ஜப்பான்-இந்தியா வர்த்தக ஒத்துழைப்புக் குழு பிரதிநிதிகள் பிரதமர் திரு. மோடியைச் சந்தித்தனர்
March 05th, 07:52 pm
புதுதில்லியில் இன்று (2025 மார்ச் 6) நடைபெறவுள்ள ஜப்பான் – இந்தியா வர்த்தக ஒத்துழைப்புக் குழுவுடன் இந்திய வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் 48-வது கூட்டுக் கூட்டம் குறித்து திரு. யசுனாகா பிரதமரிடம் விளக்கினார். இந்தியாவில் குறைந்த செலவில் உயர்தரமான பொருட்களை உற்பத்தி செய்தல், ஆப்பிரிக்கா மீது சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் உலக சந்தைகளுக்கான உற்பத்தியை விரிவுபடுத்துதல், மனிதவள மேம்பாடு மற்றும் பரிமாற்றங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து இந்த விவாதங்கள் நடைபெற்றன.திரு. டாட்சுவோ யசுனாகா தலைமையிலான ஜப்பானிய வர்த்தகக் குழுவினருடன் பிரதமர் சந்திப்பு
March 05th, 07:47 pm
திரு. டாட்சுவோ யசுனாகா தலைமையிலான ஜப்பானிய வர்த்தக பிரதிநிதிக் குழுவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இந்தியாவில் அவர்களின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் 'இந்தியாவில் தயாரித்தல், உலகிற்காக தயாரித்தல்' என்பதில் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவை தமக்கு ஊக்கமளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.