ஆந்திரப் பிரதேசம் அமராவதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
May 02nd, 03:45 pm
ஆந்திர ஆளுநர் திரு சையத் அப்துல் நசீர் அவர்களே, முதலமைச்சரும் எனது நண்பருமான திரு சந்திரபாபு நாயுடு அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, ஆற்றல் மிக்க துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் அவர்களே, மாநில அமைச்சர்களே, அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே!ஆந்திர மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார், நிறைவடைத திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
May 02nd, 03:30 pm
ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அமராவதி என்ற புனித பூமியில் நிற்கும்போது, வெறும் ஒரு நகரத்தை மட்டுமல்ல, ஒரு புதிய அமராவதி, ஒரு புதிய ஆந்திரா என்ற கனவை நனவாக்குவதையும் தான் காண்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார். அமராவதி, பாரம்பரியமும் முன்னேற்றமும் கைகோர்த்துச் செல்லும் ஒரு பூமி, அதன் புத்த பாரம்பரியத்தின் அமைதியையும், வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் ஆற்றலையும் தழுவிச் செல்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும், இந்தத் திட்டங்கள் வெறும் கான்கிரீட் கட்டமைப்புகளைப் பற்றியது மட்டுமல்ல, ஆந்திரப் பிரதேசத்தின் அபிலாஷைகள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையின் வலுவான அடித்தளமாகும் என்றும் அவர் மேலும் கூறினார். பிரதமர் மோடி ஆந்திரப் பிரதேச மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, பகவான் வீரபத்ரர், பகவான் அமரலிங்கேஸ்வரர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகியோரை பிரார்த்தனை செய்தார். முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் திரு. பவன் கல்யாண் ஆகியோருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 24th, 02:00 pm
மதிப்பிற்குரிய விருந்தினர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, தொழில்துறை தலைவர்களே, சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் எனது நண்பர்களே, வணக்கம். இன்றும், அடுத்த இரண்டு நாட்களிலும், பாரதத்தின் வளர்ந்து வரும் துறையான எஃகுத் துறையின் திறன்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விரிவான விவாதங்களில் ஈடுபட உள்ளோம். இந்தத் துறை, பாரதத்தின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குவதுடன், 'வளர்ந்த இந்தியா’ என்பதற்கான வலுவான அடித்தளமாகவும், நாட்டில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதும் துறையாகவும் திகழ்கிறது. இந்தியா ஸ்டீல் 2025-க்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி, புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், புதுமையை ஊக்குவிக்கவும் ஒரு புதிய தொடக்க தளமாக அமையும் என்று நான் நம்புகிறேன். இது எஃகுத் துறையில் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
April 24th, 01:30 pm
மும்பையில் இன்று நடைபெற்ற இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அடுத்த இரண்டு நாட்களில், நாட்டின் முன்னோடித் துறையான எஃகுத் துறையில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளதையுமா அதனை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். எஃகு உற்பத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது என்றும், நாட்டில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா ஸ்டீல் 2025 கண்காட்சிக்கு அனைவரையும் வரவேற்ற பிரதமர், புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி எஃகுத் துறையில் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.ரிபப்ளிக் தொடக்க உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரை
March 06th, 08:05 pm
நீங்கள் அனைவரும் சோர்வாக இருப்பீர்கள், அர்னாப்பின் உரத்த குரலைக் கேட்டு உங்கள் காதுகள் சோர்வடைந்திருக்கும், உட்காருங்கள் அர்னாப், இது இன்னும் தேர்தல் காலம் அல்ல. முதலாவதாக, இந்த புதுமையான பரிசோதனைக்காக ரிபப்ளிக் தொலைக்காட்சியை நான் பாராட்டுகிறேன். அடிமட்ட அளவில் இளைஞர்களை ஈடுபடுத்தி, இவ்வளவு பெரிய போட்டியை ஏற்பாடு செய்ததன் மூலம் நீங்கள் அவர்களை இங்கு அழைத்து வந்துள்ளீர்கள். நாட்டின் இளைஞர்கள் தேசிய விவாதத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது, சிந்தனைகளில் புதுமை ஏற்படுகிறது. அது ஒட்டுமொத்த சூழலுக்கும் ஒரு புதிய சக்தியை நிரப்புகிறது. இந்த நேரத்தில் நாம் இங்கே அந்த சக்தியை உணர்கிறோம். அடைய முடியாத இலக்கு என்று எதுவுமே இல்லை. இந்த உச்சிமாநாட்டிற்காக ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒரு புதிய கருத்தை உருவாக்கியுள்ளது. இந்த உச்சிமாநாட்டின் வெற்றிக்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். சரி, எனக்கும் இதில் கொஞ்சம் சுயநலம் இருக்கிறது. ஒன்று, கடந்த சில நாட்களாக நான் ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து வருகிறேன். ஒரு லட்சம் பேர் தங்கள் குடும்பங்களில் முதல் முறையாக வருபவர்கள், எனவே ஒரு வகையில், இதுபோன்ற நிகழ்வுகள் எனது இந்த நோக்கத்திற்கான அடித்தளத்தைத் தயார் செய்கின்றன.ரிபப்ளிக் உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
