Kaziranga is the soul of Assam and a priceless jewel of India’s biodiversity: PM Modi in Kaliabor

January 18th, 11:30 am

While performing the Bhoomi Poojan of the Kaziranga Elevated Corridor Project in Assam, PM Modi emphasized that Kaziranga is not just a National Park but the soul of Assam. He remarked that the corridor will improve connectivity between Upper Assam and Arunachal Pradesh, and along with new rail services, will open fresh opportunities for the people. He highlighted BJP’s recent victories in elections across the country, underscoring that voters are choosing good governance.

அசாம் மாநிலம் கலியாபூரில் ₹6,950 கோடி மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

January 18th, 11:00 am

அசாம் மாநிலம் கலியாபூரில் ₹6,950 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்கு (தேசிய நெடுஞ்சாலை-715-ன் கலியாபோர்-நுமலிகார் பிரிவின் 4-வழித்தடம்) பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2026) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, அசாமுக்கு வருகை தருவது எப்போதும் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். அசாமின் கலியாபோரின் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். இது காசிரங்கா தேசிய பூங்காவின் நுழைவாயிலாகவும், மேற்கு அசாமுக்கு இணைப்பு மையமாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கலியாபோரிலிருந்துதான் சிறந்த போர்வீரர் லச்சித் போர்புகான் முகலாய படையெடுப்பாளர்களை விரட்டியடித்தார் என்றும், அவரது தலைமையில் அசாம் மக்கள் துணிச்சல், ஒற்றுமை, உறுதி ஆகியவற்றுடன் முகலாய படையெடுப்பாளர்களைத் தோற்கடித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இது வெறும் ராணுவ வெற்றி மட்டுமல்ல எனவும், அசாமின் பெருமையின் அடையாளம் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். இப்பகுதி இப்போது வளர்ச்சிக்கான முக்கிய மையமாக மாறி வருவதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

வனஉயிரினப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

March 03rd, 12:36 pm

வன உயிரின பாதுகாப்பில் நாட்டின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில், புலிகள், சிறுத்தைகள் மற்றும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது அதன் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான நாட்டின் ஆழமான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 23rd, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.

தேர்தல் ஆணையம் அவ்வப்போது நமது வாக்குப்பதிவு செயல்முறையை பலப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’தின் போது (மனதின் குரல்)

January 19th, 11:30 am

In the 118th episode of Mann Ki Baat, PM Modi reflected on key milestones, including the upcoming 75th Republic Day celebrations and the significance of India’s Constitution in shaping the nation’s democracy. He highlighted India’s achievements and advancements in space sector like satellite docking. He spoke about the Maha Kumbh in Prayagraj and paid tributes to Netaji Subhas Chandra Bose.

கூட்டு முயற்சிகளுக்கு நன்றி. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது: பிரதமர்

December 03rd, 07:10 pm

புலிகளைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டார். இந்தியாவில் கூடுதலாக 57-வது புலிகள் சரணாலயம் அமைக்கப்படுவது இயற்கையை நேசிக்கும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது என்று அவர் கூறினார்.

'ஹர் கர் திரங்கா அபியான்' (வீடுதோறும் தேசியக் கொடி) மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

July 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!

மன் கீ பாத் (மனதின் குரல்): ‘மேரா பெஹ்லா வோட் – தேஷ் கே லியே’...(எனது முதல் வாக்கு, தேசத்துக்காக) பிரதமர் மோடி முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.

February 25th, 11:00 am

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் 110ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எப்போதும் போலவே, இந்த முறையும் உங்களுடைய பல்வேறு ஆலோசனைகள், உள்ளீடுகள், விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் எப்போதும் போலவே இந்த முறையும் கூட என்ன சவால் என்றால், இந்தப் பகுதியில் எவற்றையெல்லாம் இடம் பெறச் செய்வது என்பது தான். ஆக்கப்பூர்வமான உணர்வில் ஒன்றை ஒன்று விஞ்சிய உள்ளீடுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பல, மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதோடு கூடவே, தங்களுடைய வாழ்க்கையையும் மேலும் சிறப்பானதாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் நாட்டுமக்களைப் பற்றியவை.

Chhattisgarh is going to be Congress-free soon: PM Modi in Mungeli

November 13th, 12:00 pm

Ahead of the Assembly Election, PM Modi addressed an emphatic rally in Mungeli, Chhattisgarh. He said, “It is clear in the 1st phase of polling that Chhattisgarh is going to be Congress-free soon.” He added that he is thankful to the youth and the women of the state who voted in favor of the state’s development. PM Modi stated, “Victory for BJP in Chhattisgarh means rapid development, fulfilling dreams of youth, empowerment of women, and an end to rampant corruption.”

