தன்னலமற்ற சேவை உணர்வை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 10th, 08:22 am
தன்னலமற்ற செயல்பாடு, மனிதகுலத்தின் மகத்தான பலமாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும், முன்னேற்றும் தீர்மானத்துடன் இந்த சேவை உணர்வு, அர்ப்பணிப்புடன் நாடு முன்னேறி வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 01st, 12:22 pm
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் மீதான அவர்களுடைய உறுதிப்பாடு கருணை, இணையற்ற சேவை ஆகியவற்றுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களுக்கு அதிகாரமளித்து, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது – பிரதமர் திரு நரேந்திர மோடி
July 01st, 12:04 pm
டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 11 ஆண்டுகால நிறைவு குறித்து இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நிர்வாகம், பொதுச் சேவை வழங்கல், குடிமக்களின் வாழ்க்கை ஆகியவற்றில் அது ஏற்படுத்தியுள்ள மாற்றத்தக்க தாக்கத்தை எடுத்துரைத்துள்ளார். டிஜிட்டல் இந்தியா, நிர்வாகத்தை மேலும் வெளிப்படையானதாகவும், திறன்மிக்கதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றி நாட்டின் அனைத்து துறை வளர்ச்சியையும் விரைவுபடுத்தி நிர்வாகத்திற்குப் புதிய வரையறையை ஏற்படுத்தியுள்ளதாக திரு மோடி கூறியுள்ளார். தடையற்ற மின்னணு பணப்பரிவர்த்தனைகள், வெளிப்படையான நேரடி பயன் பரிமாற்றங்கள் முதல் மின்னணு பொது உள்கட்டமைப்பின் விரிவாக்கம் வரை இந்த முன்முயற்சி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலித்துள்ளது என்றும் இது தொழில்நுட்பத்தை எளிமையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு சக்தி மிக்க கருவியாக மாற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Our vision is to make the Indian Ocean an Ocean of Opportunity: PM Modi at the India-Seychelles Joint Press Meet
June 28th, 02:02 pm
Addressing the India-Seychelles Joint Press Meet, PM Modi dedicated the Guardian of the Blue Horizon honour to all nations fighting climate change. Reaffirming the MAHASAGAR Vision, he said India envisions an Indian Ocean where prosperity grows with maritime security and partnerships are rooted in mutual respect and trust. He also highlighted the Blue Economy as a natural and strategic pillar of the India-Seychelles partnership.பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
June 26th, 12:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தலைமுறை தலைமுறையாக இந்தியர்களிடையே தேசபக்தியையும் கலாச்சாரப் பெருமித உணர்வையும் தூண்டிய ஒரு மாபெரும் இலக்கிய மேதை என அவரைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.அவசரநிலைக் காலத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களுக்குப் பிரதமர் மரியாதை
June 25th, 10:53 am
இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், ஜனநாயக விழுமியங்களை உறுதியுடன் பாதுகாத்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்த காலக்கட்டம், மௌனமாக இருக்க மறுத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளக் கொள்கைகளை நிலைநிறுத்திய எண்ணற்ற குடிமக்களின் அசாத்திய துணிச்சலையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒடிசா மாநில அரசின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 20th, 01:10 pm
நமது ஒடிசா மாநிலம் இந்நாட்களில் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. கடந்த வாரம்தான் ராஜா திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜெகநாதரின் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளும் முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. மயுர்பஞ்சில் நடைபெறவுள்ள பரிபடா ரத யாத்திரை குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.PM Modi launches development projects at Pahadpur on the completion of two years of the Odisha Government
June 20th, 01:00 pm
PM Modi participated in a programme marking two years of the Odisha Government in Pahadpur village in Mayurbhanj. The PM wished President Murmu on her birthday, praising her dedication to public service, humility, and commitment to nation-building. In his address, he highlighted the state's rapid development and launched development projects worth over ₹47,600 crore. He announced that Pahadpur will be developed as a Solar Village and also highlighted major investments across infrastructure, industry and energy.ஹூக்ளியில் நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
June 19th, 11:54 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரில் மாநில அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேற்கு வங்கம்: பாரம்பரியம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி என்பது இந்த ஆண்டுக்கான மேற்கு வங்க தினத்தின் கருப்பொருளாகும். இது மாநிலத்தின் கலாச்சாரச் வளம், சமூக நல்லிணக்கம், வளர்ச்சி சார்ந்த விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.ஒடிசாவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் அங்கு 47,600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்
