மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள திருமதி சுனேத்ரா பவாருக்குப் பிரதமர் வாழ்த்து

January 31st, 05:57 pm

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள திருமதி சுனேத்ரா பவாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் ஆவார். மாநில மக்களின் நலனுக்காக அவர் அயராது பாடுபடுவார் என்றும், மறைந்த அஜித் பவாரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவார் என்றும் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன், என்று திரு. மோடி கூறினார்.