புதுதில்லியில் நடைபெற்ற சோல் தலைமைத்துவ மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 21st, 11:30 am
பூடான் பிரதமர் எனது சகோதரர் டாஷோ ஷெரிங் டோப்கே அவர்களே, சோல் நிறுவன வாரியத் தலைவர் சுதிர் மேத்தா அவர்களே, துணைத் தலைவர் ஹன்ஸ்முக் ஆதியா அவர்களே, தொழில்துறை உலகின் ஜாம்பவான்களே, தங்கள் வாழ்க்கையில், தத்தமது துறைகளில் தலைமைப் பண்பை வழங்குவதில் வெற்றி கண்டவர்களே, இதுபோன்ற பல மகத்தான மனிதர்களை நான் இங்கு காண்கிறேன். இங்கே எனது இளம் சகாக்களையும் காண்கிறேன். அவர்களுக்கெல்லாம் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.முதலாவது சோல் (SOUL) தலைமைத்துவ மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 21st, 11:00 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சோல் (த ஸ்கூல் ஆஃப் அல்டிமேட் லீடர்ஷிப்) முதலாவது தலைமைத்துவ மாநாட்டை தொடங்கிவைத்து உரையயாற்றினார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள புகழ்பெற்ற தலைவர்களையும், எதிர்கால இளம் தலைவர்களையும் வரவேற்ற திரு மோடி, இந்த மாநாடு நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் நெருக்கமான நிகழ்வு என்று குறிப்பிட்டார். நாட்டைக் கட்டமைப்பதில் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும், ஒவ்வொரு துறையிலும் சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பயணத்தில் தலைமைத்துவப் பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று அவர் எடுத்துரைத்தார். தலைமைத்துவ பயிற்சி வழங்கும் சோல் என்பது பெயரில் மட்டும் அல்ல, இந்தியாவின் சமூக வாழ்வியலில் ஆன்மாவாக திகழும் என்று கூறினார். இந்தப் பயிற்சி நிறுவனம் ஆன்மீக அனுபவத்தின் சாராம்சத்தையும் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது என்று கூறினார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தரப்பினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் திரு மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள கிஃப்ட் நகரில் விரைவில் இந்த சோல் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளி வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.