ரஷ்ய அதிபருடனான சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை

September 01st, 01:24 pm

நான் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களை சந்திப்பதை எப்போதும் நினைவு கூரக்கூடிய அம்சமாக நான் உணர்கிறேன். பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பை இது அளித்துள்ளது.

சீனாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை சந்தித்தார்

September 01st, 01:08 pm

சீனாவில் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை இன்று (01.09.2025) சந்தித்துப் பேசினார். பொருளாதாரம், நிதி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இத்துறைகளில் இருதரப்பு உறவுகளில் நீடித்த வளர்ச்சிக் குறித்து, அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 01st, 10:14 am

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள தமக்கு உற்சாக வரவேற்பு அளித்து சிறப்பாக உபசரித்த சீன அதிபர் திரு ஜி ஜிங்பிங் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.

September 01st, 10:00 am

சீனாவின் தியான்ஜின் நகரில் 2025, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கான திட்டமிடல், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதிசார் ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக் குறித்து இக்கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்கிடையே, மியான்மர் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணைய தலைவர் திரு மின் ஆங் ஹலைங்குடன் பிரதமர் சந்திப்பு

August 31st, 04:50 pm

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளித்தல், கிழக்கு நோக்கிய கொள்கை, இந்தோ-பசிபிக் கொள்கைகள் ஆகிய இந்திய கொள்கைகளின் ஒரு பகுதியாக, மியான்மருடனான உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

தியான்ஜினில் சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குடனான இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

August 31st, 11:06 am

உங்களது அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு, கசானில் மிகவும் அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நேர்மறையான பாதையை அளித்தது. எல்லையில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமைதியும் ஸ்திரத்தன்மையும் கொண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதி மேலாண்மை குறித்து நமது சிறப்பு பிரதிநிதிகள் ஒரு புரிதலை எட்டியுள்ளனர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளும் தொடங்கப்படுகின்றன. நமக்கு இடையேயான ஒத்துழைப்பு நமது இரு நாடுகளின் 280 கோடி மக்களின் நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மனிதகுலத்தின் நலனுக்கும் வழி வகுக்கும். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம்.

பிரதமர் மோடி சீனாவின் தியான்ஜின் வந்தடைந்தார்

August 30th, 04:00 pm

பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு சீனா வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது, ​​அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புடின் மற்றும் பிற தலைவர்களை அவர் சந்திப்பார்.

அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

August 28th, 08:40 pm

ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், 15வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறேன்.

பிரதமரின் ஜப்பான் மற்றும் சீனா பயணம்

August 22nd, 06:15 pm

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 29–30, 2025 வரை ஜப்பானுக்கும், ஆகஸ்ட் 31–1, 2025 வரை சீனாவுக்கும் பயணம் மேற்கொள்வார். ஜப்பானில், பிரதமர் 15வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்று, ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் கலந்துரையாடுவார். சீனாவில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.

சீன வெளியுறவு அமைச்சர் திரு வாங் யி, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு

August 19th, 07:34 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான திரு. வாங் யியை இன்று சந்தித்தார்.