இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகிக்கும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெறும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
June 09th, 07:32 pm
இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்து வரும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெறும், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பிரதமரின் சிறந்த ஆளுகைக்கும், தென்பகுதி நாடுகளின் மக்களுக்காக அவர் குரல் கொடுப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய, பொருளாதார ரீதியாக ஆற்றல்மிக்க இந்தியாவை உருவாக்கும் அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் உலகத் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.உலக மரியாதை சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியை கௌரவித்த இந்த 29 நாடுகள் - அதற்கான காரணம் இங்கே!
July 07th, 04:59 pm
குவைத், பிரான்ஸ், பப்புவா நியூ கினியா மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பிற நாடுகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமருக்கு தங்கள் மிக உயர்ந்த சிவிலியன் கௌரவங்களை வழங்கும்போது, அது இராஜதந்திர மரியாதையை விட அதிகமாக பிரதிபலிக்கிறது. இது ஒரு நாட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கு, மதிப்புகள் மற்றும் தலைமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரத்தைக் குறிக்கிறது.பிரதமருக்கு இலங்கை மித்ர விபூஷனா விருது வழங்கி கௌரவிப்பு
April 05th, 02:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று இலங்கை அதிபர் திசநாயக்க 'இலங்கை மித்ர விபூஷனா' என்ற விருதை வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்த திரு மோடி, இது இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய நட்பு மற்றும் வரலாற்று உறவுகளை அடையாளப்படுத்துவதாக கூறினார்.இலங்கை அதிபருடன் இணைந்து, கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்
April 05th, 11:30 am
இன்று அதிபர் திசநாயகாவால் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் பெருமை அளிப்பதாகும். இந்த விருது என்னை மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களையும் கவுரவப்படுத்துகிறது. இது இந்திய - இலங்கை மக்களுக்கு இடையேயான வரலாற்று உறவுகள், ஆழமான நட்புறவுக்கு செலுத்தும் மரியாதையாகும்.