பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்
August 15th, 03:52 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செங்கோட்டையில் 103 நிமிடங்கள் நீடித்த திரு நரேந்திர மோடியின் உரை, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக அமைந்தது. மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையாகும். பிரதமரின் உரை, தன்னம்பிக்கை, புதுமை, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரு தேசத்திலிருந்து உலகளவில் நம்பிக்கையான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக மாறும் இந்தியாவின் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 15th, 07:00 am
இந்த மாபெரும் சுதந்திர தின விழா நமது நாட்டு மக்களின் 140 கோடி தீர்மானங்களின் கொண்டாட்டமாகும். இந்த சுதந்திர தின விழா கூட்டு சாதனைகளின் தருணம், பெருமையின் தருணம். நமது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன. தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று, 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். பாலைவனங்கள், இமயமலைச் சிகரங்கள், கடற்கரைகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே எதிரொலி, ஒரே ஆரவாரம். நம் தாய்நாட்டின் புகழ், உயிரை விட நமக்கு மிகவும் மேலானது.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற 79வது சுதந்திர தினத்தின் காட்சிகள்
August 15th, 06:45 am
79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், அரசியலமைப்பு சபை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 2047க்குள் ஒரு விக்ஸித் பாரதத்தை (வளர்ந்த இந்தியா) அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா, தேசிய விளையாட்டுக் கொள்கை மற்றும் சுதர்ஷன் சக்ரா மிஷன் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 07th, 12:00 pm
புகழ்பெற்ற பிரதிநிதிகள், மதிப்பிற்குரிய விஞ்ஞானிகள், புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள நண்பர்களே,பிரதமர் திரு நரேந்திர மோடி விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில்(கிளெக்ஸ்-2025) உரையாற்றினார்
May 07th, 11:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.05.2025) காணொலிக் காட்சி மூலம் உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடான ஜிஎல்இஎக்ஸ் (GLEX) - 2025-ல் உரையாற்றினார். உலகெங்கிலும் இருந்து வந்திருந்த புகழ்பெற்ற பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களை வரவேற்ற அவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளிப் பயணங்கள் குறித்து எடுத்துரைத்தார். விண்வெளி என்பது வெறும் ஒரு இலக்கு மட்டுமல்ல எனவும், ஆர்வம், துணிச்சல், கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் பிரகடனம் என்றும் அவர் கூறினார். 1963-ல் ஒரு சிறிய ராக்கெட்டை செலுத்தியதில் இருந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறியது வரை இந்தியாவின் விண்வெளி சாதனைகள் இந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்திய ராக்கெட்டுகள் சாதனங்களை மட்டுமல்லாமல் அவை 140 கோடி இந்தியர்களின் கனவுகளையும் சுமந்து செல்கின்றன என்று அவர் குறிப்பிட்டார், இந்தியாவின் விண்வெளி முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க அறிவியல் மைல்கற்கள் எனவும் மனித உணர்வுகள் ஈர்ப்பு விசையை மீற முடியும் என்பதற்கான சான்றுகள் என்றும் அவர் குறிப்பிட்டார். 2014-ல் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்தியாவின் வரலாற்று சாதனையை அவர் நினைவு கூர்ந்தார். சந்திரயான்-1 சந்திரனில் தண்ணீரைக் கண்டறிய உதவியது என அவர் கூறினார். சந்திரயான்-2 சந்திரனின் மேற்பரப்பின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கியது என்றும் சந்திரயான்-3 சந்திரனின் தென் துருவத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா சாதனை நடவடிக்கையாக குறைந்த நேரத்தில் கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கியது எனவும் ஒரே பயணத்தில் 100 செயற்கைக்கோள்களைச் செலுத்தியது என்றும், இந்திய ஏவுதள வாகனங்களைப் பயன்படுத்தி 34 நாடுகளுக்கு 400-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தியது என்பது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய படியாகும் என்றும் இது இந்தியாவின் சமீபத்திய சாதனை எனவும் அவர் தெரிவித்தார்.இந்தியா குறித்த இந்த வாரம் உலகம்
April 22nd, 12:27 pm
ராஜதந்திர தொலைபேசி அழைப்புகள் முதல் புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்புகள் வரை, இந்த வாரம் உலக அரங்கில் இந்தியாவின் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் கலாச்சார பெருமையால் குறிக்கப்பட்டது."மூன்றாவது ஏவுதளம்" அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
January 16th, 03:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
January 16th, 01:36 pm
செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், விண்வெளித் துறையினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளிப் பயணங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று கூறியுள்ளார்.கேரள மாநிலம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 27th, 12:24 pm
கேரள ஆளுநர் திரு ஆரிப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராயி விஜயன் அவர்களே, எனது சகாவும் இணையமைச்சருமான திரு வி. முரளீதரன் அவர்களே, இஸ்ரோ குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, அனைவரும் வணக்கம்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்
February 27th, 12:02 pm