March 06th, 08:00 pm
புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ரிபப்ளிக் உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், அடிமட்ட அளவில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க ஹேக்கத்தான் போட்டியை ஏற்பாடு செய்வதற்கும் புதுமையான அணுகுமுறையை ரிபப்ளிக் டிவி மேற்கொண்டதற்காகப் பாராட்டு தெரிவித்தார். நாட்டின் இளைஞர்கள் தேசிய விவாதத்தில் ஈடுபடும்போது, அது சிந்தனைகளுக்கு புதுமையைக் கொண்டு வருவதுடன், ஒட்டுமொத்த சூழலையும் தங்கள் சக்தியால் நிரப்புகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆற்றல் உச்சிமாநாட்டில் உணரப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் ஈடுபாடு அனைத்துத் தடைகளையும் உடைத்து, எல்லைகளைக் கடந்து செல்ல உதவுகிறது. ஒவ்வொரு இலக்கையும் அடையக்கூடியதாகவும் ஆக்குகிறது என்று அவர் மேலும் கூறினார். இந்த உச்சிமாநாட்டிற்காக ஒரு புதிய கருத்தை உருவாக்கியதற்காக ரிபப்ளிக் டிவிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், அதன் வெற்றிக்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். எந்த அரசியல் பின்னணியும் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை இந்திய அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தமது யோசனையை திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.ஆந்திரப் பிரதேச மக்களின் இதயத்திலும், மனதிலும் விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு சிறப்பான இடம் உள்ளது: பிரதமர்
January 17th, 05:45 pm
ஆந்திரப் பிரதேச மக்களின் இதயத்திலும், மனதிலும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த ஆலைக்கு ரூ. 10,000 கோடிக்கும் அதிகமான பங்கு நிதி ஆதரவை வழங்க முடிவு செய்யப்பட்டது என்று திரு மோடி கூறியுள்ளார்.ஒடிசா பர்பாவில் பிரதமர் ஆற்றிய உரை
November 24th, 08:48 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, ஒடியா சமாஜத்தின் தலைவர் திரு சித்தார்த் பிரதான் அவர்களே, ஒடியா சமாஜத்தின் இதர பிரதிநிதிகளே, ஒடிசாவைச் சேர்ந்த அனைத்து கலைஞர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே!'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
November 24th, 08:30 pm
புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒடிசாவின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு ஸ்வபவ் கவி கங்காதர் மெஹரின் நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பக்த தாசியா பவுரி, பக்த சாலபேகா மற்றும் ஒரிய பாகவத எழுத்தாளர் திரு. ஜகந்நாத் தாஸ் ஆகியோருக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.பசுமை ஹைட்ரஜன் குறித்த 2-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட காணொளிச் செய்தி
September 11th, 10:40 am
விஞ்ஞானிகளே, புதுமைப் படைப்பாளர்களே, தொழில்துறைத் தலைவர்களே, எனதருமை நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பசுமை ஹைட்ரஜன் குறித்த 2 வது சர்வதேச மாநாட்டிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.பசுமை ஹைட்ரஜன் குறித்த இரண்டாவது சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
September 11th, 10:20 am
பசுமை ஹைட்ரஜன் குறித்த 2 வது சர்வதேச மாநாட்டில் அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்று தனது உரையைத் தொடங்கிய பிரதமர், உலகம் ஒரு முக்கியமான மாற்றத்தை சந்தித்து வருவதாகக் கூறினார். பருவநிலை மாற்றம் என்பது எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, அதன் தாக்கத்தை இப்போதே உணர முடியும் என்ற உணர்வு வளர்ந்து வருவதை அவர் குறிப்பிட்டார். தற்போது இங்கே நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று திரு மோடி கூறினார். எரிசக்தி மாற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை உலகளாவிய கொள்கை விவாதத்தின் மையமாக மாறியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.இந்திய ரயில்வேயில் இரண்டு புதிய வழித்தடங்கள் மற்றும் ஒரு பன்முக கண்காணிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 28th, 05:38 pm
ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் இணைப்பு இல்லாத பகுதிகளை இணைப்பதன் மூலம் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்தும். தற்போதுள்ள ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும் மற்றும் போக்குவரத்து நெட்வொர்க்குகளை மேம்படுத்தும். இதன் விளைவாக விநியோகச் சங்கிலிகள் சீரமைக்கப்படும் மற்றும் பொருளாதார வளர்ச்சி துரிதப்படுத்தப்படும்.Many people want India and its government to remain weak so that they can take advantage of it: PM in Ballari
April 28th, 02:28 pm
