர்.Our vision is to make the Indian Ocean an Ocean of Opportunity: PM Modi at the India-Seychelles Joint Press Meet
June 28th, 02:02 pm
Addressing the India-Seychelles Joint Press Meet, PM Modi dedicated the Guardian of the Blue Horizon honour to all nations fighting climate change. Reaffirming the MAHASAGAR Vision, he said India envisions an Indian Ocean where prosperity grows with maritime security and partnerships are rooted in mutual respect and trust. He also highlighted the Blue Economy as a natural and strategic pillar of the India-Seychelles partnership.