Prime Minister congratulates Mr. Anutin Charnvirakul on his election as Prime Minister of the Kingdom of Thailand

March 20th, 02:11 pm

PM Modi extended his heartiest congratulations to Anutin Charnvirakul on his election as the Prime Minister of the Kingdom of Thailand. The PM noted that ties between the two nations are deeply rooted in shared civilizational heritage, close cultural connections and vibrant people-to-people ties. He underscored that India and Thailand remain united in their shared aspirations.

India is not only the custodian of the sacred relics of Bhagwan Buddha, but also a living carrier of that timeless tradition: PM Modi

January 03rd, 12:00 pm

PM Modi inaugurated the Grand International Exposition of Sacred Piprahwa Relics related to Bhagwan Buddha, highlighting his close connection with Buddhist pilgrim sites. The PM noted that wherever the sacred relics of Bhagwan Buddha travelled in recent months, waves of faith and devotion were witnessed. Listing various initiatives undertaken by the government to preserve Buddhist heritage, he highlighted that Pali has been accorded the status of a classical language.

பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

January 03rd, 11:30 am

புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில், ஒளி மற்றும் தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில், பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நூற்று இருபத்தைந்து ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவின் பாரம்பரியம் திரும்பியுள்ளது, இந்தியாவின் மரபு மீண்டும் வந்துள்ளது என்று குறிப்பிட்டார். இன்று முதல் இந்திய மக்கள் புத்தரின் இந்த புனித நினைவுச்சின்னங்களைக் கண்டு அவரது ஆசிகளைப் பெற முடியும் என்று அவர் கூறினார். இந்த மங்களகரமான நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களையும் திரு மோடி வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த மங்களகரமான கொண்டாட்டம் மிகவும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். புத்தரின் ஆசீர்வாதங்களுடன், 2026-ம் ஆண்டு உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்கட்டும் என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

தாய்லாந்து ராஜமாதா ராணி சிரிகிட் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

October 26th, 03:39 pm

தாய்லாந்து ராஜமாதா ராணி சிரிகிட் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில், பொது சேவைக்கு அரசி தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பங்காற்றியமைக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது மரபு உலகம் முழுவதும் உள்ள தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

September 24th, 06:33 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று மாலை மணி 6.15 அளவில் நடைபெறும் உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 29th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.

எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 23rd, 11:00 am

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் பல்லா அவர்களே, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பேமா காண்டு அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சஹா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் அவர்களே, நாகாலாந்து முதலமைச்சர் திரு நெய்பியு ரியோ அவர்களே, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, அனைத்து தொழில் துறை தலைவர்களே, முதலீட்டாளர்களே, பெண்களே, தாய்மார்களே வணக்கம்!

பிரதமர் திரு. நரேந்திர மோடி, எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார்

May 23rd, 10:30 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பாரத் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை நினைவு கூர்ந்த அவர், இன்றைய நிகழ்வு வடகிழக்கில் முதலீட்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். இந்த உச்சிமாநாட்டிற்கு தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வருகையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். அனைத்து அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு செழிப்பான முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், செழிப்புக்குமான தமது உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார்.

இந்தியா-தாய்லாந்து உத்திசார் கூட்டாண்மையை நிறுவுவதற்கான கூட்டுப் பிரகடனம்

April 04th, 07:29 pm

2025 ஏப்ரல் 03-04 தேதிகளில், இந்திய பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடி தாய்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, தாய்லாந்து பிரதமர் மேதகு திருமிகு பெடோங்டார்ன் ஷினவத்ரா அவர்களின் அழைப்பின் பேரில் பாங்காக்கில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். பாங்காக்கில் உள்ள அரசு இல்லத்தில் பிரதமர் திரு மோடிக்கு திருமிகு ஷினவத்ரா பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார்.

தாய்லாந்து மன்னர் மற்றும் அரசியுடன் பிரதமர் சந்திப்பு

April 04th, 07:27 pm

தாய்லாந்து அரசர் மஹா வஜிரலோங்கோர்ன் ஃபிரா வஜிராக்லாவ் சாவோயுஹுவா மற்றும் மேதகு அரசி சுதிடா பஜ்ரசுதாபிமலலக்ஷனா ஆகியோரை பாங்காக்கில் உள்ள துசித் அரண்மனையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு இடையே நேபாள பிரதமரை, பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்

April 04th, 04:17 pm

பாங்காக்கில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு இடையே, நேபாள பிரதமர் திரு கே.பி. சர்மா ஒலியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கிடையே வங்கதேசத்தின் முதன்மை ஆலோசகரைப் பிரதமர் சந்தித்தார்

April 04th, 03:49 pm

பாங்காக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கிடையே வங்கதேச இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுசை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

Prime Minister’s visit to Wat Pho

April 04th, 03:36 pm

PM Modi with Thai PM Paetongtarn Shinawatra, visited Wat Pho, paying homage to the Reclining Buddha. He offered ‘Sanghadana’ to senior monks and presented a replica of the Ashokan Lion Capital. He emphasized the deep-rooted civilizational ties between India and Thailand, strengthening cultural bonds.

எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிகளின் பட்டியல் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

April 04th, 02:32 pm

ஒவ்வொரு ஆண்டும் பிம்ஸ்டெக் வர்த்தக உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்துதல்.

பூடான் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

April 04th, 01:30 pm

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் இடையே, பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 04th, 12:59 pm

இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக தாய்லாந்துப் பிரதமர் ஷினவத்ராவுக்கும் தாய்லாந்து அரசுக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

April 04th, 12:54 pm

தாய்லாந்தில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி) உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உச்சிமாநாட்டின் கருப்பொருள் – பிம்ஸ்டெக்: வளமான, உறுதியான மற்றும் வெளிப்படையானது என்பதாகும். தலைவர்களின் முன்னுரிமைகளையும், பிம்ஸ்டெக் பிராந்திய மக்களின் விருப்பங்களையும், உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணத்தில் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வளர்ச்சியை உறுதி செய்வதில் பிம்ஸ்டெக்கின் முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.

பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் முன்மொழிந்துள்ளார்

April 04th, 12:53 pm

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய 21 அம்ச செயல் திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார். பிம்ஸ்டெக் நாடுகள் முழுவதும் வணிகத்தை ஊக்கப்படுத்துவது பற்றி குறிப்பிட்டுள்ள அவர், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளமான திறனை பயன்படுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார். அண்மையில் மியான்மரையும், தாய்லாந்தையும் பாதித்த நிலநடுக்க பின்னணியில் இயற்கை சீற்ற மேலாண்மை துறையில் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். விண்வெளி உலகத்தில் பணியாற்றுவது குறித்தும், பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவது குறித்தும் திரு மோடி எடுத்துரைத்துள்ளார். பிம்ஸ்டெக் அமைப்பை கூட்டாக ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், தலைமை ஏற்பதில் இளைஞர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். கலாச்சார பிணைப்புகள் பிம்ஸ்டெக் நாடுகளை மேலும் நெருக்கமாகக் கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு இடையே, மியான்மர் நிர்வாகக் குழுவின் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்குடன் பிரதமர் சந்திப்பு

April 04th, 09:43 am

பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் இடையே, மியான்மர் நிர்வாகக் குழுவின் தலைவரான மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.04.2025) சந்தித்தார்.

தாய்லாந்து அரசின் ராமகீன் சுவரோவியங்களை சித்தரிக்கும் ஐஸ்டாம்ப் வெளியீட்டை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

April 03rd, 09:14 pm

தாய்லாந்து அரசு ராமகீன் சுவரோவியங்களை சித்தரிக்கும் ஐஸ்டாம்ப் வெளியீட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.