Rashtra Prerna Sthal gives the message that every step, every effort must be dedicated to nation-building: PM Modi in Lucknow
December 25th, 06:16 pm
PM Modi inaugurated the Rashtra Prerna Sthal in Lucknow, Uttar Pradesh today. He paid respectful homage, offering salutations to Mahamana Malaviya ji, Atal ji, and Maharaja Bijli Pasi. He remarked that Atal ji and Malaviya ji dedicated their lives to safeguarding India’s identity, unity and pride. Quoting lines of Atal ji, the PM emphasized that Rashtra Prerna Sthal gives the message that every step, every effort must be dedicated to nation-building.உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உத்வேகமளிக்கும் தேசிய நினைவிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
December 25th, 05:23 pm
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்களைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று தேசிய நினைவிடத்தை திறந்து வைத்தார். வாஜ்பாயின் 101 - வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று லக்னோ நகரம் ஒரு புதிய உத்வேகத்திற்கு சாட்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்., இந்தியாவில் மற்றும் உலகளவில் உள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவிலும் லட்சக்கணக்கான கிறித்தவ குடும்பங்கள் இன்று இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதே நம் அனைவரின் ஒன்றிணைந்த விருப்பம் என்றும் அவர் கூறினார்.புகழ்பெற்ற சிற்பி ராம் சுதார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 18th, 12:10 pm
ராம் சுதார் ஒரு அற்புதமான சிற்பி என்றும், அவரது கைவண்ணம், கெவாடியாவில் உள்ள ஒற்றுமைச் சிலை உட்பட இந்தியாவின் மிகவும் பிரபலமான சில அடையாளச் சின்னங்களை நமக்கு வழங்கியுள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அவரது படைப்புகள் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கூட்டு உணர்வின் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளாக எப்போதும் போற்றப்படும் என்றும், அவர் வரும் தலைமுறையினருக்காக தேசியப் பெருமையை அழியாததாக்கியுள்ளார் என்றும் திரு மோடி கூறியுள்ளார். அவரது படைப்புகள் கலைஞர்களுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75-வது நினைவு நாளில் அவருக்கு பிரதமர் மரியாதை
December 15th, 08:44 am
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75-வது நினைவு நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சர்தார் படேல் தமது முழு வாழ்க்கையையும் தேசத்தை ஒன்றிணைத்து, இந்தியாவை ஒற்றுமையின் ஒற்றை இழையாகப் பின்னுவதற்கு அர்ப்பணித்ததாக அவர் கூறியுள்ளார்.The Arya Samaj has fearlessly upheld and promoted the essence of Indianness: PM Modi at International Arya Mahasammelan 2025
October 31st, 07:00 pm
PM Modi attended and addressed the International Arya Mahasammelan 2025 in New Delhi. Speaking on the occasion, the PM expressed his deep reverence for Swami Dayanand Ji’s ideals. He emphasized that Swami Dayanand Ji rejected caste-based discrimination and untouchability. The PM highlighted that the occasion reflects the great legacy of social reform consistently advanced by the Arya Samaj and noted its historical association with the Swadeshi movement.இந்தியா முழுவதும் உள்ள மக்களை இணைக்கும் பெருந்திரள் இயக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒற்றுமை சிலை சர்தார் படேலுக்கு மரியாதை செலுத்துவதாகும்: பிரதமர்
October 31st, 12:43 pm
ஒற்றுமை சிலை என்பது சர்தார் படேலுக்கு செலுத்தப்படும் மரியாதை என்றும் நாடு முழுவதும் உள்ள மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற மக்கள் இயக்கத்தின் பாராட்டத்தக்க உதாரணம் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சிலையுடன் மிக நெருக்கமாக இணைந்த உணர்வை அவர்கள் பெற்றுள்ளனர் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.Prime Minister pays tributes to Sardar Vallabhbhai Patel at the Statue of Unity in Kevadia
October 31st, 12:41 pm
The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Sardar Vallabhbhai Patel at the ‘Statue of Unity’ in Kevadia.Since 2014, the nation has once again witnessed Sardar Patel’s spirit of iron resolve: PM Modi at Rashtriya Ekta Diwas in Kevadia
October 31st, 09:00 am
While addressing the Rashtriya Ekta Diwas programme, PM Modi extended his heartfelt greetings and best wishes to all citizens on the occasion of Sardar Patel’s birth anniversary. He emphasized that after 2014, the nation once again witnessed a steely resolve inspired by Sardar Patel. He warned that the unity and internal security of the nation face a grave threat from infiltrators and outlined four foundational pillars of India’s unity, strengthening the spirit of ‘Ek Bharat, Shreshtha Bharat’.குஜராத் மாநிலம் கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் இது இரும்பு மனிதர் சர்தார் படேலின் இந்தியா, இது தனது பாதுகாப்பில் அல்லது சுயமரியாதையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது: பிரதமர்
October 31st, 08:44 am
குஜராத் மாநிலம் கெவாடியாவில் இன்று தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம் வரலாற்று சிறப்புமிக்கது என்றார். நாடு முழுவதும் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டம் பற்றி எடுத்துரைத்த அவர், இதில் கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதாகவும் இதன் மூலம் புதிய இந்தியாவின் தீர்மானம் உறுதியாக உணரப்பட்டது என்றும் கூறினார். சர்தார் படேலின் 150-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றும் சிறப்பு அஞ்சல்தலை ஒன்றும் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சர்தார் படேலின் பிறந்தநாள் மற்றும் தேசிய ஒற்றுமை தின நிகழ்வையொட்டி 140 கோடி மக்களுக்கும் பிரதமர் தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.'வந்தே மாதரம்' என்ற பாடலின் உணர்வு இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது: ‘மன் கீ பாத்’தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
