ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
August 28th, 01:22 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். கண்ணியம், கருணை ஆகிய பண்புகளின் அடிப்படையிலான சமூகத்தை உருவாக்குவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், ஆன்மீகத் தலைவராகவும், சிந்தனையாளராகவும், திகழ்ந்தவர் ஸ்ரீ நாராயண குரு என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.The government stands firmly with the youth in the fight against drugs: PM Modi
August 02nd, 11:25 am
PM Modi addressed a gathering during the launch of ‘Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan’ via VC. In his speech, he highlighted the objective of the campaign as encouraging youth to stay away from the deadly menace of drugs in order for India to become a developed nation. Calling the youth India's Amrit Generation, he explained the harmful effects of drug abuse while emphasising the need to protect youth from this trap. He expressed hope that the pledge taken today will continue for the next 100 weeks.வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
August 02nd, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.08.2026) வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நாடு தழுவிய மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 28,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இணைந்திருந்த ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குப் பாராட்டுத் தெரிவித்தார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தக் கூட்டத்தை ஒரு ஆழமான தேசிய உறுதிப்பாடாகக் குறிப்பிட்டார். இன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் ஒரு மகத்தான, முக்கியமான தீர்மானத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்
July 04th, 01:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (04.07.2026) சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், ஆன்மீக மரபுகள், தேசிய உணர்வு ஆகியவற்றிற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பு, நமது தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது ஆழ்ந்த ஞானமும் காலத்தால் அழியாத கொள்கைகளும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டும் சக்தியாகத் திகழ்கின்றன என்று பிரதமர் கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான தேசத்தின் கூட்டு உறுதிப்பாட்டிற்கு அவரது ஆன்மீகச் செய்தி தொடர்ந்து ஊக்கமளித்து, ஆற்றலூட்டும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜி-யை பிரதமர் சந்தித்தார்
May 10th, 07:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள வாழும் கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்புக்குச் சென்றபோது, ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜி-ஐ சந்தித்தார்.Prime Minister pays homage to Adi Shankaracharya
April 21st, 01:09 pm
The Prime Minister, Shri Narendra Modi, paid tributes to one of India’s greatest spiritual luminaries, Adi Shankaracharya, on his Jayanti today. Shri Modi remarked that his profound teachings, thoughts and philosophy of Advaita Vedanta continue to guide innumerable people globally. And his efforts to revitalise spiritual thought and establish spiritual centres across the nation remain a lasting inspiration.May his wisdom continue to illuminate our path and strengthen our commitment to truth, compassion and collective well-being, Shri Modi added.ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் நாளை (ஜூன் 24) தொடங்கி வைக்கிறார்
June 23rd, 05:24 pm
இந்தியாவின் சிறந்த ஆன்மீக தலைவரான ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூன் 24, 2025) காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றுகின்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் 1925 மார்ச் 12 அன்று சிவகிரி மடத்தில் மகாத்மா காந்தியின் பயணத்தின் போது நடந்தது. வைக்கம் சத்தியாக்கிரகம், மத மாற்றங்கள், அகிம்சை, தீண்டாமை ஒழிப்பு, முக்தி அடைதல், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விஷயங்களில் இந்த உரையாடல் நடந்தது.புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
May 09th, 02:21 pm
இந்திய மக்கள் சார்பாக புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் ஆற்றிய சேவையை உலகம் எப்போதும் நினைவில் கொள்ளும்: பிரதமர்
April 26th, 01:00 pm
இந்திய மக்கள் சார்பாக புனித போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அவர்கள் அஞ்சலி செலுத்தியதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய சேவையை உலகம் எப்போதும் நினைவில் கொள்ளும் என்று திரு மோடி மேலும் கூறினார்.புனித போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
April 21st, 02:20 pm
