உலக மரியாதை சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியை கௌரவித்த இந்த 29 நாடுகள் - அதற்கான காரணம் இங்கே!
July 07th, 04:59 pm
குவைத், பிரான்ஸ், பப்புவா நியூ கினியா மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பிற நாடுகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமருக்கு தங்கள் மிக உயர்ந்த சிவிலியன் கௌரவங்களை வழங்கும்போது, அது இராஜதந்திர மரியாதையை விட அதிகமாக பிரதிபலிக்கிறது. இது ஒரு நாட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கு, மதிப்புகள் மற்றும் தலைமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரத்தைக் குறிக்கிறது.கூட்டறிக்கை: இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு முறை குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
December 22nd, 07:46 pm
குவைத் நாட்டின் அமீரான ஷேக் மெஷல் திரு.அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவர் குவைத் செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 21, 2024 அன்று குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் மேதகு அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் 'கௌரவ விருந்தினராகக்' கலந்து கொண்டார்.குவைத்தின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் பிரதமர்
December 22nd, 04:37 pm
குவைத்தின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா பிரதமருக்கு இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார். குவைத் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.