இலங்கை அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்

December 01st, 08:45 pm

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் திரு அனுர குமார திசநாயக்கவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

இலங்கையில், டிட்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

November 28th, 03:37 pm

இலங்கையில், டிட்வா புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவித்து வரும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினரின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் இந்த பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கு பிரார்த்தனை செய்வதாக தனது இரங்கல் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

The Indian Navy stands as the guardian of the Indian Ocean: PM Modi says on board the INS Vikrant

October 20th, 10:30 am

In his address to the armed forces personnel on board INS Vikrant, PM Modi extended heartfelt Diwali greetings to the countrymen. He highlighted that, inspired by Chhatrapati Shivaji Maharaj, the Indian Navy has adopted a new flag. Recalling various operations, the PM emphasized that India stands ready to provide humanitarian assistance anywhere in the world. He also noted that over 100 districts have now fully emerged from Maoist terror.

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடினார்

October 20th, 10:00 am

ஐ.என்.எஸ். விக்ராந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுதப்படை வீரர்களிடம் உரையாற்றினார். இன்று ஒரு குறிப்பிடத்தக்க நன்னாள், குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் குறிப்பிடத்தக்க காட்சி என்று குறிப்பிட்ட திரு. மோடி, ஒரு பக்கம் பரந்த கடல், மறுபுறம், இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் மகத்தான வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

The entire world today sees India as a reliable, responsible and resilient partner: PM Modi at NDTV World Summit 2025

October 17th, 11:09 pm

In his address at the NDTV World Summit 2025, PM Modi remarked that over the past eleven years, India has shattered every doubt and overcome every challenge. He highlighted that India has transitioned from being part of the “Fragile Five” to becoming one of the top five global economies. The PM noted that while over 125 districts were affected by Maoist violence 11 years ago, today it's reduced to just 11 districts.

புதுதில்லியில் நடைபெற்ற என்டிடிவி உலக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 17th, 08:00 pm

புதுதில்லியில் நடைபெற்ற என்டிடிவி உலக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.10.2025) உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும், 140 கோடி மக்களின் வலுவான ஆதரவுடன் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா முன்னேற்றப் பாதையில் விரைவாக சென்றுகொண்டிருக்கும் நாடாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். உலகின் 5 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியை இலங்கைப் பிரதமர் இன்று சந்தித்தார்

October 17th, 04:26 pm

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

சுதேசி தயாரிப்புகள், உள்ளூர் மக்களுக்கான குரல்: பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பண்டிகை அழைப்பு.

September 28th, 11:00 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், பகத் சிங் மற்றும் லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்திய கலாச்சாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகள், ஆர்எஸ்எஸ்ஸின் 100 ஆண்டு பயணம், தூய்மை மற்றும் காதி விற்பனையில் ஏற்பட்ட எழுச்சி போன்ற முக்கிய தலைப்புகள் குறித்தும் அவர் பேசினார். நாட்டை தன்னிறைவு பெறுவதற்கான பாதை சுதேசியை ஏற்றுக்கொள்வதில் உள்ளது என்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் ஆடி திருவாதிரை திருவிழாவின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 27th, 12:30 pm

மதிப்பிற்குரிய ஆதீன மடாதிபதிகள் (தலைவர்கள்) அவர்களே, சின்மயா மிஷனின் துறவிகளே, தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் டாக்டர்.எல்.முருகன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு திருமாவளவன் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் தமிழக அமைச்சர்களே, நாடாளுமன்றத்தில் எனது நண்பரான திரு இளையராஜா அவர்களே,ஓதுவார்களே, பக்தர்களே, மாணவர்களே, கலாச்சார வரலாற்றாசிரியர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

July 27th, 12:25 pm

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று (27.07.2025) நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜ ராஜ சோழனின் புனித பூமியில் தெய்வீக சிவ தரிசனம் மூலம் அனுபவித்த ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலைப் பற்றி உணர்ந்து, சர்வவல்லமையுள்ள சிவபெருமானை வணங்கியதாக பிரதமர் கூறினார். திரு இளையராஜாவின் இசையுடனும், ஓதுவார்களின் புனித மந்திரங்களுடனும், ஆன்மீக சூழல் ஆன்மாவை ஆழமாக நெகிழச் செய்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது

April 24th, 03:29 pm

ஏப்ரல் 22, 2025 அன்று அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், உலகத் தலைவர்களிடமிருந்து வலுவான ஒற்றுமை அலையை எழுப்பியுள்ளது. உலகளாவிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் கடைசி வரை துரத்தும் என்று சபதம் செய்தார்.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 06th, 02:00 pm

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, டாக்டர் எல் முருகன் அவர்களே, தமிழ்நாடு அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!

