தாய்லாந்து முன்னாள் பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு
April 03rd, 08:50 pm
தாய்லாந்து முன்னாள் பிரதமர் திரு. தக்சின் ஷினவத்ராவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாங்காக்கில் சந்தித்தார். பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பல துறைகளில் இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஒத்துழைப்பின் மகத்தான வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.