இந்தியாவின் முதல் ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த்குமார் வேல்குமாருக்கு பிரதமர் வாழ்த்து
September 16th, 08:47 am
ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் 2025-ல் ஆடவர் சீனியர் 1,000 மீட்டர் ஸ்பிரின்ட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் முதலாவது உலக சாம்பியனாகிய ஆனந்த்குமார் வேல்குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய மனவுறுதி, வேகம் மற்றும் உத்வேகம் ஆகியவை ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் முதலாவது உலக சாம்பியனாக அவரை திகழச் செய்துள்ளது என்றும் அவருடைய சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.