Today, India is becoming the key growth engine of the global economy: PM Modi
December 06th, 08:14 pm
In his address at the Hindustan Times Leadership Summit, PM Modi highlighted India’s Quarter-2 GDP growth of over 8%, noting that today’s India is not only transforming itself but also transforming tomorrow. Criticising the use of the term “Hindu rate of growth,” he said India is now striving to shed its colonial mindset and reclaim pride across every sector. The PM appealed to all 140 crore Indians to work together to rid the country fully of the colonial mindset.Prime Minister Shri Narendra Modi addresses the Hindustan Times Leadership Summit 2025 in New Delhi
December 06th, 08:13 pm
In his address at the Hindustan Times Leadership Summit, PM Modi highlighted India’s Quarter-2 GDP growth of over 8%, noting that today’s India is not only transforming itself but also transforming tomorrow. Criticising the use of the term “Hindu rate of growth,” he said India is now striving to shed its colonial mindset and reclaim pride across every sector. The PM appealed to all 140 crore Indians to work together to rid the country fully of the colonial mindset.We are working with a spirit of service for the welfare of all sections of society: PM Modi in Banswara, Rajasthan
September 25th, 02:32 pm
PM Modi inaugurated and laid the foundation stone for development projects worth over ₹1,22,100 cr in Banswara, Rajasthan. “India is moving fast towards becoming a developed nation, with Rajasthan playing a key role,” he said. Further the PM highlighted energy and tribal welfare initiatives, including new solar projects under PM Surya Ghar and PM-KUSUM. PM Modi also emphasised youth employment and urged citizens to embrace Swadeshi.ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் 1,22,100 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
September 25th, 02:30 pm
ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் 1,22,100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.09.2025) தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அன்னை திரிபுர சுந்தரியின் புனித பூமிக்குச் செல்ல கிடைத்த வாய்ப்பை ஒரு பாக்கியமாகக் கருதுவதாகத் பிரதமர் கூறினார். பக்தி மற்றும் வீரம் நிறைந்த இந்த பூமியிலிருந்து, மஹாராணா பிரதாப் மற்றும் ராஜா பன்சியா பிலுக்கு மரியாதை செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.A new dawn of hope and trust is rising in Manipur: PM Modi in Churachandpur
September 13th, 12:45 pm
PM Modi launched projects pertaining to housing, tap water, electricity and healthcare, among others, worth over Rs 7,300 crore in Churachandpur, Manipur. He called the state a jewel of the North East. He said peace is the key to development and noted that many conflicts have been resolved through dialogue. He emphasised the government's commitment to progress, respect and mutual understanding. Manipur, he affirmed, is moving towards becoming a symbol of peace, prosperity and progress.மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் ரூ.7,300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்ளைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
September 13th, 12:30 pm
மணிப்பூரில் உள்ள சூரசந்த்பூரில் ரூ.7,300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புதியதிட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மணிப்பூர் நிலம் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் பூமி என்று குறிப்பிட்டார். மணிப்பூர் மக்களின் உற்சாகத்திற்கு வணக்கம் செலுத்திய திரு. மோடி, அதிக எண்ணிக்கையில் வந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.மிசோரமில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய முழுஉரையின் தமிழாக்கம்
September 13th, 10:30 am
மிசோரம் ஆளுநர் வி கே சிங் அவர்களே, முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மிசோரம் அரசின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே, மிசோரமின் அற்புதமான மக்களுக்கு வாழ்த்துகள்.மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
September 13th, 10:00 am
மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 25th, 06:42 pm
இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாதுகுஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 25th, 06:15 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 26th, 08:16 pm
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான கிஞ்சரப்பு ராமமோகன் நாயுடு அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அவர்களே, டாக்டர் டி.ஆர்.பி.ராஜா அவர்களே, பி.கீதா ஜீவன் அவர்களே, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சசோதர சகோதரிகளே!பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ₹4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்
July 26th, 07:47 pm
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இன்று சுமார் ₹4800 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார். பல்வேறு துறைகளில் அமைந்துள்ள தொடர்ச்சியான முக்கிய திட்டங்கள், பிராந்திய இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், தளவாடத் திறனை அதிகரிக்கும், தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கிலின் துணிச்சல்மிகு வீரர்களுக்கு திரு. மோடி மரியாதை செலுத்தினார். தீரம் நிறைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியதுடன், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தினார்.வேலை வாய்ப்புத் திருவிழாவின் கீழ் 51,000- க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 12th, 11:30 am