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுமார் ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் எஸ்.எல்.வி ஒருங்கிணைப்பு வசதி, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் புதிய 'செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின், நிலைப் பரிசோதனை வசதி, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 'டிரைசோனிக் காற்றியல் சுரங்கம்' ஆகியவை அடங்கும். ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த திரு மோடி, நான்கு விண்வெளி வீரர்களுக்கு 'விண்வெளி வீரர் பதக்கங்களை' வழங்கினார். குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு
August 23rd, 03:30 pm
15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் எனது அன்பு நண்பர் அதிபர் ராமஃபோசாவுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.PM Modi interacts with the Indian community in Paris
July 13th, 11:05 pm
PM Modi interacted with the Indian diaspora in France. He highlighted the multi-faceted linkages between India and France. He appreciated the role of Indian community in bolstering the ties between both the countries.The PM also mentioned the strides being made by India in different domains and invited the diaspora members to explore opportunities of investing in India.குஜராத்தின் அகமதாபாத்தில் மத்திய - மாநில அறிவியல் மாநாட்டை காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
September 10th, 10:31 am
“அறிவியல் என்ற ஆற்றல் 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் மூலை, மூடுக்கெல்லாம் வளர்ச்சியை ஏற்படுத்தும் வல்லமையை பெற்றது. நான்காவது தொழில் புரட்சியை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கான இந்தியாவின் முனைப்பு வெற்றி பெற, அறிவியல் முன்னேற்றமும் அறிவியலுடனான மக்களின் நெருக்கமும் மேலும் அதிகரிக்க வேண்டும்.. அறிவும், அறிவியலும் இணையும் போது, உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தானாகவே தீர்வு ஏற்பட்டுவிடும்.PM inaugurates ‘Centre-State Science Conclave’ in Ahmedabad via video conferencing
September 10th, 10:30 am
PM Modi inaugurated the ‘Centre-State Science Conclave’ in Ahmedabad. The Prime Minister remarked, Science is like that energy in the development of 21st century India, which has the power to accelerate the development of every region and the development of every state.பிரதமர் ஜூன் 10 அன்று குஜராத் செல்கிறர் ரூ.3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார்
June 08th, 07:23 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 10 அன்று குஜராத்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். நவ்சாரியில், காலை சுமார் 10.15 மணிக்கு ‘குஜராத் பெருமை இயக்கத்தின்’ போது பலவகையான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பார். பிற்பகல் 12.15 மணி அளவில் ஏ எம் நாயக் சுகாதார கவனிப்பு வளாகம் மற்றும் நிராலி பன்னோக்கு மருத்துவமனையை அவர் திறந்து வைப்பார். இதன் பின்னர் பிற்பகல் 3.45 மணிக்கு அகமதாபாதில் உள்ள போபாலில் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத் தலைமையகத்தை அவர் தொடங்கிவைப்பார்.தேசிய தொழில் நுட்ப தினத்தையொட்டி இந்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
May 11th, 09:29 am
நமது அறிவார்ந்த விஞ்ஞானிகளுக்கும் 1998-ல் வெற்றிகரமான பொக்ரான் அணுவெடிப்பு சோதனைகளுக்கு வழிவகுத்த அவர்களின் முயற்சிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.குஜராத்தில் 11-வது விளையாட்டு மகா கும்பமேளா தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
March 12th, 06:40 pm
குஜராத்தின் ஆளுனர் ஆச்சாரிய தேவ்வ்ரத் அவர்களே, மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான சி.ஆர்.பாட்டீல் அவர்களே, குஜராத்தின் விளையாட்டுக்கள் துறை இணையமைச்சர் திரு.ஹர்ஷ் சிங்வி அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்கள் திரு.ஹஷ்முக் பாய் பட்டேல், திரு.நர்ஹரி அமீன், அகமதாபாத் மேயர் திரு.கிரித் குமார் பார்மர் அவர்களே, இதர பிரமுகர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே!11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 12th, 06:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அகமதாபாத்தில் 11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்தியாவின் இளைஞர்கள் புதிய மற்றும் பெரிய அளவில் ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
August 29th, 11:30 am
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது நம்மனைவருக்கும் தெரியும். நமது தேசம் அவருடைய நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாளை தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவும் செய்கிறது. என் மனதில் ஓர் எண்ணம்…. ஒரு வேளை மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் இல்லையா? ஏனென்றால் உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை தியான்சந்த் அவர்களின் ஹாக்கி தான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து, பாரதநாட்டின் இளைஞர்கள், ஆடவர் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். எத்தனைப் பதக்கங்கள் கிடைத்தாலும், ஹாக்கியில் பதக்கம் கிடைக்காத வரையில் பாரத நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் முழுமையான ஆனந்தம் கிடைக்காது.விவாடெக்கின் ஐந்தாம் பதிப்பில் பிரதமரின் உரை
June 16th, 04:00 pm
பிரெஞ்ச் ஓபன் போட்டிகளை ஏராளமான இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்தனர். இந்திய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், இந்தப் போட்டிக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை அளித்தது. அதேபோல பிரான்ஸ் நிறுவனமான ஏடாஸ், இந்தியாவில் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் கேப்ஜெமினி அல்லது இந்தியாவின் டிசிஎஸ், விப்ரோ என நமது தொழில்நுட்ப திறமையாளர்கள் உலகெங்கும் உள்ள நிறுவனங்கள் மற்றும் மக்களுக்காக சேவையாற்றுகிறார்கள்.