பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்

May 17th, 03:45 am

நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.

இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் 2026-2030-ன் முக்கிய அம்சங்கள்

May 17th, 03:15 am

பிரதமர் திரு நரேந்திர மோடியும், நெதர்லாந்துப் பிரதமர் திரு ராப் ஜெட்டனும், 2026 மே 16 அன்று ஹேக்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள், கூட்டுச் செயல் திட்டங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா-நெதர்லாந்து இருதரப்பு உறவை ஒரு உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இதன் பொருட்டு, இந்தியாவும் நெதர்லாந்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2026-2030) இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டன.

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்

May 17th, 02:35 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹேக்கில் உள்ள நெதர்லாந்துப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நெதர்லாந்து பிரதமர் திரு. ராப் ஜெட்டனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர், நெதர்லாந்தின் மாண்புமிகு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்சிமா ஆகியோரைச் சந்தித்தார்

May 16th, 08:13 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹேக்கில் உள்ள ஹுயிஸ் டென் போஷ் அரண்மனையில், நெதர்லாந்தின் மாண்புமிகு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்சிமா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

நெதர்லாந்து இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 16th, 01:30 pm

தி ஹேக் நகரம் உலகம் முழுவதும் அமைதி மற்றும் நீதிக்கான நகரம் என்று அறியப்பட்டாலும், இன்றைய இங்குள்ள சூழலைப் பார்க்கும்போது, அந்த நகரம் இந்திய நட்புறவின் வாழும் அடையாளமாக மாறிவிட்டது போல் தோன்றுகிறது!

நெதர்லாந்தில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

May 16th, 01:20 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.05.2026) நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற இந்திய சமூகத்தினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிரதமர் நெதர்லாந்து சென்றடைந்ததும், அங்கு உள்ள இந்திய வம்சாவளியினர் பெருந்திரளானோர் அவருக்கு அன்பான, உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு, அது குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கிறார்கள்: பிரதமர் மோடி

June 27th, 10:51 pm

நெதர்லேண்டில் இந்திய சமூகத்தின் இடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் பேசும் போது, நெதர்லேண்டு மற்றும் ஸுரிநேம்-ல் உள்ள இந்திய சமூகத்தின் பங்களிப்பை பாராட்டினார். மொத்த ஐரோப்பாவில், இரண்டாவது பெரிய இந்திய சமூகம் நெதர்லேண்டில் வாழ்வதாக கூறினார்.

PM interacts with Indian community in the Netherlands

June 27th, 10:50 pm

Prime Minister Narendra Modi today interacted with Indian community in the Netherlands. During his address, PM Modi appreciated the role of Indian diaspora in Netherlands and Suriname. He noted that Netherlands had the second largest Indian diaspora in entire Europe.

பிரதமர் மோடி நெதர்லேண்டு அரசி மேக்ஸிமா மற்றும் அரசர் வில்லெம்-அலெக்ஸாண்டரை சந்தித்தார்

June 27th, 09:26 pm

வில்லா எய்கென்ஹோர்ஸ்ட், நெதர்லேண்டில், பிரதமர் நரேந்திர மோடி, அரசி மேக்ஸிமா மற்றும் அரசர் வில்லெம்-அலெக்ஸாண்டரை சந்தித்தார்.

நெதர்லேண்டு பயணத்தின் போது பிரதமரின் பத்திரிகை அறிக்கை

June 27th, 04:09 pm

இரு தரப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் நெதர்லேண்டு பிரதமர் ருட்டே அலசினர். கூட்டு பத்திரிகை அறிக்கையின் போது, பிரதமர் மோடி, “உலகம் ஒன்றை ஒன்று சார்ந்தும், இணைந்தும் உள்ளது. இரு தரப்பு விஷயங்கள், மற்றும் உலகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்ப்போம்,” என்றார். நெதர்லேண்ட்-ஐ இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு இயற்கை கூட்டாளி என்று குறிப்பிட்ட பிரதமர், அதிகரிக்கும் வர்த்தக உறவுகளை அடிக்கோடிட்டு காட்டினார்.

கேட்ஷுய்ஸ், ஹேக்-ல் டட்ச் பிரதமர் மார்க் ருட்டே உடன் பிரதமர் மோடி பேச்சு

June 27th, 04:08 pm

கேட்ஷுய்ஸ், ஹேக், நெதர்லேண்டி-ல் டட்ச் பிரதமர் மார்க் ருட்டே உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. இரு தரப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்து ஆலோசித்தனர். சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஆன உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.