மத்திய அரசில் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் இயக்கம் சீராகத் தொடர்கிறது. பரிந்துரை இல்லை, ஊழல் இல்லை. இன்று, 51,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலைகளைப் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் இப்போது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள். இன்று, உங்களில் பலர் இந்திய ரயில்வேயில் உங்கள் பொறுப்புகளைத் தொடங்கியுள்ளீர்கள். சிலர் இப்போது பாதுகாப்பு துறையில் இணைந்து நாட்டின் பாதுகாவலர்களாக மாறுகிறீர்கள். அஞ்சல் துறையில் நியமிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் அரசு சேவைகளை வழங்க உதவுவார்கள். சிலர் அனைவருக்கும் சுகாதாரம் என்ற திட்டத்தில் பங்களிப்பை வழங்குவார்கள். பல இளம் தொழில் வல்லுநர்கள் நிதி சேர்க்கையை விரைவுபடுத்த உதவுவார்கள். மற்றவர்கள் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்துவார்கள். உங்கள் துறைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான். அந்த இலக்கு என்ன? நாம் அதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். துறை, பணி, பதவி அல்லது பிராந்தியம் எதுவாக இருந்தாலும் ஒரே குறிக்கோள் தேசத்திற்கு சேவை செய்வதே. வழிகாட்டும் கொள்கை என்பது மக்களே முதன்மையானவர்கள் என்பதாகும். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு ஒரு சிறந்த தளம் வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்த பெரிய வெற்றியை அடைந்ததற்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் வாழ்க்கையில் இந்த புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்
July 12th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் இருந்தபோதிலும், அவர்களின் பொதுவான குறிக்கோள் முதலில் குடிமகன் என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் தேசிய சேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.உத்தரப் பிரதேசம், கான்பூர் நகரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தபோது பிரதமர் ஆற்றிய உரை
May 30th, 03:29 pm
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாக்களே, துணை முதலமைச்சர்கள் திரு கேசவ் பிரசாத் மௌரியா, திரு பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் இங்கு அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கும் கான்பூரைச் சேர்ந்த எனது அன்பான சகோதர சகோதரிகளே.உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
May 30th, 03:08 pm
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இன்று ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், கான்பூருக்கான பயணம் முதலில் 2025 ஏப்ரல் 24 என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது என்றார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலியான கான்பூரின் புதல்வர் திரு சுபம் துவிவேதிக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் உள்ள சகோதரிகளின் புதல்விகளின் வலி, துயரம், கோபம், வேதனை ஆகியவற்றை தாம் உணர்வதாகப் பிரதமர் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் செயல்படுத்தப்பட்டபோது இந்த கூட்டான கோபத்தை உலகம் கண்ணுற்றதாக அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்பதற்கான நிர்ப்பந்தம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஏற்பட்டது. நமது ராணுவத்தினரின் துணிவுக்கு வணக்கம் செலுத்திய பிரதமர், சுதந்திரப் போராட்ட பூமியிலிருந்து அவர்களின் வீரத்திற்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார். ஆபரேஷன் சிந்தூரின்போது கருணைக்காக யாசித்த எதிரிகள், ஆபரேஷன் சிந்தூர் முடிவடையாத நிலையில், எந்த மாயையிலும் இருக்க வேண்டாம் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவின் மூன்று தெளிவான கோட்பாடுகள் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். முதலாவதாக ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தீர்மானமான பதிலடியை இந்தியா வழங்கும். இதற்கான நேரம், நடைமுறை, நிபந்தனைகள் ஆகியவை இந்திய ராணுவத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படும். இரண்டாவதாக அணு ஆயுத அச்சுறுத்தல்களால் இனிமேலும் இந்தியாவை மிரட்ட முடியாது. இத்தகைய எச்சரிக்கைகள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட மாட்டாது. மூன்றாவதாக பயங்கரவாதத்தின் மூளையாக செயல்படுவோரையும் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் அரசுகளையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் இந்தியா பார்க்கும். பாகிஸ்தானின் அரசு மற்றும் அரசு சாராத செயல்பாட்டாளர்கள் என்ற பாகுபாடு இனிமேலும் ஏற்றுக் கொள்ளப்படாது. எதிரிகள் எங்கிருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.பிரதமர் திரு. நரேந்திர மோடி சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்
May 28th, 12:10 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் வளர்ச்சிப்பணிகள் தொடக்க நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 26th, 05:00 pm
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு மனோகர் லால் அவர்களே, அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர மதிப்பிற்குரிய பிரமுகர்களே, கட்ச் பகுதியின் எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத்தின் புஜ்ஜில் சுமார் ரூ.53,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
May 26th, 04:45 pm
குஜராத்தின் புஜ்ஜில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சுமார் ரூ.53,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்ச் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். புரட்சியாளர்கள் மற்றும் தியாகிகளுக்கு, குறிப்பாக தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் திரு. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு மரியாதை செலுத்தினார். கட்ச்சின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர்களின் உறுதிப்பாடு மற்றும் பங்களிப்புகளை பிரதமர் விவரித்தார்.ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் வளர்ச்சிப் பணிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 22nd, 12:00 pm
ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதல்வர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, முன்னாள் முதல்வர் சகோதரி வசுந்தரா ராஜே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி அவர்களே, பிரேம் சந்த் அவர்களே, ராஜஸ்தான் அரசின் பிற அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் மதன் ரத்தோர் அவர்களே, இதர நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, என் அன்பான சகோதர, சகோதரிகளே.