PM Modi addresses emphatic election rallies in Mungeli and Mahasamund, Chhattisgarh

November 13th, 11:20 am

Ahead of the Assembly Election, PM Modi addressed two massive public meetings in Mungeli and Mahasamund, Chhattisgarh. He said, “It is clear in the 1st phase of polling that Chhattisgarh is going to be Congress-free soon.” He added that he is thankful to the youth and the women of the state who voted in favor of the state’s development. PM Modi stated, “Victory for BJP in Chhattisgarh means rapid development, fulfilling dreams of youth, empowerment of women, and an end to rampant corruption.”

தான்சானியா ஐக்கியக் குடியரசு அதிபரின் இந்தியப் பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

October 09th, 12:00 pm

முதலாவதாக, இந்தியா வந்துள்ள அதிபர் மற்றும் அவரது பிரதிநிதிக் குழுவை நான் அன்புடன் வரவேற்கிறேன். தான்சானியா அதிபர் என்ற முறையில் அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். ஆனால் அவர் நீண்ட காலமாக இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் தொடர்புடையவர்.

15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

August 23rd, 03:30 pm

15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் எனது அன்பு நண்பர் அதிபர் ராமஃபோசாவுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை

July 28th, 09:01 am

வரலாறும் பண்பாடும் நிறைந்த சென்னைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்! யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரத்தைக் காண உங்களுக்கு சிறிது நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதன் மனம்கவரும் கற்சிற்பங்கள் மற்றும் சிறந்த அழகு கொண்ட இது, கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.

சென்னையில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை

July 28th, 09:00 am

சென்னை வந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், சென்னை நகரம் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு நிறைந்தது என்று குறிப்பிட்டார். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் சின்னமான மாமல்லபுரம் 'கட்டாயம் பார்க்க வேண்டிய' இடம் என்பதைக் கண்டுகளித்து மனம்கவரும் கற்சிற்பங்களையும் அதன் மகத்தான அழகையும் அனுபவிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் முயற்சிக்குப் பிரதமர் பாராட்டு

June 01st, 10:26 am

புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் நல்ல முயற்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அந்தக் குழுமம் வெளியிட்டுள்ள புலிகள் பற்றிய கீதத்தின் வீடியோவையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களின் முக்கிய காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

April 09th, 10:31 pm

பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி அதன் முக்கிய காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். புலிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், காவலர்கள், புலிகள் காப்பக முன்கள ஊழியர்கள் மற்றும் அனைவரின் கடின உழைப்பிற்கும் அவர் பாராட்டு தெரிவிதுள்ளார்.

புலிகள் கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சி

April 09th, 10:28 pm

புலிகள் கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Highlights of PM Modi’s Southern Sojourn to Telangana, Tamil Nadu and Karnataka

April 09th, 05:53 pm

PM Modi’s Southern Sojourn encompassed an action-packed tour of the three states of Telangana, Tamil Nadu, and Karnataka. He inaugurated and laid foundation stones for various projects across sectors of infrastructure, tourism, and health among others totalling about Rs. 19,000 crores. A special highlight of this trip is PM’s visit to the Bandipur and Mudumalai wildlife sanctuaries to commemorate the 50th anniversary of “Project Tiger”.

மைசூருவில் புலிகள் பாதுகாப்புத் திட்ட 50-ம் ஆண்டைக் குறிக்கும் வகையிலான நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

April 09th, 01:00 pm

இங்கு தாமதமாக வந்துள்ளதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். காலையில் 6 மணியளவில் நான் புறப்பட்டேன். வனப்பகுதியில் பயணம் மேற்கொண்டு சரியான நேரத்தில் இங்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன். உங்கள் அனைவரையும் காத்திருக்க வைத்தது குறித்து வருந்துகிறேன்.

கர்நாடகாவின் மைசூருவில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50-ம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்

April 09th, 12:37 pm

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச புலிகள் கூட்டமைப்பையும் (ஐபிசிஏ) பிரதமர் தொடங்கி வைத்தார். ”அமிர்த காலத்தில் புலிகளின் பாதுகாப்பு” என்ற புலிகள் காப்பக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டின் 5-வது பருவ அறிக்கைகளை வெளியிட்ட பிரதமர், புலிகளின் எண்ணிக்கையை அறிவித்ததோடு, அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் (5வது பருவ) அறிக்கையையும் வெளியிட்டார். புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.