இந்தியா - ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்
August 29th, 07:43 pm
இந்தியா - ஜப்பான் அரசுகளுக்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகள், பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய ஒத்துழைப்பின் அரசியல் பார்வையும் நோக்கங்களும் சிறப்பானவை. விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தும் சுதந்திரமான, திறந்த, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இரு நாடுகளின் பங்கை இவை எடுத்துக் காட்டுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035
July 24th, 07:12 pm
இந்தியா மற்றும் இங்கிலாந்து பிரதமர்கள், ஜூலை 24, 2025 அன்று லண்டனில் நடந்த சந்திப்பின் போது, புதிய இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035-ஐ அங்கீகரித்தனர். இது புத்துயிர் பெற்ற கூட்டாண்மையின் முழு திறனையும் வெளிக்கொணர்வதற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த லட்சிய மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒப்பந்தம், பரஸ்பர வளர்ச்சி, செழிப்பு மற்றும் விரைவான உலகளாவிய மாற்றத்தின் போது ஒரு வளமான, பாதுகாப்பான மற்றும் நிலையான உலகத்தை வடிவமைப்பதற்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.