The essence of Vande Mataram is Bharat, Maa Bharati: PM Modi

November 07th, 10:00 am

PM Modi inaugurated the year-long commemoration of 150 Years of the National Song “Vande Mataram” in New Delhi on November 7, 2025. He highlighted that Vande Mataram embodies the devotion and spiritual dedication to Maa Bharati. The PM emphasized the profound significance of Vande Mataram, noting that every line, every word, and every emotion in Bankim Babu’s composition carries deep meaning. He called upon everyone to make this century the century of India.

“வந்தே மாதரம்” தேசிய பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் ஓராண்டு கால நிகழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்

November 07th, 09:45 am

வந்தே மாதரம் பாடலை கூட்டாக பாடுவது பற்றி குறிப்பிட்ட அவர், உண்மையில் இது கம்பீரமான அனுபவத்தை தருகிறது. ஏராளமான குரல்களுக்கிடையே ஒற்றை சங்கீதம், ஒருங்கிணைந்த குரல், தடையற்ற வேகம் ஆகியவற்றை உருவாக்குகிறது. நல்லிணக்க அலைகளின் எதிரொலி பேராற்றலுடன் மனதை கிளர்ந்தெழச்செய்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை தேசம் கொண்டாடும் நவம்பர் 07 என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் என்று அவர் கூறினார். வரலாற்றின் பக்கங்களில் இந்தநாளினை குறிப்பதற்காக சிறப்பு நினைவு நாணயம் ஒன்றும், அஞ்சல்தலை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளன. அன்னை பாரதத்திற்கு தங்களின் இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு புகழாரம் சூட்டிய திரு மோடி, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு வந்தேமாதரத்தின் 150-வது ஆண்டில் அனைத்து குடிமக்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

August 15th, 03:48 pm

ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2025-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 12th, 02:15 pm

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திருவாளர்கள் மன்சுக் மாண்டவியா அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, ஜெயந்த் சவுத்ரி அவர்களே, ரக்ஷா காட்ஸே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே! இந்த பாரத் மண்டபம் இந்திய இளைஞர்களின் ஆற்றலாலும், சக்தியாலும் நிரம்பியுள்ளது. இன்று நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறது. சுவாமி விவேகானந்தர் நாட்டின் இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இளைய தலைமுறையினர் மீது, புதிய தலைமுறையினர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சுவாமி விவேகானந்தர் அடிக்கடி கூறுவார். எனது தொண்டர்கள் சிங்கங்களைப் போல், இளம் தலைமுறையிலிருந்து வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பார்கள் என்று அவர் கூறுவார். விவேகானந்தர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தது போலவே, விவேகானந்தர் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் சொன்ன எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய இளைஞர்களுக்காக அவர் என்ன நினைத்தாரோ, என்ன சொன்னாரோ அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. உண்மையில், சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்திருந்தால், 21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் விழிப்புணர்வு பெற்ற சக்தியைக் கண்டு, உங்களின் தீவிர முயற்சிகளைப் பார்த்து, பாரதத்தின் புதிய நம்பிக்கை, புதிய சக்தி ஆகியவற்றால் அவர் பூரிப்படைந்திருப்பார். புதிய கனவுகளுக்கான விதைகளை விதைத்திருப்பார்.

வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

January 12th, 02:00 pm

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 துடிப்பான இளம் தலைவர்களுடன் அவர் உரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய இளைஞர்களின் துடிப்பான சக்தி, பாரத் மண்டபத்திற்கு உயிர்ப்பையும் சக்தியையும் கொண்டு வந்திருப்பதை எடுத்துரைத்தார். நாட்டின் இளைஞர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்த சுவாமி விவேகானந்தரை ஒட்டுமொத்த தேசமும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். தமது சீடர்கள் இளைய தலைமுறையிலிருந்து வருவார்கள் என்றும், அவர்கள் சிங்கங்களைப் போல ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பார்கள் என்றும் சுவாமி விவேகானந்தர் நம்பினார் என்றும் அவர் கூறினார். சுவாமிஜி இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்ததைப் போல, சுவாமிஜி மீதும், அவரது நம்பிக்கைகள் மீதும் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் கூறினார். குறிப்பாக இளமை குறித்த அவரது பார்வை குறித்து அவரை முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்தால், 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களின் விழிப்புற்ற சக்தியையும் துடிப்பான முயற்சிகளையும் காணும் போது அவர் புதிய நம்பிக்கையால் மகிழ்வார் என்று பிரதமர் கூறினார்.

ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்

August 15th, 11:43 am

பிரபல தத்துவ ஞானியும், சிந்தனையாளரும், ஆன்மீக தலைவருமான ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.

ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

February 08th, 01:00 pm

ஆச்சார்ய கௌடியா மிஷனின் வணக்கத்திற்குரிய பக்தி சுந்தர் சன்னியாசி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பகவான் கிருஷ்ண பக்தர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே!

ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

February 08th, 12:30 pm

தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது நினைவாக நினைவுத் தபால் தலையையும், நாணயத்தையும் வெளியிட்டார். கௌடியா மடத்தின் நிறுவனர், ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதர் வைணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.

ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

December 13th, 06:52 pm

இந்தப் புனிதமான நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணமாகும். நமது புதிய தலைமுறைக்கு அவரின் சிறப்புகளையும் சிந்தனைகளையும் எடுத்துச் செல்வதற்காக இந்த ஆண்டு முழுவதையும் கொண்டாட நாடு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பகுதியாக, கணிசமான காலத்தை மகரிஷி செலவிட்ட புதுச்சேரியில் இன்று நாடு அவருக்கு மகத்தான அஞ்சலியை செலுத்துகிறது. ஸ்ரீ அரவிந்தருக்கான நினைவு நாணயமும் அஞ்சல்தளையும் கூட இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையிலிருந்தும்,போதனைகளிலிருந்தும் ஊக்கம் பெறுவதற்கான தேசத்தின் முயற்சிகள் நமது தீர்மானங்களுக்குப் புதிய சக்தியையும் பலத்தையும் அளிக்கும் என்று நான் நிச்சயமாக நம்பிகிறேன்.

PM addresses programme commemorating Sri Aurobindo’s 150th birth anniversary via video conferencing

December 13th, 06:33 pm

The Prime Minister, Shri Narendra Modi addressed a programme celebrating Sri Aurobindo’s 150th birth anniversary via video conferencing today in Kamban Kalai Sangam, Puducherry under the aegis of Azadi ka Amrit Mahotsav. The Prime Minister also released a commemorative coin and postal stamp in honour of Sri Aurobindo.