நாகாலாந்து மாநிலம் உருவான தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

December 01st, 06:09 pm

நாகாலாந்து மாநிலம் உதயமான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புகழ் பெற்ற நாகா மக்களின் நாகரீகம், சேவை மனப்பான்மை, துணிச்சல் மற்றும் கனிவு போன்ற பண்புகள் பெரிதும் ஈர்க்கும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பல்வேறு துறைகளில் அம்மாநில மக்கள் தனித்துவ திறமை கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இனி வரும் ஆண்டுகள் அம்மாநில மக்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் வளமையைக் கொண்டு வரட்டும் என்று பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 15th, 08:22 am

ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ஜார்க்கண்ட் மாநிலம் முன்னேற்றத்தை விரும்பும் பழங்குடியினக் கலாச்சார வளமை கொண்ட ஒரு புகழ்பெற்ற நிலபரப்பாக உள்ளது என்று அவர் கூறினார். பகவான் பிர்சா முண்டாவின் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த புனித பூமியின் வரலாறு, துணிச்சல், போராட்டம் மற்றும் கண்ணியம் தொடர்பான உத்வேகம் அளிக்கும் பல்வேறு கதைகளால் நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

உத்கல தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

April 01st, 08:59 am

உத்கலா தினத்தையொட்டி ஒடிசா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசாவின் வரலாறு, இலக்கியம் மற்றும் இசை குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் ஒடிசா அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்

நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

December 01st, 12:28 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாகாலாந்து மக்களுக்கு அவர்களின் மாநில தினத்தையொட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாகா கலாச்சாரம் அதன் கடமை மற்றும் இரக்க உணர்வுக்கு பெயர் பெற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

February 20th, 10:49 am

மிசோரம் மக்களுக்கு மாநில அமைப்பு தின வாழ்த்துகள். மிசோரமின் தனித்துவமான கலாச்சாரம், அதன் வளமான அழகு மற்றும் அதன் மக்களின் அன்பான உணர்வு ஆகியவற்றால் இந்தியா மிகவும் பெருமை கொள்கிறது. பாரம்பரியம் மற்றும் நல்லிணக்கத்தின் கலவையை உள்ளடக்கிய மிசோரத்தின் கலாச்சாரம் மிகவும் ஊக்கமளிக்கிறது. மிசோரமின் தொடர்ச்சியான முன்னேற்றம், அமைதி மற்றும் செழிப்புக்காக பிரார்த்திக்கிறேன்.

இமாச்சலப் பிரதேச அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 25th, 09:42 am

இமாச்சலப் பிரதேச அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநில தினத்தை முன்னிட்டு மணிப்பூர் மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

January 21st, 09:24 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, மணிப்பூர் மாநில தினமான இன்று அந்த மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.