புனித போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். கருணை, பணிவு, ஆன்மீக துணிவு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் அவர் என்று பிரதமர் பாராட்டியுள்ளார்.சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
February 18th, 08:52 am
சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு பிரதமர் பிப்ரவரி 5-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்
February 04th, 07:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 5-ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-க்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், அவர் சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்வார்.ஆயி ஸ்ரீ சோனல் மாதா நூற்றாண்டு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்
January 13th, 12:00 pm
இன்று, புனிதமான பவுஷ் மாதத்தில், நாம் அனைவரும் ஆயி ஸ்ரீ சோனல் மாதாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். சோனல் மாதா ஆசீர்வாதத்தின் கீழ் இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்பது உண்மையில் ஒரு பாக்கியம்.ஸ்ரீ சோனல் மாதா நூற்றாண்டு விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரை
January 13th, 11:30 am
பிரதமர் தமது காணொலி உரையில், புனித பவுஷ் மாதத்தில் ஸ்ரீ சோனல் மாவின் நூற்றாண்டு விழா நடைபெறுவதாகக் கூறினார். சோனல் மாதாவின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்பது ஒரு பாக்கியம் என்றும் கூறினார்.ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலக மாநாட்டு மையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 11:00 am
சாய் ராம்! ஆந்திர மாநில ஆளுநர் திரு அப்துல் நசீர் அவர்களே, திரு ஆர்.ஜே. ரத்னாகர் அவர்களே, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், திரு கே. சக்ரவர்த்தி அவர்களே, எனது பழைய நண்பர் திரு ரியூகோ ஹிரா அவர்களே, டாக்டர் வி. மோகன் அவர்களே, திரு எம்.எஸ். நாகானந்த் அவர்களே, திரு நிமிஷ் பாண்டியா அவர்களே, மற்ற அனைத்துப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் சாய் ராம்.ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் மையத்தை பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
July 04th, 10:36 am
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் காரணமாக தாம் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீ சத்ய சாயியின் அருளாசியும், உத்வேகங்களும் இன்று நம்முடன் உள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் நாடு புதிய மாநாட்டு மையத்தைப் பெற்றுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். புதிய மையம் ஆன்மீக அனுபவத்தையும் நவீனத்துவத்தின் சிறப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையம் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கருத்தியல் மகத்துவத்தை உள்ளடக்கியது என்றும், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றுகூடும் ஆன்மீகம் மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்த விவாதங்களுக்கு இது ஒரு மையப் புள்ளியாக மாறும் என்றும் அவர் கூறினார்.ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் அம்ரிதா மருத்துவமனை தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 24th, 11:01 am
அம்ரிதா மருத்துவமனை மூலம் நம் அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருக்கும் மாதா அமிர்தானந்தமாயி அவர்களே, ஹரியானா மாநில ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே, முதலமைச்சர் திரு மனோகர்லால் கட்டார் அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு கிருஷன் பால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு துஷ்யந்த் சவுதாலா அவர்களே, அனைவருக்கும் வணக்கம்!ஃபரிதாபாதில் நவீனமான அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் தொடங்கி வைத்தார்
August 24th, 11:00 am
ஃபரிதாபாதில் நவீனமான அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஹரியானா ஆளுநர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, முதலமைச்சர் திரு.மனோகர் லால், துணை முதலமைச்சர் திரு.துஷ்யந்த் சௌதாலா, மத்திய அமைச்சர் திரு.கிர்ஷன் பால் குர்ஜார், மாதா அமிர்தானந்தமயி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.‘உள்ளூர் பொருட்கள் வாங்குவதற்கு குரல் கொடுப்போம்’ என்ற பிரதமரின் அழைப்புக்கு ஆன்மீக தலைவர்கள் அமோக ஆதரவு
November 17th, 02:14 pm
தற்சார்பு இந்தியாவுக்கு, உள்ளூர் பொருட்களை வாங்குவதைப் பிரபலப்படுத்த ஆன்மீகத் தலைவர்கள் உதவ வேண்டும் என பிரதமர் நேற்று விடுத்த வேண்டுகோளுக்கு, நாட்டின் முக்கிய ஆன்மீக தலைவர்களிடம் அமோக ஆதரவும், வரவேற்பும் கிடைத்துள்ளது. பிரதமரின் வேண்டுகோளுக்கு துறவிகள் சமூகம் மிகுந்த உற்சாகத்துடன் பதில் அளித்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்துக்காக, உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு குரல் கொடுக்க முன்வந்துள்ள ஆன்மீகத் தலைவர்கள், இதற்கு ஆதரவு அளிக்க உறுதி பூண்டுள்ளனர்.