அடர்த்தியாக்கப்பட்ட அரிய புவி நிரந்தர காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் ரூ.7,280 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
November 26th, 04:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (26 நவம்பர் 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.7280 கோடி நிதி ஒதுக்கீட்டில் 'அடர்த்தியாக்கப்பட்ட அரிய புவி நிரந்தர காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு' ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த அரிய புவி நிரந்தர காந்த (ஆர்இபிஎம்) உற்பத்தியை நிறுவுவதை இந்த முதல்முறை முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தற்சார்பை மேம்படுத்தி, உலகளாவிய ஆர்இபிஎம் சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடாக நிலைநிறுத்த முடியும்.ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமரைச் சந்தித்துப் பேசினார்
November 23rd, 09:44 pm
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமிகு ஜார்ஜியோ மெலோனி-ஐ சந்தித்துப் பேசினார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கனடாவில் உள்ள கானனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.ஜி20 உச்சிமாநாட்டின் 3-வது அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 23rd, 04:05 pm
தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அது தொடர்பான வாய்ப்புகள், வளங்கள் இரண்டும் ஒரு சிலரின் கைகளில் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும், முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கு கவலை அளிக்கும் விஷயம். மேலும் இது புதுமைக்கும் ஒரு தடையாக அமைகிறது. இதை நிவர்த்தி செய்ய, நமது அணுகுமுறையில் ஒரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.'அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்' என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
November 23rd, 04:02 pm
'அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்' - முக்கிய கனிமங்கள்; சிறந்த வேலை; செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வில் பிரதமர் உரையாற்றினார். முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் 'மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். விண்வெளி பயன்பாடுகள், டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 23rd, 12:45 pm
ஐபிஎஸ்ஏ என்பது, மூன்று நாடுகளின் மன்றம் மட்டுமல்ல; மூன்று கண்டங்கள், மூன்று முக்கிய ஜனநாயக சக்திகள் மற்றும் மூன்று குறிப்பிடத்தக்க பொருளாதாரங்களை இணைக்கும் முக்கிய தளமாகவும் செயல்படுகிறது. நமது பன்முகத்தன்மை, பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் லட்சியங்களில் வேரூன்றிய ஆழமான மற்றும் உறுதியான கூட்டு முயற்சியாகவும் இது விளங்குகிறது.ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
November 23rd, 12:30 pm
இந்தக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறுவதாக கூறிய பிரதமர், ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதல் ஜி20 உச்சிமாநாட்டுடன் சேர்ந்து இது நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார். வளரும் நாடுகள் (உலகளாவிய தெற்கு நாடுகள்) தொடர்ச்சியாக நான்கு முறை ஜி20 தலைமைத்துவ பொறுப்பை வகித்து வருவதை அவர் குறிப்பிட்டார். அதில் மூன்று கடைசி மூன்று முறை ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகள் ஜி20 தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, மனிதநேய மேம்பாடு, பலதரப்பு சீர்திருத்தம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல முக்கிய முயற்சிகள் உருவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.Critical minerals are a shared resource of humanity: PM Modi at G20 Johannesburg Summit Session - 2
November 22nd, 09:57 pm
In his statement during the G20 Summit Session - 2 in Johannesburg, South Africa, PM Modi touched upon important topics like critical minerals, natural disasters, space technology and clean energy. The PM highlighted that India is promoting millets. He also said that the G20 must promote comprehensive strategies that link nutrition, public health, sustainable agriculture and disaster preparedness to build a strong global security framework.ஜி20 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 22nd, 09:36 pm
இந்த ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கும், வெற்றிகரமான தலைமைத்துவத்திற்கும் இந்த ஆண்டு தலைமைத்துவம் வகிக்கும் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் திரு ரமபோசாவுக்கும் எனது வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.Prime Minister participates in G20 Summit in Johannesburg
November 22nd, 09:35 pm
Prime Minister participated today in the G20 Leaders’ Summit hosted by the President of South Africa, H.E. Mr. Cyril Ramaphosa in Johannesburg. This was Prime Minister’s 12th participation in G20 Summits. Prime Minister addressed both the sessions of the opening day of the Summit. He thanked President Ramaphosa for his warm hospitality and for successfully hosting the Summit.Joint statement by the Government of India, the Government of Australia and the Government of Canada
November 22nd, 09:21 pm
India, Australia, and Canada have agreed to enter into a new trilateral partnership: the Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership. The three sides agreed to strengthen their ambition in cooperation on critical and emerging technologies. The Partnership will also examine the development and mass adoption of artificial intelligence to improve citizens' lives.The work done by Tamil Nadu in the field of paddy remains unmatched globally: PM during interaction with farmers in Coimbatore
November 20th, 12:30 pm
During the interaction with farmers at the South India Natural Farming Summit 2025 in Coimbatore, PM Modi greeted farmers engaged in natural farming and discussed the value-added products they had displayed. He also held conversations with them about Tea varieties, Tamil Nadu’s GI products, traditional paddy varieties and the growing participation of youth in the farming sector. The PM encouraged the farmers to continue expanding their exports.கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ல் விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