ராமேஸ்வரத்தில் ₹8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

April 06th, 01:30 pm

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ₹ 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த அவர், சாலை பாலத்திலிருந்து ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து பாலத்தின் செயல்பாட்டைப் பார்வையிட்டார். முன்னதாக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்து பூஜை வழிபாட்டை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இன்று, ஸ்ரீ ராம நவமியின் புனித தருணமாக அமைந்துள்ளது என்று கூறினார். அயோத்தியில் உள்ள அற்புதமான ராமர் கோவிலில், இன்று, சூரியனின் தெய்வீக கதிர்கள் குழந்தை ராமரை ஒரு பெரிய திலகத்துடன் அலங்கரித்தன என்று அவர் கூறினார். பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையும், அவரது ஆட்சியிலிருந்து நல்லாட்சியின் உத்வேகமும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான குறிப்பிடத்தக்க அடித்தளமாக செயல்படுகின்றன என்று அவர் கூறினார். தமிழ்நாட்டின் சங்க கால இலக்கியங்களிலும் பகவான் ஸ்ரீ ராமர் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், புனித பூமியான ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இலங்கையில், இந்திய நிதியுதவியுடன் கூடிய ரயில் கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

April 06th, 12:09 pm

அநுராதபுரத்தில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட இரண்டு ரயில் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் இலங்கை அதிபர் திரு அநுரகுமார திசநாயக, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் இன்று கலந்துகொண்டனர்.

ஜெயஸ்ரீ மகா போதி கோவிலில் பிரதமர் வழிபாடு நடத்தினார்

April 06th, 11:24 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயக ஆகியோர் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மகா போதி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தினர்.

பிரதமருடன் இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் சந்திப்பு

April 05th, 10:59 pm

இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை கொழும்பில் சந்தித்தனர். இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தளமான சீதா எலியா ஆலயம் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று திரு மோடி அறிவித்தார்.

இலங்கை தமிழ் சமூகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு

April 05th, 10:48 pm

இலங்கைத் தமிழ் சமூகத் தலைவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொழும்பில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மதிப்பிற்குரிய தமிழ் தலைவர்களான இரா.சம்பந்தன், திரு மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

இலங்கை எதிர்க்கட்சித் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

April 05th, 10:34 pm

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாசாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொழும்பில் சந்தித்துப் பேசினார்.

1996 இலங்கை கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மேற்கொண்ட சிறப்பு கலந்துரையாடலின் தமிழாக்கம்

April 05th, 10:25 pm

உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அணி இந்திய மக்கள் இன்னும் அன்புடன் நினைவில் வைத்திருக்கும் ஒரு அணிஎன்று நான் உணர்கிறேன். நீங்கள் இந்திய அணியை வீழ்த்திய தருணத்தை நாடு மறக்கவில்லை.

1996 இலங்கை கிரிக்கெட் அணியுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கலந்துரையாடல்

April 05th, 10:23 pm

இலங்கையின் கொழும்பில் நேற்று, 1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்தகே கலந்துரையாடலின் போது, பிரதமரை சந்தித்ததில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்திய மக்கள், அணியின் தாக்கத்தை ஏற்படுத்திய செயல்திறனை, குறிப்பாக நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய மறக்கமுடியாத வெற்றியை இன்னும் நினைவில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களின் சாதனைகள் தேசத்தில் தொடர்ந்து எதிரொலிப்பதாக அவர் மேலும் கூறினார். 2010 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த ஒரு போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர் நடுவராகப் பணியாற்றியதைப் பார்த்ததை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்தியாவின் 1983 உலகக் கோப்பை வெற்றி மற்றும் இலங்கை அணியின் 1996 உலகக் கோப்பை வெற்றியின் உருமாறும் தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார், இந்த மைல்கற்கள் கிரிக்கெட் உலகை எவ்வாறு மாற்றியமைத்தன என்பதை வலியுறுத்தினார். டி 20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை, 1996 போட்டிகளில் அப்போதைய இலங்கை கிரிக்கெட் அணி வெளிப்படுத்திய புதுமையான விளையாட்டு பாணியில் காணலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். வீரர்களின் தற்போதைய முயற்சிகள் குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிய அவர், அவர்கள் இன்னும் கிரிக்கெட் மற்றும் பயிற்சியாளர் பணிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரித்தார்.