Prime Minister Narendra Modi launched the poll campaign in full swing for the NDA in Karnataka. He addressed a mega rally in Ballari. In Ballari, the crowd appeared highly enthusiastic to hear from their favorite leader. PM Modi remarked, “Today, as India advances rapidly, there are certain countries and institutions that are displeased by it. A weakened India, a feeble government, suits their interests. In such circumstances, these entities used to manipulate situations to their advantage. Congress, too, thrived on rampant corruption, hence they were content. However, the resolute BJP government does not succumb to pressure, thus posing challenges to such forces. I want to convey to Congress and its allies, regardless of their efforts... India will continue to progress, and so will Karnataka.”PM Modi addresses public meetings in Belagavi, Uttara Kannada, Davanagere & Ballari, Karnataka
April 28th, 11:00 am
Prime Minister Narendra Modi today launched the poll campaign in full swing for the NDA in Karnataka. He addressed back-to-back mega rallies in Belagavi, Uttara Kannada, Davanagere and Ballari. PM Modi stated, “When India progresses, everyone becomes happy. But the Congress has been so indulged in 'Parivarhit' that it gets perturbed by every single developmental stride India makes.”You have seen that I have been serving you without taking any leave: PM Modi in Mahasamund
April 23rd, 02:50 pm
Prime Minister Narendra Modi addressed mega rally today in Mahasamund, Chhattisgarh. Beginning his speech, PM Modi said, I have come to seek your abundant blessings. Our country has made significant progress in the last 10 years, but there is still much work to be done. The previous government in Chhattisgarh did not allow my work to progress here, but now that Vishnu Deo Sai is here, I must complete that work as well.”PM Modi campaigns in Chhattisgarh’s Janjgir-Champa and Mahasamund
April 23rd, 02:45 pm
Prime Minister Narendra Modi addressed two mega rallies today in Janjgir-Champa and Mahasamund, Chhattisgarh. Beginning his speech, PM Modi said, I have come to seek your abundant blessings. Our country has made significant progress in the last 10 years, but there is still much work to be done. The previous government in Chhattisgarh did not allow my work to progress here, but now that Vishnu Deo Sai is here, I must complete that work as well.”Congress is now being run by people who are in league with anti-national forces: PM Modi
October 03rd, 12:46 pm
PM Modi addressed the 'Parivartan Sankalp Yatra' in Jagdalpur, Chhattisgarh. He said everyone is saddened by the misdeeds done by Congress MLAs and ministers here. Corruption is prevalent everywhere. Crime is at its peak in Chhattisgarh. Chhattisgarh has reached among the leading states in terms of murders. Development in Chhattisgarh is visible either in posters and banners, or in the coffers of Congress leaders.” “Congress has given Chhattisgarh false propaganda, corruption and a scandalous government.PM Modi address 'Parivartan Sankalp Yatra' at Jagdalpur in Chhattisgarh
October 03rd, 12:45 pm
PM Modi addressed the 'Parivartan Sankalp Yatra' in Jagdalpur, Chhattisgarh. He said everyone is saddened by the misdeeds done by Congress MLAs and ministers here. Corruption is prevalent everywhere. Crime is at its peak in Chhattisgarh. Chhattisgarh has reached among the leading states in terms of murders. Development in Chhattisgarh is visible either in posters and banners, or in the coffers of Congress leaders.” “Congress has given Chhattisgarh false propaganda, corruption and a scandalous government.சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் பல்வேறு திட்டங்களின் தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 03rd, 11:30 am
சத்தீஸ்கர் மாநில ஆளுநர் திரு. பிஸ்வபூஷன் ஹரிச்சந்தன் அவர்களே, நாடாளுமன்றத்தைச் சேர்ந்த எனது இரண்டு பிரபலமான சகாக்களே, மாநில சட்டமன்றப் பிரதிநிதிகளே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாவட்ட கவுன்சில், தாலுகா கவுன்சில் உறுப்பினர்களே, பெண்கள் மற்றும் பெருமக்களே,சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர், ஜக்தல்பூரில் சுமார் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
October 03rd, 11:12 am
பஸ்தார் மாவட்டத்தில் உள்ள நாகர்னாரில் ரூ.23,800 கோடிக்கு மேல் மதிப்புடைய என்.எம்.டி.சி எஃகு நிறுவனத்தின் எஃகு ஆலையை அர்ப்பணிப்பதும், பல ரயில்வே மற்றும் சாலை திட்டங்களும் இதில் அடங்கும். தரோகி - ராய்ப்பூர் மின்சார ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.