உலக மரியாதை சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியை கௌரவித்த இந்த 29 நாடுகள் - அதற்கான காரணம் இங்கே!

July 07th, 04:59 pm

குவைத், பிரான்ஸ், பப்புவா நியூ கினியா மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பிற நாடுகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமருக்கு தங்கள் மிக உயர்ந்த சிவிலியன் கௌரவங்களை வழங்கும்போது, ​​அது இராஜதந்திர மரியாதையை விட அதிகமாக பிரதிபலிக்கிறது. இது ஒரு நாட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கு, மதிப்புகள் மற்றும் தலைமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரத்தைக் குறிக்கிறது.

தேசிய தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் உயரிய சிவில் விருது வழங்கப்பட்டது

March 12th, 03:12 pm

மொரீஷியஸ் குடியரசின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இண்டியன் ஓஷன் விருதினை ஏற்றுக் கொண்டு பிரதமர் ஆற்றிய உரை

March 12th, 03:00 pm

மொரீஷியஸின் மிக உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது கௌரவம் மட்டுமல்ல, இது 140 கோடி இந்தியர்களின் கௌரவம் ஆகும். இந்தியா-மொரீஷியஸ் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார, வரலாற்று ரீதியிலான நல்லுறவுக்கு இந்த விருது மரியாதை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிராந்திய அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் இவ்விரு நாடுகளின் நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. உலக அளவில் தென் பகுதியில் உள்ள நாடுகளின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களின் அடையாளமாகவும் இந்த விருது திகழ்கிறது. இந்த விருதை பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து மொரீஷியஸ் நாட்டுக்கு வந்து வசித்து வரும் மூதாதையர்களும், அவர்களின் அனைத்து தலைமுறைகளுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். தங்கள் கடின உழைப்பின் மூலம், மொரீஷியஸ் நாட்டின் வளர்ச்சியில் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதி, அதன் பன்முகத்தன்மைக்கு அவர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த கௌரவத்தை ஒரு பொறுப்பாகவும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியா-மொரீஷியஸ் இடையே நல்லுறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று எங்களது நிலைப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.