காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்
August 10th, 09:30 am
இந்தியாவின் காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 12 முதல் 13 ஆண்டுகால தனது பதவிக்காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களைத் தனது இல்லத்தில் வரவேற்பது வழக்கமான மகிழ்ச்சிக்குரிய மரபு என்று கூறினார். நாட்டின் வெற்றிக்காக இந்திய விளையாட்டு வீரர்களுடைய அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளும், தொடர் வெற்றிகளும் வழக்கமான அறிவுரையைவிட பள்ளி மாணவர்களுக்கு மேலும் திறன்மிக்க வகையில் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார். தாங்கள் பள்ளிக்குச் சென்று, உரையாற்றுவதைவிட அவர்களுடைய பதக்கம் மாணவர்களை மேலும் ஊக்குவிப்பதாகத் திரு மோடி கூறினார்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்குப் பிரதமர் வாழ்த்து
August 01st, 08:43 am
கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், கோடை வெப்பத்தைத் தணிப்பதற்கான ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொள்கிறார், மேலும் குடிமக்களை நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
May 31st, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது. இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 03rd, 11:34 pm
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று தந்த தேஜஸ்வின் ஷங்கருக்கு பிரதமர் வாழ்த்து
August 04th, 09:55 am
உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று தந்த தேஜஸ்வின் ஷங்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம் காமன்வெல்த் போட்டிகள் 2022-ன் தடகளப் பிரிவில் இந்தியா தனது முதல் பதக்கத்தைக் கைபற்றியுள்ளது.