நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அணுகக்கூடிய வகையில் மலிவான விலையில் சுகாதார சேவை வழங்கப்படுவதில் அரசின் உறுதிபாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

September 04th, 08:27 pm

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அணுகக்கூடிய வகையில் மலிவான விலையில் சுகாதார சேவை வழங்குவதில் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மக்கள் மருந்தக மையங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற மாற்றகரமான முன்முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் என்ற முயற்சியின் கீழ் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை அரசு தற்போது எடுத்துள்ளது.