November 20th, 12:16 pm
கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-இல் கலந்துகொண்டபோது, பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பாராட்டிய திரு மோடி, வாழைப்பழ கழிவுகளின் பயன்பாடு பற்றி கேட்டறிந்தார். மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வாழைப்பழ கழிவுகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் என்று விவசாயி விளக்கம் அளித்தார். இத்தகைய தயாரிப்புகள் இந்தியா முழுவதும் இணையம் வழியாக விற்பனை செய்யப்படுவதை விவசாயி உறுதிப்படுத்தினார். வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் தனிநபர் பங்களிப்பாளர்கள் வாயிலாக ஒட்டுமொத்த மாநிலத்தையும் உழவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அந்த விவசாயி மேலும் கூறினார்.தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
November 19th, 10:42 pm
20வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 2025 நவம்பர் 21-23 வரை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு வருகை தருவார். உச்சிமாநாட்டு அமர்வுகளின் போது, ஜி20 நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் முன்னோக்குகளை பிரதமர் முன்வைப்பார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார், மேலும் தென்னாப்பிரிக்கா நடத்தும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்பார்.பூடானில், பிரதமரின் பயணத்தையடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை
November 12th, 10:00 am
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்களில் பூடானில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது 2025 நவம்பர் 11 அன்று சாங்லிமிதாங்கில் நடைபெற்ற 4-ம் மன்னரின் பிறந்ததின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் திரு மோடி கலந்து கொண்டார். திம்புவில் நடைபெற்ற உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவிலும் அவர் கலந்து கொண்டார். இத்திருவிழாவின் போது பொதுமக்களின் வழிபாட்டுக்காக திம்புவில், இந்தியாவிலிருந்து பகவான் புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளதற்காக பூடான் மன்னர் பாராட்டுத் தெரிவித்தார்.His Majesty The Fourth King of Bhutan has played a pivotal role in strengthening India and Bhutan friendship: PM Modi in Thimphu
November 11th, 12:00 pm
In his address at the Changlimethang Celebration Ground in Thimphu, Bhutan, PM Modi reaffirmed that those behind the recent Delhi blast will not be spared. He lauded His Majesty The King for leading Bhutan to new heights, highlighting his pivotal role in strengthening India and Bhutan friendship. The PM also inaugurated a hydroelectric project and recalled India’s support package of ₹10,000 crore announced last year for Bhutan’s Five-Year Plan.பூடானின் 4-வது மன்னரது 70-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 11th, 11:39 am
உலகம் ஒரு குடும்பம் என்பதை எடுத்துரைக்கும் வசுதைவ குடும்பகம் என்ற தொன்மை சிந்தனையில் இந்தியா ஊக்கம் பெற்றுள்ளது என்றும், அனைவரும் இன்புற்றிருக்க நினைக்கும் இந்தியாவின் மந்திரம் உலக மகிழ்ச்சியை வலியுறுத்துவதாக பிரதமர் கூறினார். சொர்க்கத்திலும், விண்வெளியிலும், பூமியிலும், நீர், தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் அமைதியை விரும்பும் வேத மந்திரங்கள் இவற்றை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த உணர்வுகளுடன் பூடானின் உலகளாவிய அமைதி வழிபாட்டுத் திருவிழாவில் இந்தியா பங்கேற்கிறது என்று அவர் குறிப்பிட்டார். உலகம் முழுவதிலும் இருந்து உலகளாவிய அமைதிக்காக வழிபாடு செய்ய துறவிகள் வந்துள்ள நிலையில், இந்த கூட்டான உணர்வின் பகுதியாக இந்தியாவின் 140 கோடி மக்களும் உள்ளனர் என்று பிரதமர் கூறினார்.Prime Minister addresses the International Arya Mahasammelan 2025 in New Delhi
October 31st, 06:08 pm
PM Modi attended and addressed the International Arya Mahasammelan 2025 in New Delhi. Speaking on the occasion, the PM expressed his deep reverence for Swami Dayanand Ji’s ideals. He emphasized that Swami Dayanand Ji rejected caste-based discrimination and untouchability. The PM highlighted that the occasion reflects the great legacy of social reform consistently advanced by the Arya Samaj and noted its historical association with the Swadeshi movement.பிரதமர் அக்டோபர் 30, 31 அன்று குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்
October 29th, 10:58 am
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தில் அக்டோபர் 30, 31 அன்று பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 30 அன்று கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் மாலை 5.15 மணியளவில் மின்சார பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். மாலை 6.30 மணியளவில் ஏக்தா நகரில் ரூ.1,140 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.இந்தியா- இங்கிலாந்து கூட்டறிக்கை
October 09th, 03:24 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மர் 2025 அக்டோபர் 8,9 ஆகிய தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் திரு ஸ்டார்மருடன் வர்த்தக அமைச்சர் பீட்டர் கைல், ஸ்காட்லாந்து அமைச்சர் திரு டக்லஸ் அலெக்சாண்டர், முதலீட்டுத்துறை அமைச்சர் திரு ஜேசன் ஸ்டாக்வுட், 125 தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கலாச்சார தலைவர்கள் உள்ளிட்ட உயர்நிலை குழு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.India’s dynamism and the UK’s expertise together create a unique synergy: PM Modi at Joint Press Meet
October 09th, 11:25 am
In his remarks at the joint press meet, PM Modi said that under the leadership of PM Starmer, India-UK relations have made remarkable progress. He highlighted that PM Starmer is accompanied by the largest and most influential delegation from the education sector to date. The PM remarked that the 1.8 million Indians residing in the UK, through their valuable contributions to British society and economy, have strengthened the bridge of friendship, cooperation, and development between the two countries.