October 26th, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், அக்டோபர் 31 அன்று சர்தார் படேலின் 150வது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சத் பூஜை விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இந்திய நாய் இனங்கள், இந்திய காபி, பழங்குடி சமூகத் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளையும் அவர் தொட்டார். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா குறித்து பிரதமர் சிறப்புரையாற்றினார்.குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 20th, 11:00 am
குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, சி.ஆர்.பாட்டில் அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திருமிகு நிமுபென் பம்பானியா அவர்களே, நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, உயர் அதிகாரிகளே, இதர முக்கிய விருந்தினர்களே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே வணக்கம்!!குஜராத்தின் பாவ்நகரில் 'கடலில் இருந்து வளம்' என்ற நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் - ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
September 20th, 10:30 am
குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். ஏராளமான நகரங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 25th, 06:42 pm
இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாதுகுஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 25th, 06:15 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.PM appreciates the visit of Shri Omar Abdullah to the iconic Statue of Unity at Kevadia, Gujarat
July 31st, 11:05 pm
The Prime Minister, Shri Narendra Modi, today welcomed and appreciated the visit of Shri Omar Abdullah to the Sabarmati Riverfront and the iconic Statue of Unity at Kevadia, Gujarat.காந்தி நகரில் குஜராத் நகர வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 27th, 11:30 am
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் அவர்களே, முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர்லால் அவர்களே, சி ஆர் பாட்டீல் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்துள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுக் கால கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
May 27th, 11:09 am
குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெற்ற குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது, 2005-ம் ஆண்டின் நகர்ப்புற வளர்ச்சியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை நகர்ப்புற வளர்ச்சி ஆண்டாக அவர் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வதோதரா, தாஹோத், பூஜ், அகமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களுக்கு கடந்த 2 நாட்களில் பயணம் செய்தபோது, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் முழக்கத்துடனும், பறக்கும் மூவர்ணக் கொடிகளுடனும் தேசபக்தியின் உற்சாகத்தை தாம் அனுபவித்து வருவதாகக் கூறினார். இது காண்பதற்கு ஒரு காட்சி என்றும், இந்த உணர்வு குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இருப்பதாகவும் அவர் கூறினார். பயங்கரவாதத்தின் முள்ளை அகற்ற இந்தியா முடிவு செய்தது, அதை மிகுந்த உறுதியுடன் செய்தது என்று பிரதமர் கூறினார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 120-வது அத்தியாயத்தில், 30.03.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மிகவும் புனிதமான தினம், இன்றைய தினத்தன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. இன்று சைத்ர மாத சுக்ல பக்ஷத்தின் பிரதிபதா திதியாகும். இன்றிலிருந்து சைத்ர நவராத்திரி தொடங்குகிறது. இன்றிலிருந்து பாரதிய நவவருஷமும் தொடங்குகிறது. இந்த முறை விக்ரம் சம்வந்த் 2082 தொடங்குகிறது. பிஹாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், குஜராத்திலிருந்தும் என, இந்த வேளையிலே என் முன்பாக உங்களுடைய ஏராளமான கடிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலே பல கடிதங்கள் சுவாரசியமான முறையிலே மக்களுக்குத் தங்களுடைய மனதின் குரலைப் பதிவு செய்கின்றன. பல கடிதங்களில் நல்வாழ்த்துக்களும் உண்டு, பாராட்டுச் செய்திகளும் உண்டு. ஆனால் இன்று சில செய்திகளை உங்களுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது.மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதிலின் ஆங்கில மொழிபெயர்ப்பு
February 04th, 07:00 pm
மாண்புமிகு குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். நேற்றும் இன்றும் இரவு வெகுநேரம் வரை, அனைத்து மாண்புமிகு எம்.பி.க்களும் இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தங்கள் கருத்துகளால் வளப்படுத்தினர். பல மாண்புமிகு அனுபவம் வாய்ந்த எம்.பி.க்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர், மேலும், ஜனநாயகத்தின் பாரம்பரியத்தைப் போலவே, தேவை இருந்த இடத்தில், பாராட்டு இருந்தது, ஒரு பிரச்சனை இருந்த இடத்தில், சில எதிர்மறை விஷயங்கள் இருந்தன, ஆனால் இது மிகவும் இயல்பானது! திரு. சபாநாயகர் அவர்களே, நாட்டு மக்கள் 14வது முறையாக இந்த இடத்தில் அமர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க எனக்கு வாய்ப்பளித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம், எனவே, இன்று நான் மக்களுக்கு மிகுந்த மரியாதையுடன் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவையில் விவாதத்தில் பங்கேற்று விவாதத்தை வளப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதில்
February 04th, 06:55 pm
மக்களவையில் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார். அவையில் உரையாற்றிய பிரதமர், நேற்றும் இன்றும் விவாதங்களில் பங்கேற்ற அனைத்து மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளையும் பாராட்டினார். ஜனநாயகத்தின் பாரம்பரியம் என்பது தேவையான இடங்களில் பாராட்டு மற்றும் கூடவே சில எதிர்மறையான கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையானது என்று பிரதமர் குறிப்பிட்டார். 14 ஆவது தடவையாக குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்க மக்கள் வாய்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், குடிமக்களுக்கு தனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்ததுடன், கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரையும் தங்கள் எண்ணங்களால் விவாதங்களைச் செழுமைப்படுத்தியதற்காக பாராட்டினார்.