பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்த பட்டியல்
April 23rd, 02:25 am
இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு கூட்டாண்மைக் குழுமத்தின் இரண்டாவது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு முகமது பின் சல்மான் ஆகியோரது கூட்டுத் தலைமையில் ஏப்ரல் 22-ம் தேதி ஜெட்டாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் இணைந்து செய்லபடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இருநாடுகளைச் சேர்ந்த துணைக் குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களின் பணிகள் குறித்தும் இந்தக் குழுமம் மதிப்பாய்வு செய்தது. கூட்டத்தின் இறுதியில், மேற்கொள்ளப்பட்ட குறிப்புகளில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.பிரதமர் திரு நரேந்திர மோடி, சவுதி அரேபிய இளவரசரை சந்தித்தார் - இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு பங்காண்மைக் கவுன்சில் கூட்டத்திற்கு கூட்டாக தலைமை வகித்தார்
April 23rd, 02:20 am
பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 22, அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஜெட்டாவில் உள்ள அரசு மாளிகையில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு வருகிறார்
April 22nd, 04:29 pm
அரச மேன்மைமிகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு வந்தார். சிறப்பு மரியாதையாக, சவுதி வான்வெளியில் நுழைந்த பிரதமர் மோடியின் விமானத்தை சவுதி விமானப்படை ஜெட் விமானங்கள் அழைத்துச் சென்று, ஜெட்டாவிற்கு அழைத்துச் சென்றன. பிரதமர் மோடிக்கு ஜெட்டாவில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.இந்தியா - அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
February 14th, 04:57 am
முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டிரம்ப் தமது தலைமையின் மூலம் இந்தியா-அமெரிக்க உறவைப் போற்றி புத்துயிர் அளித்துள்ளார்.பாரிஸில் நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள்
February 12th, 12:45 am
இந்த அறையில் ஒரு அற்புதமான ஆற்றல், உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பை நான் உணர்கிறேன். இது ஒரு சாதாரண வணிக நிகழ்வு மட்டுமல்ல.14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
February 12th, 12:25 am
பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மன்றத்தில் ஒன்று கூடினர்.இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை
January 25th, 01:00 pm
இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர் பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.ஜெர்மனி பிரதமருடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 25th, 01:50 pm
முதலாவதாக, இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸையும் அவரது தூதுக்குழுவினரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியா வந்துள்ள உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
September 05th, 09:00 am
நீங்கள் பிரதமராக பதவியேற்ற பிறகு நாம் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் இன்னும் வேகமாக முன்னேற்றத்தை அடையும் என்று நான் நம்புகிறேன்.புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் சந்திப்பு
September 04th, 12:11 pm
பண்டார் செரி பெகாவானில் உள்ள இஸ்தானா நூருல் இமானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.09.2024) சென்றடைந்தார். அவரை, புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா அன்புடன் வரவேற்றார்.ஆஸ்திரேலிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை தொடர்பான செய்திக்குறிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு
May 24th, 06:41 am
எனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும், அளிக்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்காக ஆஸ்திரேலிய மக்களுக்கும், பிரதமர் அல்பனீஸ் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர், ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீஸ் இந்தியாவிற்கு வந்த இரண்டு மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் இது எங்களின் ஆறாவது சந்திப்பாகும்.We aim to increase defence manufacturing in India: PM Modi
August 27th, 05:11 pm
At a webinar on defence sector, PM Modi spoke about making the sector self-reliant. He said, We aim to increase defence manufacturing in India...A decision has been taken to permit up to 74% FDI in the defence manufacturing through matic route.பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு இந்தியா குறித்த கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்
August 27th, 05:00 pm
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு இந்தி குறித்த கருத்தரங்கில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதைப் பற்றி வலியுறுத்திய பிரதமர், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியை பெருக்குவது, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது மற்றும் தனியாருக்கு பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதே நமது லட்சியம் என்றார்.சவுதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம், வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
October 29th, 11:08 am
பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா – சவுதி அரேபியா இடையே ஏற்கனவே நிலவும் வலுவான உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.