June 19th, 11:53 am
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பகத்பூர் கிராமத்தில் காலை 11:15 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர்கள், திறன் மேம்பாட்டு மையம் - பகத்பூர் பள்ளியை பார்வையிடுகின்றனர். முன்னதாக, அவர்கள் சந்தாளி ஜஹேரா, ஹோ ஜஹேரா ஆகிய புனித தளங்களில் வழிபாடு செய்கின்றனர். அம்மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்கள் - பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் கல்விக்கான வாய்ப்புகள் திறன் மேம்பாடு, சமூக பொருளாதார அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், பிரதமரின் இந்தப் பயணம் அமையும். பிற்பகல் ஒரு மணிக்கு ராய்ரங்பூரில் ஒடிசா மாநில அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவிலும் பங்கேற்கின்றனர்.இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
June 18th, 02:33 pm
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் புது உத்வேகத்துடன் பாதுகாக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு, முன்னோக்கி எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறியுள்ளார்.பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், ரூ 2,400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை பிரதமர் வழங்குகிறார்
June 17th, 03:14 pm
பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 19 ஜூன் 2026 அன்று மாலை 5 மணிக்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ 2,400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை வழங்குகிறார்.இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு செயல்திட்டம் 2030
June 15th, 05:42 am
இந்தியா – பிரான்ஸ் இடையேயான இருதரப்பு உறவை பிரதமர் திரு நரேந்திர மோடியும், அதிபர் திரு இமானுவேல் மேக்ரானும் இணைந்து சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளனர். 2026 பிப்ரவரி 17 அன்று இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு ஆண்டு 2026-ஐ தொடங்கி வைத்து, செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், இணையவழி, சுகாதாரம், கலாச்சாரம், பொருளாதாரம், கல்வித் தொடர்புகள், மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் விரிவான, பன்முகப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave
June 10th, 06:33 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat
June 10th, 06:30 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.Daman has become a living example of Mini India: PM Modi
June 05th, 07:20 pm
Addressing a public gathering in Daman, PM Modi lauded Daman as a living example of Mini India. Launching multiple transformative projects spanning connectivity, health, education, tourism, and urban infrastructure, he highlighted the region's prowess in solar energy and cleanliness. Listing various government initiatives that transformed the lives of the people, he assured the Union Territory of the central government's continued support.டாமனில் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் - பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
June 05th, 07:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, டாமனில் சுமார் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி இப்போது நாட்டின் பன்முகத்தன்மையைப் பெருமையுடன் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் டாமனில் வசிப்பது, 'மினி இந்தியா'வின் உதாரணமாக மாறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.From waste to wealth: PM Modi showcases Surat’s green development model
June 05th, 04:30 pm
At the launch of development projects in Surat, Gujarat, PM Modi called upon all elected representatives of local bodies to work even harder for the state's progress. Expressing pride in Surat being one of the cleanest cities in the country, he lauded the continuous efforts of all stakeholders. He credited Gujarat for its significant contribution to India's energy self-reliance, noting that the state produces one-fifth (50 GW) of the nation's 250 GW renewable energy capacity.குஜராத்தின் சூரத் நகரில் ரூ. 18,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
June 05th, 04:16 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஜூன் 05, 2026) குஜராத்தின் சூரத் நகரில் 18,800 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு முடிவுற்றத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். சாலை, மின்சாரம், தொழிற்துறை சார்ந்த இந்த திட்டங்கள் அந்தப் பிராந்திய வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.இந்தியாவின் 100-வது ராம்சர் தளமாக ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு
June 05th, 11:58 am
உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் நாட்டின் 100-வது ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராம்சர் தளங்களின் 100 என்பதை எட்டியிருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.06.2026) மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.