உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் அனஹத் சிங்கின் சாதனைக்குப் பிரதமர் பாராட்டு
July 26th, 03:28 pm
2026 உலக இளையோர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (26.07.2026) பாராட்டியுள்ளார். தங்கப் பதக்கம் வென்று, உலக இளையோர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற பெருமையை, அனஹத் சிங் பெற்றிருப்பதில் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய ஸ்குவாஷ் அணிக்கு பிரதமர் வாழ்த்து
December 15th, 10:16 am
எஸ்டிஏடி ஸ்குவாஷ் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்துள்ள இந்திய ஸ்குவாஷ் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஸ்குவாஷ் விளையாட்டு ஜாம்பவான் ராஜ் மன்சந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 04th, 03:42 pm
முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மன்சந்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றவர் மன்சந்தா என பிரதமர் கூறியுள்ளார்.லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2028-ல் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருப்பதைப் பிரதமர் வரவேற்றுள்ளார்
October 16th, 08:18 pm
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2028-ல் பேஸ்பால்-சாஃப்ட்பால், கிரிக்கெட், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ், ஸ்குவாஷ் ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். கிரிக்கெட்டைச் சேர்த்திருப்பது, இந்த அற்புதமான விளையாட்டிற்கு உலகளாவிய புகழ் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.