ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்குப் பிரதமர் வாழ்த்து
July 18th, 09:54 am
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 சுற்றுவட்டப் பாதையில் ஏவப்படுவதை முன்னிட்டு, அதை உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.07.2026) தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இது நாட்டின் விண்வெளிப் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்ரம்-1 செலுத்தப்படுவது, இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கு ஒரு புதிய எல்லையைத் திறப்பதோடு, புத்தாக்கம், தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவற்றில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்களையும் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament
July 07th, 03:15 pm
Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:00 pm
ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.State Visit of Prime Minister to Seychelles
June 28th, 08:30 pm
During his State Visit to Seychelles, PM Modi held talks with President Patrick Herminie to deepen cooperation across key sectors. The visit saw the exchange of several agreements, the launch of the logo marking 50 years of diplomatic relations, and PM Modi becoming the first Indian Prime Minister to address the National Assembly of Seychelles.List of Outcomes: State Visit of Prime Minister to Seychelles
June 28th, 08:17 pm
PM Modi's State Visit to Seychelles resulted in a wide-ranging set of outcomes and the signing of nine agreements across key sectors. The initiatives deepen cooperation in defence, digital payments, healthcare, agriculture, space, maritime affairs, infrastructure and capacity building, further strengthening the India-Seychelles partnership.India and Slovakia are moving forward in close coordination on the global stage: PM Modi at the India-Slovakia Joint Press Meet
June 15th, 03:00 pm
At the joint press meet in Bratislava, PM Modi and Slovak Prime Minister Robert Fico announced the elevation of India-Slovakia ties to a Comprehensive Partnership. PM Modi highlighted growing cooperation in trade, technology, defence, space, digital innovation and mobility, saying the upgraded partnership reflects shared priorities, shared trust and a shared vision for the future.Bharat Innovates is becoming a bridge between Indian talent and European capital: PM Modi in Nice, France
June 14th, 04:36 pm
PM Modi and French President Emmanuel Macron jointly inaugurated Bharat Innovates 2026 in Nice, France. Addressing a gathering, PM Modi highlighted India’s deep-tech revolution and the transformative potential of AI, satellite technology, advanced manufacturing and clean energy. He called for trusted, inclusive and human-centric innovation, while reaffirming India’s vision of becoming a global innovation hub.பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
June 14th, 03:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர்.ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலிக்கு பிரதமரின் பயணம் (மே 15 - 20, 2026)
May 11th, 09:00 pm
பிரதமர் மோடி, மே 15 முதல் மே 20, 2026 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார். நெதர்லாந்தில், பிரதமர் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரைச் சந்தித்து, பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சுவீடனில், அவர் பிரதமர் கிறிஸ்டர்சனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். நார்வேயில், அவர் மன்னர் ஹரால்ட் V-ஐ சந்தித்து, பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். பின்னர், அவர் இத்தாலிக்குச் சென்று பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.Gen Z & Gen Alpha will lead India to the goal of a Viksit Bharat: PM Modi
December 26th, 01:30 pm
While addressing the national programme marking ‘Veer Baal Diwas’ in New Delhi, PM Modi stated that the Sahibzades broke the boundaries of age and stage and stood like a rock against the cruel Mughal empire. The PM highlighted that the courage and ideals of Mata Gujri, Shri Guru Gobind Singh Ji, and the four Sahibzades continue to give strength to every Indian. He added that India will demonstrate complete liberation from the colonial mindset by 2035.புதுதில்லியில் நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 26th, 01:00 pm
இந்த ஆண்டு நாடு முழுவதிலுமிருந்து 20 சிறார்கள் வீரச்சிறார் விருதைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். அவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருப்பதாகவும் அவர்களது பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறினார்.“Maitri Parv” celebrates the friendship between India and Oman: PM Modi during community programme in Muscat
December 18th, 12:32 pm
While addressing a large gathering of members of the Indian community in Muscat, PM Modi remarked that co-existence and cooperation have been hallmarks of the Indian diaspora. He noted that over the last 11 years, India has witnessed transformational changes across perse fields. He reaffirmed India’s deep commitment to the welfare of the diaspora and invited students to participate in ISRO’s YUVIKA programme.ஓமனில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்
December 18th, 12:31 pm
ஓமன் நாட்டின் மஸ்கட்டில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பல்வேறு இந்திய பள்ளிகளை சேர்ந்த 700-க்கும் அதிகமான மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஓமன் நாட்டில் இந்திய பள்ளிகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவது அப்பள்ளிகளுக்கு சிறப்பு அம்சமாகும்.Prime Minister meets Prime Minister of Canada on the sidelines of G20 Summit in Johannesburg
November 23rd, 09:41 pm
PM Modi met Canada PM Mark Carney on the sidelines of the G20 Leaders’ Summit in Johannesburg. The two leaders welcomed the adoption of Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership and appreciated the renewed momentum in ties since their June 2025 meeting in Kananaskis. PM Modi extended an invitation to Canada PM to visit India.ஜி20 உச்சிமாநாட்டின் 3-வது அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 23rd, 04:05 pm
தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அது தொடர்பான வாய்ப்புகள், வளங்கள் இரண்டும் ஒரு சிலரின் கைகளில் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும், முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கு கவலை அளிக்கும் விஷயம். மேலும் இது புதுமைக்கும் ஒரு தடையாக அமைகிறது. இதை நிவர்த்தி செய்ய, நமது அணுகுமுறையில் ஒரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.'அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்' என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
November 23rd, 04:02 pm
'அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்' - முக்கிய கனிமங்கள்; சிறந்த வேலை; செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வில் பிரதமர் உரையாற்றினார். முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் 'மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். விண்வெளி பயன்பாடுகள், டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மாநாடு 2025 பிரதமர் நவம்பர் 3 ஆம் தேதி துவக்கி வைக்கிறார்
November 02nd, 09:29 am
நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலுக்கு மிகப் பெரிய உந்துதல் அளிக்கும் விதமாக, பிரதமர் அவர்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு திட்ட நிதியையும் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டமானது, நாட்டில் தனியார் துறையை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.CETA is a roadmap for shared progress, shared prosperity, and shared peoples between India & UK: PM Modi at India-UK CEO Forum
October 09th, 04:41 pm
In his address at the India-UK CEO Forum, PM Modi remarked that the forum has emerged as an important pillar of the India-UK Strategic Partnership. He highlighted that CETA is not merely a trade agreement — it is a roadmap for shared progress, shared prosperity, and shared peoples between two of the world’s largest economies. He announced Vision 2035 to infuse new energy into India-UK partnership.சுபான்ஷு சுக்லாவுடனான பிரதமரின் உரையாடல்
August 19th, 09:43 am
நீங்கள் அனைவரும் சிறப்பான பயணத்தை நிறைவு செய்து திரும்பியுள்ளீர்கள்…விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 19th, 09:42 am
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று புதுதில்லியில் கலந்துரையாடினார். விண்வெளி பயணத்தின் வித்தியாசமான அனுபவம் ஒருவருக்கு மாறுபட்ட எண்ணத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றும் விண்வெளி வீரர்கள் இந்த மாற்றத்தை எவ்வாறு உணர்கிறார்கள், அனுபவம் கொள்கிறார்கள் என்பது பற்றி அறிந்துகொள்ள விரும்புவதாகவும் பிரதமர் கூறினார். பிரதமருக்கு பதிலளித்த சுபான்ஷு சுக்லா, விண்வெளி சூழல் மிகவும் மாறுபட்டதாக உள்ளது என்றும், இதற்கு முக்கிய காரணம் ஈர்ப்புவிசை இல்லாததுதான் என்றும் கூறினார்.