உலக மரியாதை சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியை கௌரவித்த இந்த 29 நாடுகள் - அதற்கான காரணம் இங்கே!

July 07th, 04:59 pm

குவைத், பிரான்ஸ், பப்புவா நியூ கினியா மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பிற நாடுகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமருக்கு தங்கள் மிக உயர்ந்த சிவிலியன் கௌரவங்களை வழங்கும்போது, ​​அது இராஜதந்திர மரியாதையை விட அதிகமாக பிரதிபலிக்கிறது. இது ஒரு நாட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கு, மதிப்புகள் மற்றும் தலைமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரத்தைக் குறிக்கிறது.

கானா குடியரசின் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை

July 03rd, 03:45 pm

ஜனநாயகம், கண்ணியம் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு நிலமான கானாவில் இருப்பது ஒரு பாக்கியம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 1.4 பில்லியன் இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துகளையும் நான் என்னுடன் கொண்டு வருகிறேன்.

பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

July 03rd, 03:40 pm

கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர் திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை இது பிரதிபலித்தது.

“தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா” விருதை ஏற்றுக்கொண்டு பிரதமர் தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்

July 03rd, 02:15 am

கானாவின் தேசிய விருதான தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா விருது கானா அதிபரால் வழங்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

கானாவின் உயரிய விருதை பிரதமர் பெற்றுக் கொண்டார்

July 03rd, 02:12 am

கானா அதிபர் திரு ஜான் டிராமணி மகாமா, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று கானாவின் தேசிய விருதான 'ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்' விருதை வழங்கினார். 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்த விருதை இந்திய இளைஞர்களின் விருப்பங்களுக்கும், அதன் கலாச்சார மரபுகள், பன்முகத்தன்மைக்கும், கானாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கும் அர்ப்பணிப்பதாக கூறினார்.