நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 18th, 08:45 pm
இன்று நான் ஒரு மிக முக்கியமான விசயத்தைப் பற்றி பேச வந்திருக்கிறேன், குறிப்பாக நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களிடம்! மகளிர் சக்தியின் எழுச்சி எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர்களின் கனவுகள் ஈவுஇரக்கமின்றி நசுக்கப்பட்டுள்ளன. எங்களது பெரும் முயற்சிகளையும் மீறி, எங்களால் வெற்றி பெற முடியவில்லை, மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற முடியவில்லை! இதற்காக அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
April 18th, 08:30 pm
இந்தியாவின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் தொடர்பான மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், பெண்களின் முன்னேற்றம் தடைபட்டிருப்பது குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். அரசின் முழுமையான மற்றும் நேர்மையான முயற்சிகள் இருந்தபோதிலும், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா நிறைவேறத் தவறியதன் மூலம், பெண்களின் நியாயமான கனவுகள் நசுக்கப்பட்டுவிட்டன என்று அவர் வேதனை தெரிவித்தார். இந்த மோசமான விளைவுக்காக நாட்டின் அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்று திரு மோடி கூறினார்.Prime Minister calls on Vice President of India, Shri C. P. Radhakrishnan
April 14th, 10:35 am
The Prime Minister, Shri Narendra Modi, called on the Vice President of India, Thiru C. P. Radhakrishnan, and conveyed greetings on the special occasion of Puthandu.Let us work together to realize the dream of a prosperous Malaysia and a developed India: PM Modi at India - Malaysia Joint Press Meet
February 08th, 08:35 am
In the joint press meet with Malaysian PM Anwar Ibrahim, PM Modi highlighted his first foreign visit of 2026 to Malaysia. Welcoming the deepening ties between India and Malaysia across sectors, the PM emphasised that these steps will make life easier for citizens of both countries. He reiterated his commitment to development, peace and stability in the entire Indo-Pacific region along with ASEAN.பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா - மலேசியா கூட்டு அறிக்கை
February 08th, 08:30 am
மலேசியப் பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 பிப்ரவரி 7 முதல் 8 வரை மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக தொடர்புகளின் அடிப்படையில் ஆழமான வேரூன்றிய நட்பு, மக்களுக்கு இடையேயான நீடித்த உறவுகளைப் பிரதிபலித்தது. இந்தியா-மலேசியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து விரிவுபடுத்துவதற்கான இரு தலைவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.Indian diaspora in Malaysia acts as a living bridge between the two countries PM Modi at the community programme in Kuala Lumpur
February 07th, 03:59 pm
PM Modi participated and addressed a community programme in Malaysia. In his address, the PM lauded the Indian diaspora in Malaysia for being a living bridge between the two countries, describing the India–Malaysia relationship as IMPACT. Having already established the Thiruvalluvar Chair at the University of Malaya, the PM announced the setting up of a Thiruvalluvar Centre in Malaysia.மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 07th, 03:15 pm
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், பகிரப்பட்ட கலாச்சாரத்தின் அழகிய பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். சமூக கொண்டாட்டத்தில் இணைந்ததற்காக தனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்தார்.திரு டி. ஞானசுந்தரம் அவர்களின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
January 26th, 09:48 pm
திரு டி. ஞானசுந்தரத்தின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.Tamil culture is a shared heritage of the entire nation: PM Modi at Pongal Celebration in Delhi
January 14th, 11:00 am
Continuing his efforts to popularise Tamil culture across the globe, PM Modi participated and addressed the Pongal celebrations in New Delhi. The PM noted that Thirukkural contains extensive writings on agriculture and farmers and underscored that the government is working towards empowering farmers. He emphasized that the spirit of ‘Ek Bharat Shreshtha Bharat’ is further strengthened by festivals like Pongal.புதுதில்லி பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 14th, 10:45 am
புதுதில்லியில் இன்று (2026 ஜனவரி 14) நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். தமிழில் வாழ்த்து தெரிவித்த திரு மோடி, பொங்கல் இன்று உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். தமிழ்ச் சமூகத்தினராலும், உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றுவோராலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் சிறப்புமிக்க இந்தப் பண்டிகையை அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவர் கூறினார். தமிழர் வாழ்வில், பொங்கல் ஓர் இனிமையான அனுபவமாகும். பூமிக்கும் சூரியனுக்கும் விவசாயிகளின் உழைப்புக்கும் நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், இயற்கை, குடும்பம் மற்றும் சமூகத்தில் சமநிலையை நோக்கி நம்மை அது வழிநடத்துகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளும் லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு மற்றும் பிற பண்டிகைகளின் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும்: பிரதமர் மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில்
December 28th, 11:30 am
ஆண்டின் இறுதி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், 2025 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உலகளாவிய தளங்களில் இந்தியா தனது முத்திரையைப் பதித்ததாக பிரதமர் மோடி கூறினார். 2026 ஆம் ஆண்டில் புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறத் தயாராக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல், வினாடி வினா போட்டி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
July 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.இலங்கை தமிழ் சமூகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு
April 05th, 10:48 pm
இலங்கைத் தமிழ் சமூகத் தலைவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொழும்பில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மதிப்பிற்குரிய தமிழ் தலைவர்களான இரா.சம்பந்தன், திரு மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
December 11th, 02:00 pm
மத்திய அமைச்சர்கள் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, எல். முருகன் அவர்களே, இந்த நிகழ்ச்சியின் முக்கியப் பிரமுகர், இலக்கிய அறிஞர் திரு. சீனி விஸ்வநாதன் அவர்களே, பதிப்பாளர் வி. சீனிவாசன் அவர்களே, வந்திருக்கும் மதிப்புமிக்க பிரமுகர்களே.தமிழின் மகத்தான கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார்.
December 11th, 01:30 pm
மகத்தான கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் இன்று வெளியிட்டார். மாபெரும் தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய திரு மோடி, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கும், இந்திய சுதந்திரப் போராட்ட நினைவுகளுக்கும், தமிழ்நாட்டின் பெருமைக்கும் இன்று ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் படைப்புகளின் சிறப்பான வெளியீட்டு விழா இன்று நிறைவடைந்தது என்றும் அவர் கூறினார்.சுப்பிரமணிய பாரதிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
December 11th, 10:27 am
கவிஞரும், எழுத்தாளருமான சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.மாபெரும் தமிழ்க் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்பை 2024, டிசம்பர் 11 அன்று பிரதமர் வெளியிடுகிறார்
December 10th, 05:12 pm
மாபெரும் தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்கில் டிசம்பர் 11 அன்று பிற்பகல் 1 மணியளவில் வெளியிடுகிறார்.இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரை
October 14th, 08:15 am
இந்த முக்கியமான தருணத்தில் உங்களுடன் இணைவது எனது பெரும்பேறாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜீய மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் தொடங்குகிறோம். நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை தொடங்கப்பட்டிருப்பது நமது உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையைத் தொடங்கி வைத்துப் பிரதமர் உரையாற்றினார்
October 14th, 08:05 am
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
July 21st, 12:13 pm
அதிபர் விக்கிரமசிங்க மற்றும் அவரது தூதுக்குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபர் விக்கிரமசிங்க பதவியேற்று ஓராண்டு இன்று நிறைவு பெறுகிறது. இந்த தருணத்தில், நம் அனைவரின் சார்பிலும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஓராண்டு இலங்கை மக்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருந்தது. ஒரு நெருங்கிய நண்பர் என்ற முறையில் எப்போதும் போல, இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் தோளோடு தோள் நிற்கிறோம். இந்த சவாலான சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொண்ட இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.